சூரியன் மலர்களைத் தழுவிய அழகான மாலை வேளையில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருந்தது. ஆம், கும்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு தான் அது.
2012-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் பலர் தங்களது அழகிய நினைவுகளை அசை போட வைக்கும் படம். யானைகளின் உருமாற்றமான கதை, விக்ரம் பிரபு அவர்களின் அசத்தல் நடிப்பு, லக்ஷ்மி மேனனின் அழகியல் இரண்டும் ஆஹா.
ஆனால், அனைத்திற்கும் மேலாக, டி. இமான் அவர்களின் இசை! "கையளவு நெஞ்சுக்குள்ள.. கடலளவு ஆச மச்சான்.. சொய்ங் சொய்ங்.." என்ற பாடல் ரசிகர்களின் காதில் இன்னும் ஒலிக்கிறது.

அந்த இசையும், படத்தின் பின்னணி இசையும் தான் கும்கியின் உயிர், அந்த இசை தான் படத்தை பெரிய வெற்றியாக்கியது. இமானின் மெலடிகள், ஃபோக் ரிதம்கள். அவை இல்லாமல் கும்கி படம் என்பது காட்டின் உலுக்கல் இல்லாமல் ஒரு அமைதியான வழி போல இருக்கும்.
ரசிகர்கள் தங்களுடைய போனை எடுத்து, சமூக வலைதளங்களைத் திறந்தனர். செப்டம்பர் 11, 2025 அன்று, கும்கி 2-இன் அறிவிப்பு வெளியாகியிருந்தது. "மீண்டும் பிறந்தது கும்கி" ( BORN AGAIN ) என்று தலைப்பிடப்பட்ட மோஷன் போஸ்டர், காட்டின் அழகியல் காட்சிகள், யானையின் பெரிய உருவம் – எல்லாம் மாயா ஜாலமாக இருந்தது. இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் திரும்பியிருந்தார், அது நல்ல செய்தி.

ஆனால், அடுத்து வந்த தகவல் அவன் மனதை உலுக்கியது. இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா! ஆம், டி. இமான் இல்லை.
இமான் இல்லையா?!ரசிகர்களின் கண்கள் விரிய, அவர்கள் கதற தொடங்கினார்கள். "இது என்ன? கும்கியின் இதயத்தை யார் பறித்துவிட்டார்கள்?" அவன் உடனடியாக தன் நண்பர்களுக்கும் செய்தி அனுப்பினான்.
சமூக வலைதளங்களில் ஏற்கனவே கோபத்தின் அலைகள் எழுந்திருந்தன. ஒரு ரசிகர் எழுதினார்: "கும்கி என்றால் இமான்! அவரது இசை இல்லாமல் கும்கி 2 என்பது உயிரில்லா உடல். இது ஏற்கத்தக்கதல்ல!"

மற்றொருவர்: "முதல் படத்தின் வெற்றியின் ரகசியம் இமானின் மெலடிகள். அவற்றை மாற்றினால், ரசிகர்கள் ஏன் படம் பார்க்க வேண்டும்?" ஹேஷ்டேக் #ImmanForKumki2 ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள், கும்கியின் இசையைத் தங்கள் வாழ்க்கையின் பகுதியாகக் கருதியவர்கள், கடுமையாக விமர்சித்தனர்.
கும்கி படம் வெளியானபோது, இமானின் இசை எப்படி படத்திற்கு உயிர் கொடுத்தது? "அய்யயோ ஆனந்தமே" என்ற பாடல் காதலின் இனிமையைப் பாடியது, "சொல்லிட்டாலே அவ காதல" என்றது உணர்ச்சியைத் தூண்டியது.

அவ சொன்ன சொல்லே போதும்.. அதுக்கீடே இல்ல ஏதும்.. என நாயகன் தன்னுடைய ஒட்டுமொத்த உணர்ச்சியையும் இமானின் இசை வழியாகவே ரசிகர்களின் இதயத்துக்கு கடத்தினான். அந்தப் படம் வெற்றி பெற்றது, இமான் அவர்களுக்கு பல விருதுகள் கிடைத்தன – ஃபிலிம்ஃபேர், தமிழ்நாடு அரசு விருது.
ஆனால் இப்போது, இரண்டாம் பகுதியில் அந்த மந்திரம் மாற்றப்பட்டிருக்கிறது. "நிவாஸ் கே. பிரசன்னா நல்ல இசையமைப்பாளர், ஆனால் கும்கிக்கு இமான் தான் தேவை!" என்று ரசிகர்கள் தங்கள் போஸ்ட்டில் எழுத தொடங்கினார்கள். அவை வைரலானது.
காட்டின் ஆழத்தில், யானை ஒன்று உருமாற்றம் செய்து கொண்டிருந்தது – அது போலவே, ரசிகர்களின் எதிர்ப்பும் வளர்ந்து கொண்டிருந்தது.ஆனால், அவர்கள் கொண்டாட வேண்டிய அறிவிப்பு, கோபத்தின் கதையாக மாறியது.
காரணம் ஒன்று மட்டும் தான், ஆம், இசையின் உயிர்ப்பு மாற்றம். கும்கி 2 உருவாகும் போது, இமானின் இசை திரும்ப வருமா? ரசிகர்களின் குரல் கேட்கப்படுமா? என கேள்வி.

ரசிகர்கள் போனை மூடி, கும்கியின் காட்டைப் பார்க்கிறார்கள்... கண்களில் நீர் ததும்ப தன்னுடைய மாணிக்கத்தை மட்டுமில்லாமல் தன்னுடைய அல்லியின் காதலியில் பரிகொடுத்துவிட்டு.. மதம் புடிச்சி இருந்தது.. உனக்கில்லடா மாணிக்கம்.. எனக்கு தான்.. நான் ஏன் அல்லி உன்ன பாத்தேன் என இதயம் நொறுங்க நடை பிணமாக நகர்ந்த நாயகனை பார்க்கிறார்கள்..
அங்கே, நாயகன், நாயகி இருவரின் நிறைவேற காதலால்.. நிரம்பி வழிந்த அவர்களின் கண்கள் போல.. இமான் வேண்டும் என்ற ரசிகர்களின் அழைப்பும் யூட்யூப் கமெண்டுகளில் நிரம்பி வழிகிறது "கும்கி 2-க்கு இமான் இசை வேண்டும்!"




