கேரளம் : கண்ணூரின் அமைதியான தெருக்கள், மாலை ஐந்து மணியளவில் சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், மூன்று பள்ளி மாணவிகள் – கீர்த்திகா மேனன், ஜெனிஃபர், சங்கீதா – தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கீர்த்திகாவின் அம்மா, சமையலறையில் இருந்து சிரித்துக்கொண்டே கேட்டார், "எங்கமா கிளம்பிட்ட?" "மா.. ஜெனிஃபர் பிறந்தநாள் பார்ட்டிக்கு போறேன் சீக்கிரமா வந்துடுறேன்," என்று கீர்த்திகா பொய் சொல்லி, சிரித்தபடி வெளியேறினார்.

ஜெனிஃபர், "தோழியின் அக்காவுக்கு திருமணம், போய் வாழ்த்திட்டு வரேன்," என்று அப்பாவிடம் சொன்னார். சங்கீதா, "தோழியுடன் படிக்கப் போகிறேன், ஏழு மணிக்கி வந்துருவேன்" என்று அம்மாவை ஏமாற்றினார். பெற்றோர்கள் நம்பினர். அது அவர்களின் முதல் தவறு.
அந்த மூன்று பெண்களும், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று ஆண் நண்பர்களிடம் சென்றனர் – அசோக், வருண், அக்பர் அலி. இந்த மூன்று பேரும் அதே பள்ளியின் மாணவர்கள். கீர்த்திகாவை அசோக் காதலித்தான். ஜெனிஃபரை வருண். சங்கீதாவை அக்பர் அலி. நான்காவதாக. ஜான் விக்டர் என்பவன் அனைவருக்கும் நிழல் போல் இருந்தான். ஆரம்பத்தில், அது தூய்மையான காதல்தான். போனில் உரையாடல்கள், தெருக்களில் சிரிப்புகள் என மலர்ந்தது.

ஆனால், அந்த 'காதல்' மெல்ல போதைப்பொருள்களின் நிழலில் மாறியது. முதலில் மது. பிறகு புகை. அடுத்து கஞ்சா. ஒரு இரவு, அசோக் கீர்த்திகாவிடம் சொன்னான், "இது உன்னை இன்னும் மகிழ்சியாக்கும், ஒரே ஒரு இழு தான்.. ட்ரை பண்ணு." அவள் ஏற்றுக்கொண்டாள்.
விரைவில், மூன்று பெண்களும் அடிமையானார்கள். உலகம் விட்டு உலகம் செல்லும் அனுபவம், அவர்களை சுற்றி சுழன்றது. "இதுதான் நம்மோட சுதந்திரம்," என்று அவர்கள் சிரித்துக்கொண்டே, இரவுகளை உல்லாசமாகக் கழித்தனர்.

ஆனால், மூன்று மாணவர்களும், போதையில் ஒரு கொடூர திட்டத்தை தீட்டினர். நாம இத்தன நாளா தனித்தனியாகவே காதலிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளோம். ஒரு நாளாச்சும், "அவங்களை ஒரே இடத்துக்கு அழைச்சு, போதை ஏத்தி... எல்லாரும் சேர்ந்து ஜாலியா இருப்போமா..." என்ற பேச்சு ஆரம்பித்தது. இந்த திட்டத்தை பற்றி பேசியதும் மூன்று பேரும் கண்டிப்பாக என்று சிரித்தனர். அது அவர்களின் 'உச்சமான' திட்டம்.
அந்த திட்டத்தை அரங்கேற்றும் நாள் வந்தது. அன்று, ஜான் விக்டரின் பிறந்தநாள். " ஜான் விக்டர் பார்ட்டி குடுக்குறான்.. பார்ட்டி கொண்டாடலாம், வாங்க! சூப்பர் சர்ப்ரைஸ் இருக்கு," என்று ஆசை வார்த்தைகளால் மூன்று மாணவிகளையும் நகரின் விளிம்பில் உள்ள, இன்னும் கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தின் நான்காவது தளத்திற்கு அழைத்து சென்றனர்.

"இங்க தான் பார்ட்டி, ரொம்ப ஸ்பெஷல்," என்று சொல்லி, அவர்களை உள்ளே அழைத்து சென்றனர். மூன்று மாணவிகளும், இது என்ன இடம்.. பயமா இருக்குடா.. வேற எங்கயாச்சும் போலாம்.. என சிணுங்கினார்கள். நாங்க இருக்கும் போது என்ன பயம்.. அரை மணி நேரம் தான்.. நீங்க கிளம்பிடலாம், என்று நம்பிக்கை சொல்லி, போதை மருந்துகளை அவர்களிடம் அளித்தனர்.
கீர்த்திகா, ஜெனிஃபர், சங்கீதா – அவர்கள் மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்தனர். உலகம் சுழன்றது. காற்றில் பறப்பது போன்ற உணர்வில் திளைத்தனர். மூணு பேரும் ட்ரிப்புக்கு கிளம்பிட்டீங்களா..? என்று கேட்டு சிரித்தான் வருண்.
அவ்வளவு தான்.. மூன்று காதலர்களும் ஜான் விக்டருக்கு தங்களுடைய காதலிகளை பரிசாக கொடுத்தனர். ஜான் விக்டர் வேலையை தொடங்க.. டே.. கிட்ட வராதடா.. போ.. என மாணவிகள் திமிறினர். ஆனால், ஒரு கட்டத்தில் தங்களை இழந்த மாணவிகளை நான்கு பேரும் சேர்ந்து விடிய விடிய சிரழித்தனர்.வலிக்குது டா விடுங்க டா.. என மாணவிகள் மயக்கத்திலும் புலம்பினர். ஆனால், இரவின் இருள், அவர்களின் சிரிப்புகளை மட்டுமே கேட்டது.

கட்டிடத்தின் காற்றில், புகை மற்றும் மது வாசம் கலந்தது.மறுபக்கம், மாணவிகளின் வீடுகளில் பதட்டம் சூழ்ந்தது. இரவு 10 மணி. கீர்த்திகாவின் அம்மா, தொலைபேசியைப் பிடித்துக்கொண்டு அழுதார். "எங்க பொண்ணு போயிட்டா?" ஜெனிஃபரின் அப்பா, தெருக்களைத் தேடினார். சங்கீதாவின் பெற்றோர்கள், அண்டை வீடுகளை அடித்து கேட்டனர். இல்லை. எங்கும் இல்லை.
காவல்நிலையத்திற்கு ஓடினர். போலீஸார், செல்போன் ரெகார்டுகளை ஆராய்ந்தனர். கடைசி சிக்னல் – பய்யம்பாலம் அருகே ஒரு பகுதி. கீர்த்திகாவின் கால் ஹிஸ்ட்ரியை பார்த்த போலீசார் அசோக்குடன் அடிக்கடி பேசியிருப்பதை உறுதிபடுத்தினர்.
"அசோக் யாரு?" என்று கேட்டது போலீஸ், என் பொண்ணோட ஃப்ரெண்ட் என்றனர் பெற்றோர்கள். உடனே, போலீஸ் அவன் வீட்டிற்கு சென்றது. அசோக் பெற்றோர்களை விசாரித்து, அவனுக்கு போன் செய்யச் சொன்னது.
அசோக் எங்கப்பா இருக்க.. இன்னும் ஆளை காணோம்.. என்ற அம்மாவிடம்.. மா.. நான் பய்யப்பாலத்துகிட்ட தான் இருக்கேன்.. இதோ வந்துடுறேன்.. என்று இருப்பிடத்தைச் சொன்னான்.

"அந்த கட்டிடம் தான்!" தேடுதல் வேட்டை தொடங்கியது. அதிகாலை 3 மணி. இருட்டில், போலீஸ் கார்கள் ஓடின. CCTV கேமராவில் சிக்கிய காட்சி போலீசாரை பகீர் ஆக்கியது. ஆம், நான்கு மாணவர்களுடன், மாணவிகள் அந்த கட்டி முடிக்கப்படாத கட்டிடம் இருக்கும் பகுதி நோக்கி நடந்து செல்கின்றனர். கவனத்தை அந்த கட்டடத்தின் மீது போலீசார் திருப்பினர். நான்காவது தளத்தில் இருந்து, மெல்லிய வெளிச்சமும் புகையும் தெரிந்தது. ஓடினர்.
இரண்டு மாணவர்கள் – வருணும் அக்பர் அலியும் – நின்றிருந்தனர். "என்னடா இங்க பண்றீங்க?" என்று அழைத்ததும், பயந்து ஓடினர். துரத்தி, பிடித்து, விசாரித்தனர். "சார் சார்.. விட்ருங்க டார்.. மேலே... நாலாவது மாடி..." என்று சொன்னார்கள்.
போலீஸ் ஓடியது. அங்கே... அதிர்ச்சி. மூன்று மாணவிகளும், உடல் முழுவதும் ஆடைகள் இன்றி, மயக்கத்தில் படுத்திருந்தனர். கீர்த்திகாவின் கண்கள் மூடியிருந்தன. ஜெனிஃபரின் உடல் நடுங்கியது. சங்கீதா, மெல்ல முனகினாள். போலீஸார் தட்டி எழுப்ப முயன்றனர். பலன் இல்லை. பெற்றோர்களை அழைத்தனர். அம்மா-அப்பா ஓடி வந்து, குழந்தைகளை அணைத்துக்கொண்டு அழுதனர்.

நால்வர் – அசோக், வருண், அக்பர் அலி, ஜான் விக்டர் – கைது. காவல்நிலையம், விடியற்காலையில் களேபரமானது. கண்ணீர் வெள்ளம். கோபம். குற்ற உணர்வு. மாணவர்களின் பெற்றோர்கள், "எங்க புள்ளைங்க நல்ல புள்ளைங்க தான்! இவளுங்க தான் எங்க பிள்ளைகளை கெடுத்துட்டாலுங்க!" என்று மாணவிகளின் பெற்றோர்களை வசைபாடினர். காது கூசும் வார்த்தைகள், காற்றில் எதிரொலித்தன.
சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு நால்வரும் அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று பெண்களும், கடுமையாக எச்சரிக்கப்பட்டு, பெற்றோர்களுடன் அனுப்பப்பட்டனர்.
போலீஸ் அதிகாரி, அனைவரையும் பார்த்து சொன்னார், "பெண் குழந்தைகளைப் பெற்றால், அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், அவர்களுடைய நடவடிக்கைகள் என்ன என்பதை கண்காணிக்க வேண்டும். செல்போன்களை சரியாகப் பயன்படுத்துகிறார்களா என உறுதிப்படுத்த வேண்டும். அது உங்கள் கடமை."அந்த நாள் முதல், கண்ணூரின் அந்த தெருக்கள் மாறின.

கீர்த்திகா, ஜெனிஃபர், சங்கீதா – அவர்கள் வீடுகளில் அமர்ந்து, கண்ணீருடன் தங்கள் தவறுகளை சிந்தித்தனர். போதை, காதல், கொடுமை... அது அவர்களின் வாழ்க்கையை சீரழித்தது. ஆனால், அந்த இருண்ட இரவு, ஒரு பாடம்.
சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த இதே போன்ற சம்பவம் போல், இதுவும் பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை தான்.
வாழ்க்கை என்ற வெயிலில், காதல் என்ற பெயரில் வரும் நிழல், சில நேரங்களில் வாழ்க்கையை முழுவதையும் மறைக்கும் இருளாகவும் மாறலாம் என்பதற்கு இது ஒரு சான்று.
பெற்றோர்கள், குழந்தைகள்... அனைவரும் கேளுங்கள்: அன்பு, பாசம், நேசம், இதையெல்லாம் விட கண்காணிப்பும், கண்டிப்பும், உரையாடல்களும் முக்கியம்.
குறிப்பு : மாணவர்களின் எதிர்காலம், நலன் கருதி சம்பவம் நடந்த இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
Summary : In Kannur, three schoolgirls—Keerthika, Jennifer, and Sangita—lied to their parents and sneaked out for a "party," only to fall into a trap set by four male classmates: Ashok, Varun, Akbar Ali, and John Victor. Lured to an unfinished building, they were drugged and gang-raped overnight. Police rescued them at dawn after a frantic search, arresting the boys. The incident highlights parental vigilance amid rising teen drug abuse and exploitation.

