பாத்ரூமில் தவெக பெண் நிர்வாகி செய்த அசிங்கம்.. வைரலாகும் வீடியோ..

கன்னியாகுமரி: வக்கீலாக பணிபுரியும் விஜயகுமார் (28) வீட்டில், சட்டக் கல்லூரி மாணவியான அர்ஷிதா (23) 11 சவரன் நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புலியூர்சாலை ஊராட்சியின் இணை செயலாளராக பொறுப்பு வகிக்கும் அர்ஷிதா, விஜயகுமாருடன் நட்பு கொண்டிருந்தார்.

விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த அர்ஷிதா, பாத்ரூமை பயன்படுத்துவதாக கூறி உள்ளே சென்று, 11 சவரன் நகையை திருடி தப்பிச் சென்றார். இதனை அறிந்த விஜயகுமார், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அர்ஷிதாவை கைது செய்து, திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Summary : In Kanniyakumari, Arshitha, a 23-year-old law student and deputy secretary of Puliyursaalai Panchayat, stole 11 sovereigns of jewelry from lawyer Vijayakumar’s house under the pretext of using the bathroom. Following Vijayakumar’s complaint, police arrested Arshitha and recovered the stolen jewelry. Investigation is ongoing.