7 வருடம் கழித்து நாடு திரும்பிய கணவர் அதிர்ச்சி.. 6 மாசம் கர்ப்பம்.. ஊரையே ஏமாத்திய கேடி மனைவி..

தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் பகுதியில், பசுமையான வயல்களால் சூழப்பட்ட வழுதூர் கிராமம். அங்கு, ஒரு சாதாரண இளைஞன் ராஜா கண்ணன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து, வாழ்க்கையின் அடுத்த படியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

2013-ஆம் ஆண்டு, அந்தப் படிப்பின் போது, அவரது வகுப்பில் இருந்த கீர்த்தனா என்ற அழகியைச் சந்தித்தான். அது காதல் – தூய்மையான, உண்மையான காதல். விரைவிலேயே அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல், அந்தக் காதலுக்கு அடையாளமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ராஜா கண்ணன், தந்தையான மகிழ்ச்சியில் மூழ்கினான். ஆனால், வாழ்க்கை எப்போதும் இனிப்பான கனவுகளால் மட்டும் இல்லை தானே.

ஆம், குழந்தை பிறந்த சில மாதங்களில், பொருளாதாரப் பிரச்சினைகள் தொடங்கின. வேலை இழப்பு, கடன் சுமை – அனைத்தும் ராஜா கண்ணனை சோர்வடையச் செய்தன. உறவினர் ஒருவரின் ஆலோசனையில், அவன் குவைத் நாட்டிற்குச் செல்ல முடிவு செய்தான்.

அங்கு, ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் சமையல் மாஸ்டராக இடம்பெற்றான். அவனது சமையல் பக்குவம், ஹோட்டலின் பெயரை உலகம் அறியச் செய்தது. சம்பளம் அதிகரித்தது, பாராட்டுகள் பொழிந்தன. "இது என் குடும்பத்துக்காக," என்று நினைத்து, அவன் சம்பாதித்த பணத்தை முழுவதுமாகவும் கீர்த்தனாவுக்கு அனுப்பினான்.

நிலம் வாங்கி, புதிய வீடு கட்டும் அளவுக்கு அது போதுமானது. கிரகப்பிரவேசம் 2023-இல் நடந்தது – ஆனால் ராஜா கண்ணன், வேலை அழுத்தத்தில் வர முடியவில்லை. அவன் குழந்தையை வீடியோ காலில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏழு ஆண்டுகள் – அது அவனுக்கு ஒரு நீண்ட கனவு போன்றது.கடைசியாக, 2025-இல், பல கனவுகளுடன் சொந்த ஊருக்கு திரும்பினான் ராஜா கண்ணன். "இப்போது சுகமாக வாழலாம்," என்று நினைத்தான். ஆனால், அவனது காதல் மனைவி கீர்த்தனா கொடுத்த பரிசு, கொடூரத்தின் உச்சம்.

ஆறு மாதங்களுக்கு முன், குழந்தையின் பள்ளி விடுமுறைக்காக "தாய் வீட்டுக்கு போகிறேன்," என்று சொல்லி, அவள் தோழியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். ஆனால், மாமியாரிடம், ஊர் உறவினர்களிடமும் "கணவரைச் சந்திக்க குவைத் போகிறேன்," என்று பொய் சொல்லி, ஊரை விட்டு மறைந்தாள்.

சில நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய கீர்த்தனா, "நான் கர்ப்பமாக இருக்கிறேன்," என்று சொன்னாள். ஊர் மக்கள், உறவினர்கள், மாமியார் – அனைவரும் குதூகலித்தனர். "இது ராஜாவின் இரண்டாவது குழந்தைதான்," என்று நம்பினர்.

ஆனால், கீர்த்தனா, தான் கர்ப்பமாக இருப்பது குறித்து ராஜாவிடம் ஒரு சொல்லும் சொல்லவில்லை.நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள், வீடியோ காலில் தாயிடம் எதிர்ச்சியாகப் பேசும்போது, "இன்று ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்தோம்பா... குழந்தைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். நல்லா இருக்காம்பா.." அந்த வார்த்தைகள், ராஜா கண்ணனின் இதயத்தில் இடி விழுவதுபோல் விழுந்தன.

"என்ன ஹாஸ்பிடல் மா? எந்தக் குழந்த?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான். தாயின் பதில் – "கீர்த்தனா கர்ப்பமா இருக்கால்ல.. ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோம்" என்று வந்தது.

அந்த பதில், அவனை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. வார்த்தைகள் தடுமாறின. அந்த கொடூரமான தருணத்திலும் நிதானமாக செயல் பட்டான் ராஜா கண்ணன். இப்போதே உண்மையை சொன்னால், நாம் அங்கே இல்லாத நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடும் வாய்ப்பு உள்ளது என எண்ணினான். சரிம்மா.. கீர்த்தனா எங்கே.. என்று கேட்டான்.. அவ சமையல் ரூம்ல வேலை செஞ்சிகிட்டு இருக்காப்பா.. நான் வெளிய நின்னுட்டு இருக்கேன்.. போய் குடுக்கட்டுமா.. என்று சொன்னால் தாய்.. இல்லமா வேணாம் .. நான் அப்புறம் பேசிக்கிறேன்.. போனை வைத்த அடுத்த கணம் முதல் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார் ராஜா.

யாரிடமும் சொல்லாமல், ஊருக்கு திரும்பினான் ராஜா கண்ணன். உண்மை வெளிப்பட்டது: கீர்த்தனா, ஆறு மாத கர்ப்பமாக இருந்தாள். ஆனால், அது அவனது குழந்தை அல்ல. கள்ளக்காதலன் கார்த்திக் என்ற இளைஞனுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததன் விளைவு.

விசாரணை தொடர்ந்தது. ராஜா கண்ணன் கடைசி ஆறு மாதம் அனுப்பிய பணங்கள் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்கள் – கணக்கில் வரவில்லை. பணம் எங்கே என கேட்டான். அந்தப் பணம் கார்த்திக்கின் வங்கி கணக்கிற்கு போயிருக்கு. நான் அவனோட திருமணம் செய்ய போகிறேன் என்று கூறினாள் கீர்த்தனா.

ராஜாவின் வீட்டில் இருந்துகொண்டு.. கார்த்திக்கின் கருவை வயிற்றில் சுமந்து கொண்டு.. ராஜா அனுப்பி வரும் பணத்தை நேரடியாக கார்த்திக்கிற்கு மாற்றியிருக்கிறாள் கீர்த்தனா. " வந்தவரை லாபம்" என்று நினைத்து, அவள் அப்படி செய்ததாக கூறினாள்.

பஞ்சாயத்தில், பகிரங்கமாகக் கூறினாள்: "ராஜாவோட வாழ விரும்பல. கார்த்தியோடதான் வாழணும். இந்த பத்து வருசமா அவங்க குடும்பத்துக்கு வேலை செஞ்சதுக்கு இந்த 30 லட்சம் தான் மிச்சம்.. இது, என் மகனின் எதிர்காலத்துக்கு வேணும். வீடு, சொத்து எதுவும் எனக்கு வேண்டாம். என கூறினாள் கீர்த்தனா.

ராஜா கண்ணன் உடைந்து போனான். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றான். போலீஸார்: "கீர்த்தனா கார்த்திக்கோட போக விரும்புறாப்பா... அவ வயிறுல கார்த்திக்கோட கரு இருக்கு. அவ சொல்றதான் நாங்க செய்ய முடியும். நீதிமன்றத்துல வழக்கு போட்டுக்கோங்க.. என்று தட்டி கழித்தனர்.

ராஜா கண்ணன், வெளிநாட்டில் குடும்பத்துக்காக உழைத்து, கோடி கோடியாக சம்பாதித்தவன். குழந்தை, மனைவி – அனைத்தையும் பிரிந்து வலியை தாங்கியவன். இன்று, காதல் மனைவியை இழந்து, தனிமையில் நிற்கிறான்.

வழுதூர் ஊர் மக்கள், இந்தக் கதையில் யார்தான் குற்றவாளி என்று விவாதிக்கின்றனர். "காதல் மாறலையா? பணத்துக்காகவா? அல்லது வாழ்க்கையின் அழுத்தமா? தனிமையின் தேடலா..?" என்ற கேள்விகள் எழுகின்றன.

ஆனால், ஒரு விஷயம் தெளிவு: ராஜா கண்ணனின் கனவுகள், கசப்பான நெருப்பில் எரிந்து நொறுங்கின. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் கதை – பெயர்கள், இடங்கள் மாற்றப்பட்டவை. வாழ்க்கை, சில சமயங்களில், சினிமா கதைகளை விட கொடியது.

Summary : Raja Kannan, a hotel management graduate from Vazhuthoor village, married classmate Keerthana in 2013. They had a son in 2015. Facing financial woes, Raja moved to Kuwait as a chef, sending all earnings home to build a house. After seven years, he returned in 2025 to discover Keerthana six months pregnant by lover Karthik. She had diverted 30 lakhs of his money to Karthik and demanded it for her future, refusing reconciliation. Devastated, Raja faces betrayal and legal battles.