மதுரையின் வண்டியூர் பகுதியில், நள்ளிரவின் அமைதியை கலைத்தது ஒரு அலறல் சத்தம். அவலை கிராமத்தின் தெருக்களில் எதிரொலித்த அந்த கூக்குரல், அரவிந்தின் வீட்டிலிருந்து வந்தது.
அக்கம் பக்கத்து மக்கள் திடுக்கிட்டு எழுந்து, வீட்டை நோக்கி ஓடினர். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே, ரத்த வெள்ளத்தில் அரவிந்த் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவன் தலை நசுங்கி, வலியால் துடித்துக் கொண்டிருந்தான். "யாரு இப்படி செஞ்சது?" என்று கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அந்த நேரத்தில், ஒரு பெண்ணின் உருவம் அலறியடித்து வீட்டை விட்டு தப்பி ஓடுவதை அவர்கள் பார்த்தனர். "அவதான்... அவளைப் பிடிங்க!" என்று சிலர் கத்தினர்.
ஆனால், இருள் அவளை மறைத்து விட்டது. கிராம மக்கள் உடனே ஆம்புலன்ஸை அழைத்து, அரவிந்தை மருத்துவமனைக்கு அனுப்பினர். அவனது நிலை கவலைக்கிடமாக இருந்தது.
போலீஸ் விரைந்து வந்தது. "யார் இதை செஞ்சது? எதுக்கு?" என்று கிராம மக்களிடம் விசாரித்தனர். "அரவிந்தோட காதலி... அவள்தான் ஓடினா. அவளைப் பிடிச்சா உண்மை தெரியும்," என்று மக்கள் கூறினர்.
அந்தப் பெண்ணின் பெயர் பூபதி. (சரியா தான் படிச்சீங்க.. பூபதி என்பது தான் அந்த பெண்ணின் பெயர்) போலீஸ் அவளது செல்போன் எண்ணை வாங்கி, சிக்னலை டிரேஸ் செய்தது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் சிக்கிய பூபதி, காவலில் பிடிபட்டாள்.
பின்னணி
அரவிந்த், மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி. மனைவியுடனான கருத்து வேறுபாட்டால், குழந்தைகளுடன் வண்டியூரில் தனியாக வசித்து வந்தான். அங்கு, மணிகண்டன் என்ற நண்பனைச் சந்தித்தான். இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.
ஒன்றாக வேலைக்கு செல்வது, ஊர் சுற்றுவது, விடுமுறை நாட்களில் தனிமையில் உல்லாசமாக இருப்பது என்று அவர்களின் நட்பு வலுவானது. ஆனால், அரவிந்த் அடிக்கடி மணிகண்டனின் வீட்டிற்கு சென்று வந்ததால் மணிகண்டனின் மனைவி பூபதியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பழக்கம், விரைவில் தகாத உறவாக மாறியது. மணிகண்டன் வீட்டில் இல்லாத போது அவரது வீட்டிலேயே பூபதியின், அரவிந்த்தும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில், மணிகண்டனுக்கு இது தெரியவந்தபோது, அவன் மனைவியை கடிந்தான். "இப்படி செய்யாதே, குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும்," என்று கெஞ்சினான்.
ஆனால், பூபதி கேட்கவில்லை. மனமுடைந்த மணிகண்டன், பூபதியின் அண்ணன் வாசுதேவனிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதான். பூபதியைப் பிரிந்து, குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கினான்.
வாசுதேவன், அரவிந்தை எச்சரித்தான். "என் தங்கையை விடு. இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவேன்," என்று மிரட்டினான். இந்த முன்விரோதம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உச்சத்தை அடைந்தது.
அரவிந்த், தன்னுடைய கள்ளக்காதலி பூபதியின் அண்ணன் வாசுதேவனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று, சிறையில் அடைக்கப்பட்டான். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவன், பூபதியுடன் இணைந்து பாத்திரக் கடை நடத்தி வந்தான்.
ஆனால், பூபதிக்கு அசோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞனுடன் புதிய பழக்கம் ஏற்பட்டது. அரவிந்திற்கு தெரியாமல் அசோக்குடன் உல்லாசமாக இருந்து வந்தாள் பூபதி. இதை அறிந்த அரவிந்த் ஆத்திரமடைந்தான்.
மணிகண்டனை ஏமாற்றி விட்டு என்கிட்டே வந்த, இப்போ என்னையும் ஏமாற்றிவிட்டு இன்னோருத்தன் கூட போறியா..? என்று கூறி, பூபதியை திட்டினான். ஆனால், பூபதி அதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தன்னுடைய உடல் பசிக்கு அசோக்கை தீனி போட வைத்தாள். இதனால், இருவருக்கும் இடையே பகை உருவானது.
சம்பவ நாள்
அந்த இரவு, அரவிந்த் முழு போதையுடன் வீட்டுக்கு வந்தான். பூபதியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தான். கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தான். பின்னர், தனது அறையில் படுத்து உறங்கிவிட்டான்.
கோபத்தில் கொதித்த பூபதி, வெளியில் கிடந்த கல்லை எடுத்து, உறங்கிக் கொண்டிருந்த அரவிந்தின் தலையில் வீசினாள். வலியால் அலறிய அரவிந்த், ரத்த வெள்ளத்தில் துடித்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பூபதி தப்பி ஓடினாலும், போலீஸ் அவளை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம் அருகே வைத்து பிடித்து, சிறையில் அடைத்தது. அரவிந்தின் உயிருக்கு போராட்டம் தொடர்கிறது.
இப்போது, முதல் கணவன் மணிகண்டன் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்..? பூபதியின் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்..? உடலின் தேவையை கட்டுப்படுத்த தெரியாமல் இப்படி சிறைக்கைதியாக மாறியுள்ள பூபதியின் நிலையை ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு புலப்படும்.
ஏனென்றால், குடும்பங்களின் கூட்டமைப்பே சமுதாயம்.. நல்ல சமுதாயம் வேண்டுமெனில், நல்ல குடும்பம் வேண்டும்.
தகாத உறவு, குடும்ப பிரச்சனைகள், முன்விரோதம் என பல சிக்கல்களால் நிகழ்ந்த இந்தச் சம்பவம், கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "இப்படியொரு கதையை எப்படி மறப்பது?" என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
போலீஸ் விசாரணை தொடர்கிறது. உண்மையின் முழு பரிமாணமும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


