காஞ்சிபுரம், அக்டோபர் 26 : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமதூர் அருகே கண்ணன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் (28) என்ற இளைஞன், தனது நான்கு ஆண்டுகள் காதலித்த வெண்ணிலாவுடன் (25) திருமணம் செய்ய இருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த விபரீத சம்பவம், அவரது குடும்பத்தினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மகேஷ் குமார், ஸ்ரீபெருமதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார்.

அதே நிறுவனத்தில் வேலை செய்த வெண்ணிலாவுடன் அவர் நான்கு ஆண்டுகளாகக் காதலில் இருந்து வந்தார். இருவருக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவர்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ் குமாருக்கு, அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணைப் பார்த்து வந்தனர்.
ஆனால், வெண்ணிலா அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது சம்பவத்தின் திருப்பமாக அமைந்தது.வெண்ணிலாவின் புகாரின்படி, மகேஷ் குமார் தன்னுடன் பலமுறை உள்ளாசகமாக இருந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமானபோது கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் என கூறி தொடர்ச்சியாக, இரண்டு முறை கருத்தரித்த போதும் கூட ஆசை வார்த்தை கூறி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், என்னை பயன்படுத்திவிட்டு இப்போது விட்டு விட்டதாகவும் கூறினார். இதன் மூலம், ஆணுறை பயன்படுத்தாமலே வெண்ணிலாவுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார் மகேஷ் என்பது தெரியவருகிறது.
இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தியதில், மகேஷ் குமார் "வெண்ணிலா சொல்வது அனைத்தும் உண்மை தான். நான் வேன்னிலாவையே திருமணம் செய்ய விரும்புகிறேன்" என்று அறிவித்தார். அதன் அடுத்தடியாக, அவர் ஊத்துக்காட்டில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் திருமணம் நடத்த திட்டமிட்டார்.
திருமணத்திற்குத் தேவையான தாலி, உடைகள் மற்றும் பொருட்களை வாங்க ஏற்கனவே தனது பெற்றோரிடம் பணம் கொடுத்திருந்தார்.அதே நேரம், வெண்ணிலாவின் புகார் அவமானமாக மாறியது, மேலும் பிரேக் அப் மன உளைச்சல் தாங்க முடியாமல் மகேஷ் குமார் தீவிர முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர் வீட்டில் தனியாக இருந்தபோது சீலிங் ஃபேனில் தூக்கிட்டு உயிர்விட்டார். அடுத்த நாள் காலை, திருமணப் பொருட்களை வாங்கி வந்த அவரது பெற்றோர் வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்தனர்.
நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, மகேஷ் குமாரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது.தகவல் அறிந்த ஸ்ரீபெருமதூர் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு ஸ்ரீபெருமதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறாய்வு செய்தனர்.
தற்கொலை தொடர்பான வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். போலீஸ் வட்டாரங்களின்படி, சம்பவத்திற்கு காதல் தகராறு மற்றும் அவமான உணர்வே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இந்த சம்பவம், ஸ்ரீபெருமதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடியற்காலம் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் இறந்தது உள்ளூர் மக்களிடம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் இழப்பைத் தாங்க முடியாமல் இருக்க, போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள், இளைஞர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் விவரங்கள் கிடைக்கும் போது தெரிவிப்போம்.
Summary : In Sriperumbudur, Mahesh Kumar (28), a supervisor, hanged himself the night before his wedding to girlfriend Vennila (25), whom he dated for four years. A breakup over pregnancy and two abortions, followed by her police complaint and his reluctant agreement to marry, led to humiliation-driven suicide. Family discovered him; police probe ongoing.


