‘துப்பாக்கிய திருப்பி குடுத்துடுங்க சிவா!’ “மதராஸி” படம் எப்படி இருக்கு..? படம் பார்த்தவர்கள் என்ன சொல்றாங்க? விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்கள் உண்டு. அப்படியான ஒரு படமாக ‘மதராசி’ உருவாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வித்தியாசமான கூட்டணியுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்களுக்கு பிரமாண்டமான திரை அனுபவமாக இருக்கப் போகிறது.

சமீபத்தில் வெளியான ப்ரோமோ மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிவகார்த்திகேயனின் தீவிரமான அவதாரம்

‘SK 23’ என்ற தற்காலிக தலைப்புடன் தொடங்கப்பட்ட ‘மதராசி’, சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் AR முருகதாஸுக்கும் முதல் முறையாக இணைந்த படமாகும்.

இதில் சிவகார்த்திகேயன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல், ஆக்‌ஷன், உணர்ச்சி, மற்றும் திருப்பங்களுடன் கூடிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். ‘மதராசி’ படத்தில் அவர் வெறும் கதை சொல்பவர் மட்டுமல்ல, கதையின் உணர்ச்சிகளை தாங்கி நிற்கும் முக்கிய தூணாகவும் இருப்பார்.

AR முருகதாஸின் பிரமாண்ட கம் பேக்

AR முருகதாஸின் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இயக்கும் இப்படம், 2020இல் வெளியான ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்திற்கு பிறகு அவரது மறுவரவாகும். ‘தர்பார்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ‘மதராசி’யில் மாஸ், உணர்ச்சி, மற்றும் சமூகக் கருத்துக்களை தனது பாணியில் கலந்து ஒரு சிறப்பான கதையை உருவாக்கியுள்ளார்.

“முருகதாஸ் மறுவரவு” என்ற வார்த்தையே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான நடிகர்கள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம்

ருக்மிணி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்க, விட்யுத் ஜம்வால், பிஜு மேனன், மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வலுவான துணை நடிகர்கள் குழு படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் வெளியாகாத ஒரு ஆச்சர்ய காரணி யார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

‘மதராசி’ வெறும் வணிக பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல, சமூக கருத்துக்களை உள்ளடக்கிய செறிவான கதைக்களத்தைக் கொண்டது. இதனால், இப்படம் சிந்தனையைத் தூண்டுவதாகவும், உற்சாகமளிப்பதாகவும் இருக்கும்.

அனிருதின் இசை மாயாஜாலம்

‘மதராசி’யின் மற்றொரு பலமாக அனிருத் ரவிச்சந்தர் உள்ளார். அவர் இசையமைக்கும் எந்தப் படமும் ரசிகர்களுக்கு மாயாஜால அனுபவத்தை அளிக்கிறது.

‘மதராசி’ படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒளிப்பதிவை சுதீப் இளமோன் கையாண்டுள்ளார், மற்றும் படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொண்டுள்ளார், இவர் முருகதாஸுடன் நீண்ட கால உறவைக் கொண்டவர்.

பெரிய பட்ஜெட், உயர் எதிர்பார்ப்பு

‘மதராசி’ ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகவும், சிவகார்த்திகேயனுக்கு ரூ.40 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியீட்டுக்கு முன்பே இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வியாபாரம் செய்து, தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது. இந்த ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படம் U/A சான்றிதழ் பெற்று, 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் நேரத்துடன், சிவகார்த்திகேயன் மற்றும் AR முருகதாஸிடமிருந்து ஒரு சிறப்பான, திடமான படமாக இருக்கும்.

300 கோடி வசூலித்த ‘அமரன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மீண்டும் பெரிய திரையில் திரும்புவதால், ‘மதராசி’யின் வசூல் குறித்து வணிக நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். இப்படம் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?

தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் குழப்பம் அடைந்த நிலையில் அமைதியை இழந்து நிற்கும் கதாநாயகன் ஒரு பக்கம் காவல்துறை மறுபக்கம் ஆபத்தான ஆயுத கடத்தல் கும்பல் இடையே சிக்கிக் கொள்கிறான்.

இது போதாதென்று, தன்னை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்க தேவையான ஒரு விஷயத்தை கண்டுபிடித்தாக வேண்டிய சூழ்நிலையில் சிக்கி விடுகிறான் கதாநாயகன்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை. காவல்துறை ஏன் கதாநாயகனை துரத்துகிறது. உலகின் அதிபயங்கரமான ஆயுத கடத்தல் கும்பல் ஏன் கதாநாயகனுக்கும் என்ன சம்பந்தம். ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்க தேவையான அந்த ஒரு விஷயம் என்ன..? தன்னை சுற்றி நடந்த எந்த விஷயத்தால் கதாநாயகன் அமைதியை இழந்தார்..? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக படம் உருவாகி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இந்த படத்தைப் பார்த்த பிரபலங்கள் சிலர் தங்களுடைய கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் பெருவாரியான பிரபலங்கள் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கிறது என்றும் இன்னும் சிலர் சிவகார்த்திகேயன் மாஸ் பண்ணி இருக்கிறார். விஜய் மீண்டும் துப்பாக்கியை திருப்பி குடுத்துடுங்க சிவா என்று கேட்காமல் இருந்தால் போதும் என்று சிவகார்த்திகேயனின் மிரட்டல் அவதாரத்தை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

படம் நிஜமாகவே எப்படி இருக்கிறது..? என்ற முழு விமர்சனத்தை விரைவில் நம்முடைய தமிழகம் தளத்தில் பார்க்கலாம்.

Summary in English: A confused hero, caught between the police and a dangerous arms smuggling gang, must uncover a critical secret to protect the nation. The film answers why he’s chased, his link to the gang, and the nation-saving secret. Celebrities praise its gripping narrative and Sivakarthikeyan’s intense performance.