அரசு பள்ளி வகுப்பறையில் பெண்ணோடு சிக்கிய பெரும்புள்ளி ஒண்ணுமே பண்ண முடியாதாம்..
கிருஷ்ணகிரி,அக்டோபர் 31: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு (எஸ்எம்சி) தலைவி உமாவின் கணவர் உமேஷ், வகுப்பறையில் பெண்ணுடன் தனிமையில் இருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் எதிர்கொண்டதும், அவர்களை மிரட்டியதும் உள்ளிட்ட வீடியோக்கள் பரவிய நிலையில், உமேஷ் 'ஹவுஸ் கீப்பிங்' வேலைக்காக பெண்ணை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும், பள்ளி வளாகத்தை தவறாக பயன்படுத்தி, இரவு நேரங்களில் பெண்களை அழைத்து மது அருந்துவது போன்ற குற்றச்சாட்டுகள் அவருக்கு எழுந்துள்ளன. கடந்த 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பள்ளி விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆறாம் வகுப்பு 'டி' பிரிவு வகுப்பறையில் உமேஷ் என்பவரும், ஒரு பெண்ணும் உள்ளே சென்று கதவை பூட்டினர். இதை கவனித்த மாணவர்கள் கதவை தட்டி, உள்ளே என்ன நடக்கிறது என விசாரித்தனர். வெளியே வந்த உமேஷ், "நான் என்னமோ பண்ணிட்டு போறோம், இங்கிருந்து போடா" என மாணவர்களை மிரட்டினார். பின்னர், ...