திருவண்ணாமலை: ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலத்திற்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் உகந்த நேரத்தை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1:46 மணிக்கு (6-ம் தேதி நள்ளிரவுக்கு பின்) பவுர்ணமி தொடங்கி, அன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நிறைவடையும்.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த மாத பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வருவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கிரிவலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Summary : The Tiruvannamalai temple administration has announced the auspicious time for the Avani month Pournami Girivalam on September 7, starting at 1:46 AM and ending at 12:30 AM. With the event on a Sunday, lakhs of devotees are expected, and the district administration is arranging facilities.

