அரசு பள்ளி வகுப்பறையில் பெண்ணோடு சிக்கிய பெரும்புள்ளி ஒண்ணுமே பண்ண முடியாதாம்..

கிருஷ்ணகிரி,அக்டோபர் 31: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு (எஸ்எம்சி) தலைவி உமாவின் கணவர் உமேஷ், வகுப்பறையில் பெண்ணுடன் தனிமையில் இருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் எதிர்கொண்டதும், அவர்களை மிரட்டியதும் உள்ளிட்ட வீடியோக்கள் பரவிய நிலையில், உமேஷ் 'ஹவுஸ் கீப்பிங்' வேலைக்காக பெண்ணை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், பள்ளி வளாகத்தை தவறாக பயன்படுத்தி, இரவு நேரங்களில் பெண்களை அழைத்து மது அருந்துவது போன்ற குற்றச்சாட்டுகள் அவருக்கு எழுந்துள்ளன.

கடந்த 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பள்ளி விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆறாம் வகுப்பு 'டி' பிரிவு வகுப்பறையில் உமேஷ் என்பவரும், ஒரு பெண்ணும் உள்ளே சென்று கதவை பூட்டினர்.

இதை கவனித்த மாணவர்கள் கதவை தட்டி, உள்ளே என்ன நடக்கிறது என விசாரித்தனர். வெளியே வந்த உமேஷ், "நான் என்னமோ பண்ணிட்டு போறோம், இங்கிருந்து போடா" என மாணவர்களை மிரட்டினார்.

பின்னர், "நான் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பள்ளியை பார்வையிட வந்தேன்" என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.மாணவர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதும், உமேஷ் "என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ, நான் ஒத்துக்கிட்டாலும் யாரும் என்னை தொட முடியாது" என திமிர் துடித்து பேசினார். "பண்ணிக்க போ, நாளைக்கே ஆமா நான் பண்ணுனேன்னு சொல்லிட்டாலும் எதுவும் ஆகாது" என மாணவர்களை அச்சுறுத்தி விட்டு சென்றார்.

மாணவர்கள், "போலீஸ் ஸ்டேஷன் போலாம், ஸ்கூலுக்குள்ளேயே இது தப்பு இல்லையா? அவங்க கணவர் வந்தா என்ன பண்ணுவீங்க?" என கேட்டனர். ஒரு மாணவர் "நாளைக்கு எச்எம் கிட்ட சொல்றேன்" எனவும், மற்றொரு மாணவர் "ஹெச் எம்ம்மும் இவருக்குதான் சப்போர்ட் பண்றாரு" எனவும் வீடியோவில் பதிவு செய்தனர்.

அப்போதே அந்த பெண் அவசரமாக வெளியே வந்து கிளம்பி சென்றதையும் மாணவர்கள் வீடியோவில் பதிவு செய்தனர்.விசாரணையில், உமேஷ் முல்லைநகர் பகுதியில் கிளவுஸ் தயாரிப்பு தொழிற்சாலை நடத்துபவர் என்பது தெரியவந்தது.

முக்கியமாக, பள்ளி தலைமை அலுவலகம் உட்பட அனைத்து வகுப்பறை சாவிகளையும் அவர் தன்வசம் வைத்திருப்பதும், இரவு நேரங்களில் பெண்களை அழைத்து வகுப்பறைகளில் தனிமையில் இருப்பது, பள்ளி வளாகத்தில் மது அருந்துவது போன்றவற்றை வழக்கமாகச் செய்வதாகவும் பள்ளி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பள்ளி விடுமுறை நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், செய்தியாளர் உமேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

அப்போது உமேஷ், "பெண்ணை அழைத்துச் சென்றது உண்மைதான். ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக அழைத்தேன். அவள் என் கம்பெனியில் வேலை செய்பவள். மாணவர்கள் கேட்டதால், 'நான் தப்பு பண்ணல' என ரெக்வஸ்ட் செய்தேன்" என ஒப்புக்கொண்டார்.

"ஒவ்வொரு வாரமும் இப்படி நடக்கவில்லை, இது முதல் முறை" எனவும் தெரிவித்தார். அவர் தனது மனைவி உமா பள்ளி எஸ்எம்சி தலைவி என்பதால், சாவிகளை தன்னிடம் வைத்திருப்பதாகவும் கூறினார்.

பள்ளி தலைமை ஆசிரிரியர் காந்தி (செப்டம்பரில் ஓய்வு பெற்றவர், தற்போது பணி நீட்டிப்பில் உள்ளவர்) இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், "தகவல் வந்த உடனே உமேஷை தொடர்பு கொண்டு, 'நீ ஏன் அங்கு போனது? இது தப்பு. சாவிகளை உடனே திருப்பி கொடு, இனி வரக்கூடாது' என எச்சரித்தேன்.

திங்கட்கிழமை (27ஆம் தேதி) ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். விசாரணை நடத்தி உமேஷ் மற்றும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார். காந்தி மீது ஏற்கனவே மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதால், ஆசிரியர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் அவரை மாற்றக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்மை கல்வி அலுவலர் (டிஇஓ) முனிராஜ் பேசுகையில், "பள்ளிக்கு தனியாக வாட்ச்மேன் இல்லாததால், சாவிகள் உமேஷிடம் இருக்கலாம். ரிப்போர்ட் கேட்டுள்ளேன். வந்தால் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என பார்க்கிறேன்" என தெரிவித்தார். இருப்பினும், அவர் "வீடியோ அனுப்புங்கள், பார்க்கிறேன்" என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் போலீஸ் நிலையத்தில் 'ஒன்றும் தெரியாதது' போல் நடந்து கொள்வதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உமேஷ் தனது மனைவியின் பதவியை சாதகமாக்கி, பள்ளி வளாகத்தை தனிப்பட்ட இடமாக மாற்றி கொண்டு மோசமான செயல்களில் ஈடுபடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

பள்ளியின் மாண்பை காக்க, உமேஷ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். மாவட்ட கல்வித்துறை மற்றும் போலீஸ் துறை இதில் விரைந்து செயல் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Summary : In Krishnagiri's Mullainagar Government Higher Secondary School, SMC president Uma's husband Umesh was caught on video entering a classroom with a woman on a Sunday, locking the door. Students confronted him, leading to threats where he boasted of his influence.

He claimed it was for housekeeping work, but allegations include frequent misuse of school premises for illicit activities. Headmaster filed a complaint; DEO seeks report.