சீனா : நான்கிங் நகரத்தின் கொந்தளித்த தெருக்களில், 2025 ஜூலை மாதத்தின் ஒரு அழகிய இரவு. சூரியன் மறைந்ததால், வெயில் தணிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் திரைகளில் ஒளிரும் டேட்டிங் ஆப்புகளில் சூட்டை ஏற்றிக்கொண்டிருந்தார்கள் இளசுகள், தனிமையைத் தேடும் ஆண்களின் விரல்கள் டேட்டிங் ஆப்புகளை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தன.

அந்த ஆப்புகளில், ஒரு பெண்ணின் ப்ரோஃபைல் தோன்றியது – "Red Sister" என்று அழைக்கப்பட்ட ஹாங் என்பவள் தான். அவள் சிவப்பு ரோஜா போன்று ஈர்க்கும் புன்னகை, திருமணமான பெண்ணின் அழகிய தோற்றம், "என்னை என் கணவர் திருப்தி படுத்த வில்லை, உங்க ரகசிய மனைவியாக நான் இருக்க விரும்புகிறேன்.. இலவசமாக..." ப்ரோஃபைல் பயோ வில் இருந்த விஷயம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது.
உங்களுக்கு மனைவியாக இருக்க நீங்க எனக்கு பணம் தரவேண்டாம். ஆனால், பரிசாக ஒரு பானை எண்ணெய், ஒரு பெட்டி பழங்கள் அல்லது ஒரு சிறிய பரிசு பொருள் போதும். பணம் வேண்டாம், ஆனால் இன்பம் உறுதி. பணிவிடைக்கு தயாராக இருக்கிறேன் என்று கூறினால் ஹாங்.
ஜியாவ் என்ற 38 வயது ஆண், அந்த Red Sister என்ற போலியான கணக்கில் உண்மையான முகமாக இருந்தான். அவன் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவன் – ஒரு சிறிய அலுவலக ஊழியன், தனிமையின் சுமையை சமாளிக்கும் ஒரு சாதாரண மனிதன். ஆனால் அவனது உள்ளத்தில், ஒரு இருண்ட ஆசை எரிந்தது.
இணையத்தின் இருண்ட மூலைகளில், அவன் பெண் உடைகளை அணிந்து, விக் அணிந்து, மென்மையான குரலில் ஆண்களை ஏமாற்றினான். டேட்டிங் ஆப்புகளில், "உயர்தர ஆண்களை" தேடுவதாகக் கூறி, கல்லூரி மாணவர்கள், இளம் தொழில்முறை வல்லுநர்கள், ஜிம்மில் உழைக்கும் இளைஞர்கள், வெளிநாட்டவர்கள் வரை – அனைவரையும் ஈர்த்தான்.
அவர்கள் வந்தபோது, அவன் தனது சிறிய அறையில், மறைக்கப்பட்ட கேமராக்களால் அவர்களது ரகசியங்களைப் பதிவு செய்தான். ஒவ்வொரு சந்திப்பும், ஒரு புதிய வீடியோ. "இலவசம்" என்று கூறி, அவர்களின் ஆடை முழுதும் களைந்து அவர்களின் உடல் ரகசியங்களைப் பறித்தான்.
அந்த வீடியோக்கள், அவனது ரகசிய குழுவில் விற்கப்பட்டன. இந்திய மதிப்பில் ஒரு வீடியோ 1600 ரூபாய் என்று விலை போனது. "Red Sister Secrets" என்று பெயரிட்ட குழு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. ஆனால், ஒரு நாள், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிய ஆரம்பித்தது.
ரெட்நோட் போன்ற சமூக ஊடகங்களில், அவை பரவத் தொடங்கின. முதலில், 1600-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஈடுபட்டுள்ளனர் என்று பேச்சுகள். போலீஸ் அதை மிகைப்படுத்தலாகக் கூறினாலும், குறைந்தது 230 பேர் உறுதியானது. வீடியோகளில், அநேகர் அடையாளம் காணப்பட்டனர் – ஒரு மனைவி தன் கணவரை அங்கு கண்டு, அவனை விவாகரத்து செய்தாள். பொது வெளியில் அதிர்ச்சி பரவியது.
"இது ஒரு ஆணா? பெண்ணா?" என்ற கேள்விகள், வெய்போவில் ஹேஷ்டேக் 2 கோடி பார்வைகளைத் தொட்டது. அப்போதுதான், கொடூரமான உண்மை வெளியானது. Red Sister போர்வையில் இருந்த ஜியாவ், ஏற்கனவே HIV தொற்றுக்கு ஆளானவன்.
அவன் அறிந்தபடி, ஆணுறைகளை அணியாமல் வந்தவர்களுடன் உடலுறவு கொண்டான். அவன் மூலம், சோதனை செய்த முதல் மூன்று பேருக்கும் HIV உறுதியானது.
Red Sister-ஐ சந்தித்த 1600 ஆண்களும் நமக்கும் இந்த தொற்று வந்திருக்குமா..? என்று மருத்துவமனையை நோக்கி படையெடுக்க, அலர்ட் ஆனது மாநிலம். வழக்கத்திற்கு மாறாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் HIV சோதனைக்கு வந்திருக்கிறார்கள். இது ஒரு பேரழிவின் தொடக்கமாக இருக்க வாய்ப்பு அதிகம். அரசு இயந்திரம் சுழல ஆரம்பித்தது.
நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) அவசர சோதனைகளைத் தொடங்கியது. "எவரும் பயப்பட வேண்டாம், உங்களை சோதனை செய்யுங்கள்" என்று அறிவித்தனர். ஆனால், பொது மக்கள் மத்தியில் பதற்றம் – HIV பரவல், பாலின சமநிலையின்மை, பாலியல் கல்வியின்மை – அனைத்தும் விவாதங்களைத் தூண்டின.
இணை வாசிகள் கொண்டாடினார்கள். மீம்கள், AI-ஆல் உருவாக்கப்பட்ட காமெடிகள், ஃபேக் புரொபைலை நம்பி மோசம் போன பயலுகளா.. என ஒரு பக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது. ஆனால், மாநில அரசு குலை நடுங்கியது. 1600 பேரில் எத்தனை பேர் திருமணம் ஆனவர்கள், Red Sister-ஐ தொடர்பு கொண்ட பின் தங்கள் மனைவியருடனோ, அல்லது பாலியல் தொழிலாழியுடனோ தொடர்பில் இருந்தார்களா..? பதற்றம் அதிகரித்தது.
"Red Sister" என்று அழைக்கப்பட்ட விக், முகமூடி, ப்ளவுஸ்போன்ற உடைகளுக்கான ஃபேஷன் டுடோரியல்கள். இன்ஸ்டாகிராமில், "Sister's Room" என்ற AR ஃபில்டர் சவால். வியட்நாமில் ஒரு நாடகம், அவளை அடிப்படையாகக் கொண்டு அரங்கேறியது.
பிரேசிலின் டுவோலிங்கோ, X-ல் பாரட்டி போஸ்ட் செய்தது – "சீன மொழி கற்போம், ஆனால் இந்த அறையில் என்ன நடக்கிறது? "ஜூலை 6 அன்று, போலீஸ் ஜியாவை கைது செய்தனர். அவன் முகங்களை மாற்றிய, அழகிய பெண்ணாக மாறியவன், இப்போது சிறைக்கூடத்தில், தன் கிரிமங்களை எதிர்கொண்டான் – அநைத்திய உள்ளடக்கங்கள் உருவாக்கி, பரப்பியதற்காக. வீடியோக்களை இணையத்திலிருந்து நீக்கும் பணி தொடர்கிறது.
ஆனால், அந்த இரவுகளின் சாயல், 1600 ஆண்களின் மனதில் நிழலிடுகிறது. "ஈர்க்கும் இன்பம், கொடூரமான விலை" என்று, ஒரு பாதிக்கப்பட்டவன் சமூக ஊடகத்தில் கதறினான்.
Red Sister-ன் கதை, ஒரு எச்சரிக்கை. இணையத்தின் இருண்ட முகம், தனிமையின் ஆசை, ஒரு கொடூர நோய் தொற்றின் பரவல் – அனைத்தும் ஒரே இரவில் கலந்தன.
அது சரி, நீங்க எதாச்சும், ஸ்வீட்டி, பிரியா க்யூட்டி..ன்னு எதாவது முகம் காட்டாத ஃபேக் ப்ரோபைல் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்களா..? உடனே ப்ளாக் பண்ணிடுங்க பாஸ்.
Summary : In Nanjing, 2025, Jia disguised as alluring "Red Sister" Hang on dating apps lured over 230 men for secret recordings sold online. HIV-positive, he unprotectedly infected at least three. Leaked videos sparked outrage, police arrests, public health alerts, and viral memes, exposing online deception's deadly risks.


