கரூர், செப்டம்பர் 30, 2025 : கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தை அடுத்து, தனது கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் திட்டமிடப்பட்டிருந்த பரப்புரை கூட்டங்களுக்கு முன் அனுமதி கோர வேண்டாம் என்று அவர் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் மறு அறிவிப்பு வரும் வரை, பரப்புரை தொடர்பான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டாம் மற்றும் காவல்துறையிடம் முன் அனுமதி கடிதம் அளிக்க வேண்டாம் என விஜய் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
இந்த முடிவு, கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : Following a tragic incident in Karur, Vijay has instructed party officials not to seek permissions for campaign meetings. Planned rallies in Vellore and Ranipet are on hold, with no preparations or police approvals to be sought until further notice from the party.

