என்ன தமன்னா இது..? ஆங்கில படத்தில் பொட்டு ஆடையின்றி காட்சி.. பார்த்து கண்ணை கசக்கும் ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா, தற்போது தனது நீண்ட நாள் கனவான ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். 

தொழில்நுட்பம் மற்றும் அதனைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி உருவாகும் ஒரு கிரைம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீப காலமாக தமன்னா தனது கவர்ச்சியான நடிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார். குறிப்பாக, ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடல் மற்றும் ‘ஸ்த்ரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ பாடலில் அவரது நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பது அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.இந்த ஹாலிவுட் படத்தில் தமன்னா மிகவும் தைரியமான மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறிப்பாக, “உடம்பில் தொட்டு துணி இன்றி” சில காட்சிகளில் நடிக்கவிருப்பதாகவும், இதற்காக பெரும் தொகையை சம்பளமாகப் பெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஹாலிவுட் திரைப்படங்களில் இத்தகைய காட்சிகள் சகஜமாக இருந்தாலும், இந்த முடிவு தமன்னாவின் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமன்னா பல பேட்டிகளில், “ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை” என்று கூறியிருந்தார். 

இந்த ஆசையை நனவாக்கும் வகையில், இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக, பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் ஹாலிவுட் படங்களில் இதேபோன்ற தைரியமான காட்சிகளில் நடித்து கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், தமன்னாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. 

“பாகுபலி படத்தில் முதுகை மட்டும் காட்டிய தமன்னா, இப்போது ஹாலிவுட்டில் முழுசாக காட்டப் போகிறாரா?” என்று சில ரசிகர்கள் அதிர்ச்சியுடனும், கவலையுடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தமன்னாவின் இந்த ஹாலிவுட் பயணம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்தப் படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் உயரும் என்பது உறுதி.

Summary: Tamil actress Tamannaah Bhatia is set to fulfill her dream of acting in a Hollywood film, securing a key role in a crime thriller centered on technology-driven crimes. Known for her glamorous roles, she reportedly agreed to bold scenes, sparking mixed reactions among fans.