கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே மேலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்-சுமதி தம்பதியின் மகள் ஸ்ரீ பவானி, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கார்த்தியை காதலித்து வந்தார்.

இருவரும் சமீபத்தில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ரகசியமாக திருமணம் செய்து, துறையூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இதனை அறிந்த ஸ்ரீ பவானியின் பெற்றோர், மகள் காணாமல் போனதாக திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்புணர்வு மனு தாக்கல் செய்தனர்.

பெற்றோர், ஸ்ரீ பவானி மற்றும் கார்த்தியை துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திக்கு திருமண வயது (21) நிறைவடையவில்லை எனக் கூறி, அவரை விடுவிக்குமாறு பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
காவல் நிலையத்தில், ஸ்ரீ பவானியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர் முயன்றபோது, அவர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த தாய் சுமதி, “நீ நல்லா இருக்க மாட்டே!” என மகளுக்கும், கார்த்திக்கும் சாபமிட்டு, மண்ணை அள்ளி வீசி கதறினார்.

இதனால் கோபமடைந்த கார்த்தி, மாமியார் சுமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சுமதியை, தந்தை சுந்தர்ராஜ் கண்ணீருடன் ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

ஸ்ரீ பவானி, தாயை உதவிக்கு கூட முன்வரவில்லை. உயர் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஸ்ரீ பவானியை அவர் பயிலும் கல்லூரி விடுதிக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம், கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Cuddalore’s Melur, Sri Bhavani, daughter of Sundarraj and Sumathi, married her lover Karthi, 19, secretly in Samayapuram. After her parents filed a habeas corpus petition, the couple was brought to Thuraiyur police station. Refusing to return home, Sri Bhavani’s mother cursed her and Karthi, who allegedly attacked his mother-in-law. Sumathi was hospitalized, and Sri Bhavani was sent to her college hostel.


