என் புருஷன் ஓரினச் சேர்க்கையாளர்.. நீ வந்து என்னை.. ஜெனிஃபரின் கொடூர பசி.. துடிக்க துடிக்க வேட்டையாடப்பட்ட மதுரை காரர்..

மதுரையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமதுவின் வாழ்க்கை, ‘உன்னை நினைத்து’ திரைப்படத்தின் லைலா கதாபாத்திரத்தைப் போல ஒரு இளம்பெண்ணால் தலைகீழாக மாறிய கதை, இப்போது சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற பெண்ணின் திருமண ஆசைக் கனவு, ஹாரிஸுக்கு 19 லட்சம் ரூபாய் இழப்பையும், மன உளைச்சலையும் தந்து நிற்கிறது.ஹாரிஸ் முகமது, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, துபாயில் வேலை பார்த்து வந்தவர்.

வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை எதிர்பார்த்திருந்த அவருக்கு, ஒரு நண்பர் மூலம் ஜெனிஃபர் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. முதலில் நட்பாகத் தொடங்கிய உறவு, விரைவில் காதலாக பரிணமித்தது.

ஜெனிஃபர், தனது கணவர் மதுப்பழக்கத்தால் தன்னை துன்புறுத்துவதாகவும், அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் தன்னை கவனிக்கவே இல்லை என்றும் ஹாரிஸிடம் உருக்கமாகப் பேசினார். இந்த புலம்பல்கள், ஹாரிஸின் மனதில் அனுதாபத்தையும், அவர் மீது நம்பிக்கையையும் வளர்த்தன.

“நாம் இருவரும் சேர்ந்து புது வாழ்க்கையை தொடங்குவோம்,” என்று ஜெனிஃபர் உறுதியளித்தார். விவாகரத்து செய்யப்பட்ட ஹாரிஸும், தன் கணவரால் துன்புறுவதாக கூறிய ஜெனிஃபரும், ஒருவருக்கொருவர் துணையாகி, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இந்த கனவு, ஹாரிஸுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது.ஜெனிஃபரின் பெற்றோரைச் சந்தித்த ஹாரிஸ், அவர்களின் வார்த்தைகளால் மயங்கினார். “எங்க பொண்ணு எம்பிஏ படிக்க ஆசைப்படுறா. நீங்க கல்யாணம் பண்ணப் போறீங்க, அவளை படிக்க வைங்க,” என்று கூறிய அவர்கள், படிப்பு செலவுக்கு 17 லட்சம் ரூபாய் கேட்டனர்.

ஜெனிஃபர் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்த ஹாரிஸ், அந்தத் தொகையை மகிழ்ச்சியுடன் கொடுத்தார். ஆனால், இது தொடக்கமாக மட்டுமே இருந்தது. “விவாகரத்து பெறுவதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும்,” என்று கூறி, ஜெனிஃபரின் குடும்பம் ஒரு பூசாரியை அறிமுகப்படுத்தியது.

அவருக்கு 1.5 லட்சம் ரூபாய், தங்கச் சங்கிலி, பிராண்ட் வாட்ச், மோதிரம் என பல பொருட்களை ஹாரிஸ் கொடுத்தார். மதுரைக்கு வந்தபோது, வீட்டுக்குத் தேவையான கட்டில், மெத்தை, பீரோ போன்றவற்றையும் வாங்கி அமைத்தார். மேலும், ஜெனிஃபருக்கு செலவுக்கு என்று தனது ஏடிஎம் கார்டை கொடுத்து, 7 லட்சம் ரூபாய் எடுத்து செலவழிக்கப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

“விவாகரத்து வாங்கிடுறேன், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்,” என்று ஜெனிஃபர் உறுதியளித்து, ஹாரிஸை தொடர்ந்து நம்ப வைத்தார். ஆனால், திடீரென ஒரு நாள், ஜெனிஃபர் தொடர்பை முற்றிலும் துண்டித்தார். அவரது தாயிடம் விசாரித்தபோது, “ஜெனிஃபர் இறந்துவிட்டார்,” என்று கூறப்பட்டது. இது, ஹாரிஸுக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

ஆனால், உண்மை வெளிவந்தபோது, ஜெனிஃபர் சிவகங்கையில் உயிருடன் இருப்பது தெரியவந்தது.ஒட்டுமொத்தமாக, ஜெனிஃபர் மற்றும் அவரது குடும்பத்தினர், 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள், பொருட்களை மோசடி செய்ததாக ஹாரிஸ் புகார் அளித்துள்ளார்.

ஆர்.எஸ்.புரம் மற்றும் திருப்பாலை காவல் நிலையங்களில் ஜெனிஃபர், அவரது பெற்றோர் மற்றும் பூசாரி கணேசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘உன்னை நினைத்து’ படத்தில் லைலாவின் கதாபாத்திரம் மாதிரி, திருமண ஆசையைக் காட்டி ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை ஏமாற்றிய இந்தச் சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த மோசடியின் உண்மை நிலவரம், காவல்துறையின் விசாரணையில் தெரியவரும்.

Summary : Harris Mohammed from Madurai accuses Jennifer from Sivagangai of defrauding him of ₹19 lakh by promising marriage. After gaining his trust, Jennifer and her family allegedly swindled money and valuables, leading to a police complaint for fraud.