திண்டுக்கல் மாவட்டம், செல்லப்புறம் பகுதியைச் சேர்ந்த பாபு (38) என்ற இளைஞர், மனைவியின் கள்ளக்காதல் மற்றும் மாமனார்-மாமியாரின் ஆதரவால் ஏற்பட்ட மன உளைச்சலால், ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்வின் பின்னணி
பாபு, டிராவல்ஸ் ஓட்டுநராகவும், பகுதி நேரமாக எலக்ட்ரிசியன் மற்றும் பிளம்பிங் வேலைகளைச் செய்து வந்தவராவார். இவருக்கு, அந்தோனி கோவில் தெருவைச் சேர்ந்த சசிரேகாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

இவர்களுக்கு 11 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. தனது மனைவி மற்றும் மகளை பாசத்துடன் பராமரித்து வந்த பாபு, அப்பகுதியில் உள்ள தொழிலதிபர் சோரன்சனின் வீட்டில் பகுதி நேர வேலை செய்து வந்தார்.
அப்போது, தனக்கு உதவியாக மனைவி சசிரேகாவையும் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது.
கள்ளக்காதல் தொடக்கம்
வேலைக்காக சென்றபோது, சசிரேகாவுக்கும், சோரன்சனின் அண்ணன் மகன் ஆதர்ஸ் ஆண்டனிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது.
ஒரு நள்ளிரவில் சசிரேகா யாருடனோ தொலைபேசியில் பேசியதை கவனித்த பாபு, "இந்த நேரத்தில் யாருடன் பேசுகிறாய்?" எனக் கேட்டபோது, "என் அம்மாவுடன் பேசுகிறேன்" என சசிரேகா பதிலளித்தார்.
ஆனால், பாபு மனைவியின் தொலைபேசியை பரிசோதித்தபோது, ஆதர்ஸ் ஆண்டனியின் எண்ணைக் கண்டு ஆத்திரமடைந்து சண்டையிட்டார்.
விவாகரத்து மனு மற்றும் மிரட்டல்
இதனால் கோபமடைந்த சசிரேகா, பாபுவுடன் வாழ விரும்பவில்லை எனக் கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விட்டு ரகசியமாக ஆதர்ஸ் ஆண்டனியுடன் உல்லாச தொடர்பு வைத்திருந்தார்.
ஆதர்ஸ் ஆண்டனியின் பணம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கும் உல்லாச உறவுக்கும் அடிமையான சசிரேகா அவருடன் விவாகரத்திற்கு முன்பே குடும்பம் நடத்தி தன்னுடைய நாட்களை உல்லாசமாக கழித்து வந்துள்ளார்.
இதை அறிந்த பாபு, மனைவியை கண்டித்தபோது, கள்ளக்காதலன் ஆதர்ஸ் ஆண்டனி பாபுவை தொலைபேசியில் அழைத்து, "சசிரேகா உன்னை விரும்பவில்லை, அவரை தொந்தரவு செய்தால் உயிருடன் விடமாட்டேன்" என மிரட்டினார்.
(புருஷனை, கள்ளப்புருஷன் போன் பண்ணி மிரட்டும் அளவுக்கு நிலைமை... கேட்டீங்களா மக்களே இந்த கூத்தை..)
மேலும், பாபு தனது மாமனார்-மாமியார் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது, அவர்கள் சசிரேகாவில் கள்ளக்காதலுக்கு பூஸ்ட் கொடுக்கும் விதமாக தன மகளுக்கு ஆதரவாக பேசி பாபுவை திட்டி அனுப்பினர்.
தற்கொலை முடிவு மற்றும் ஆடியோ பதிவு
கடந்த மூன்று வாரங்களாக மன உளைச்சலில் இருந்த பாபு, தனது மானம் மற்றும் வாழ்க்கை அழிந்துவிட்டதாக உணர்ந்தார்.
இதனால், நாயுடுபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கிய அவர், தனது தற்கொலை முடிவை நான்கு நிமிட ஆடியோவாக பதிவு செய்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பினார்.
அந்த ஆடியோவில், "நான் நல்லவனாக வாழ்ந்தேன், ஆனால் என் மனைவி சசிரேகா, ஆதர்ஸ் ஆண்டனி, மாமனார், மாமியார் திலகவதி மற்றும் சோரன்சன் ஆகியோர் என் வாழ்க்கையை அழித்துவிட்டனர்.
ஆதர்ஸ் ஆண்டனி என்னை மிரட்டி, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து என்னை தற்கொலைக்கு தூண்டினார்" என குற்றம் சாட்டியிருந்தார். இதைப் பதிவு செய்த பின்னர், பாபு அந்த அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
போலீஸ் விசாரணை
ஹோட்டல் ஊழியர் ஒருவர் முதல் மாடியில் உள்ள அறையின் ஜன்னலை சுத்தம் செய்யும்போது, பாபுவின் உடலை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பாபுவின் தொலைபேசியை ஆய்வு செய்தபோது, அவர் அனுப்பிய ஆடியோவை கண்டறிந்தனர்.
இந்த ஆடியோவை அடிப்படையாக வைத்து, சசிரேகா, ஆதர்ஸ் ஆண்டனி, மாமனார், மாமியார் திலகவதி மற்றும் சோரன்சன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மனைவியின் கள்ளக்காதல், மாமனார்-மாமியாரின் ஆதரவு மற்றும் மிரட்டல்கள் ஆகியவை பாபுவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலை என்ற முடிவுக்கு தள்ளியுள்ளது. இந்த சம்பவம், குடும்ப உறவுகளில் நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.


