பலமுறை உறவு கொண்ட காதலன்.. ரத்தம் வந்தும் விடாமல்.. பறிபோன உயிர்.. பச்சோந்தி லவ்வர் செய்த கொடூரம்..!

நித்திரவிளை: கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே மாவரை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி குமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் காலத்திலிருந்தே உள்ளூர் இளைஞரை காதலித்து வந்த குமுதா, அவரது திருமண வாக்குறுதிக்கு ஏமாற்றப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று காதலனை சந்தித்துதுள்ளார் குமுதா.

பலமுறை குமுதாவுடன் உறவு கொண்ட அவரது காதலன் அவர் வயிறு வலிக்கிறது என்று கூறியும் விடவில்லை. உச்சகட்டமாக, ரத்தம் வந்தும் கூட விடாமல் கொடுமை செய்துள்ளான். ஒரு வழியாக, வீடு திரும்பிய குமுதா, திடீர் வயிற்று வலியால் துடித்து மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குமுதாவின் மரணத்தை, அவரது பெற்றோர் காதலனின் கொலைத் திட்டமாகக் கருதி, நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குமுதாவின் குடும்பத் தரப்பின்படி, பள்ளி பருவத்திலிருந்தே இளைஞர் ஒருவரை காதலித்து வந்த குமுதா, அவரது "திருமணம் செய்து கொள்கிறேன்" என்ற வாக்குறுதிக்கு நம்பி, பலமுறை உடலுறவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், இளைஞரின் குடும்பத்தினர் இந்த உறவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.

கடந்த வாரம், குமுதா தனது காதலனை சந்தித்து வீடு திரும்பியதும், அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. "எதோ கசாயம் போல ஒரு பானத்தை குமுதாவுக்கு கொடுத்துள்ளார் அவரது காதலன். அதை குடித்த பிறகே இந்தப் பிரச்சனை ஏற்பட்டது" என்று குமுதாவின் பெற்றோர் காவல்துறைக்கு அளித்த புகாரில் கூறியுள்ளனர்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட குமுதா, சிகிச்சைக்கு பதிலளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: குமரி மாவட்டத்தில் ஏன்?

இந்தச் சம்பவம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நிகழும் சூழலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில், இதேபோன்ற மர்ம மரணங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான ஏமாற்றங்கள் பலவற்றால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் இதற்குக் காரணமாக சமூக ஊடகங்களின் தவறான தாக்கம், குடும்பங்களின் பழமைவாத எதிர்ப்பு, பாலியல் விழிப்புணர்வின் குறைபாடு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர்.

"இளம் பெண்களை உணர்ச்சியால் பயன்படுத்தி, பின்னர் தூக்கி வீசும் இத்தகைய சம்பவங்கள், சமூகத்தில் ஆழமான மாற்றத்தை கோருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டாய பாலியல் கல்வி மற்றும் சுயபாதுகாப்பு பயிற்சிகள் அவசியம்" என்று உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். 

பொதுமக்கள், காவல்துறை மற்றும் அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.குமுதாவின் குடும்பத்தினர், "இது போன்ற கொடூரச் செயல்களுக்கு எதிராக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். 

நமது பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கோரியுள்ளனர். இச் சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, இளைஞர்களுக்கு உணர்ச்சி முதிர்ச்சி, பாலியல் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

குமுதாவின் மரணம், சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக மாற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Summary : In Kanyakumari's Nithiravilai, 19-year-old student Abitha died mysteriously after meeting her lover, whom she loved since school. Family alleges he poisoned her herbal drink amid repeated sexual exploitation and family opposition. Police investigate as sexual violence cases rise, calling for awareness and education on protection.