சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கால்புறவு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இன்று காலை பள்ளிக்கு வந்த அவர், சகோதரர் இருசக்கர வாகனத்தில் இறக்கிவிடப்பட்ட பின்னர், எதிரே உள்ள கடைக்குச் சென்றார்.

அப்போது, முகத்தை கர்ச்சீப்பால் மறைத்த ஆறு பேர் கொண்ட கும்பல், மாணவியை காரில் தூக்கி கடத்திச் சென்றது.மானாமதுரையிலிருந்து சிவகங்கை பேருந்து நிலையம் நோக்கி காரில் கடத்தப்பட்ட மாணவி, பேருந்து நிலையம் அருகே வந்தபோது கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டு, ஓடும் காரிலிருந்து குதித்து தப்பினார்.
இதில் காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மாணவி தெரிவித்த தகவலின்படி, கடத்தல்காரர்கள் முகத்தை மறைத்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து, சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து ஆறு பேரும் தப்பிச் சென்றனர்.
மானாமதுரை காவல் நிலைய அதிகாரிகள், மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திலும், மாணவி தப்பிய இடத்திலும் சிசிடிவி காட்சிகள் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.
விசாரணை முடிவில் முழு விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary in English : A 17-year-old student from Manamadurai Government Girls’ Higher Secondary School was kidnapped by six masked men in a car. She escaped by jumping from the moving vehicle near Sivaganga bus stand, sustaining injuries. Locals rescued her and admitted her to Sivaganga Government Medical College Hospital. Police are investigating, and the culprits fled.


