சென்னை, அக்டோபர் 14: தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சந்திக்க வருகிறார்.
இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்தன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்துள்ளார்.கரூர் மாவட்டச் செயலாளர் ஏற்கனவே விஜயின் வருகைக்கான அழைப்பிதழை வழங்கிய நிலையில், அக்டோபர் 17 அன்று விஜய் கரூரை அடையவுள்ளனர்.

இந்தப் பயணத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள, உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் இக்குழு செயலாற்றும். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரே அரங்கில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஈரோடு, சென்னை, அரியலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள், வழக்கறிஞர் பிரிவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கட்சியின் பனையூர் தலைமை அலுவலகத்தில் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தப் பேரவலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் ஆறுதல் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளிக்கவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்த ஏற்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக மேலும் விவரங்களை எங்கள் செய்தியாளர் யுவராஜ் அளித்துள்ளார்.
English Summary :Actor-politician Vijay, TVK chief, has formed a 10-member committee led by General Secretary N. Anandhan to arrange his October 17 visit to Karur. The trip aims to meet families of 41 victims who died in a September 27 stampede during a TVK rally. The team, including district secretaries from Erode, Chennai, Ariyalur, Coimbatore, and key lawyer wing officials, will ensure security, food, and logistics for a safe, unified meeting without incidents.
