கன்னியாகுமரியில் தன் உடன் பிறந்த சகோதரியை கர்ப்பம் ஆக்கிய 16 வயது சிறுவன் போக்சோ வில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 17 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

மகள் 11ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகன் 10ம் வகுப்பு ஆன்லைன் வகுப்பு படிக்க வேண்டும் என்று கூறி செல்போன் ஒன்றை வாங்கி இருக்கிறான் 16 வயது மகன்.
ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போனை பயன்படுத்தி வந்த இந்த சிறுவன் படிப்படியாக சமூக வலைதளங்கள் மற்றும் ஆபாச வலைதளங்களுக்கு சென்று பார்க்கக் கூடாத வீடியோக்களை பார்த்து இருக்கிறான்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தை, மகன் மற்றும் மகள் வீட்டில் இருக்க, தாய் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
விடுமுறை நாட்களில் அக்கா தம்பி இருவர் மட்டுமே வீட்டில் இருப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் தன்னுடைய காம இச்சைகளை தன்னுடைய அக்காவிடமே தீர்த்துக் கொண்டிருக்கிறான்.
சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தன்னுடைய தாயிடம் அழுது புலம்பி இருக்கிறார். உடனே ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சிறுமி. பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிவித்துள்ளார்கள்.
உடனே காவல்துறைக்கும் புகார் கொடுத்திருக்கிறார்கள். விரைந்து வந்த காவல் துறையினர் அந்த சிறுமியிடம் விசாரித்ததில் இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.
படிப்புக்காக செல்ஃபோன் பயன்படுத்த தொடங்கிவிட்ட குழந்தைகள் அந்த செல்போனில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.
Summary in English : Kanyakumari Kulachal Brother Sister incident.


