கேரளா : திருவனந்தபுரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருக்கும் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கடுமையான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கிரைம் கதை, சம்பவம் நடந்த இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
கேரளா ஆலுவா பகுதியைச் சேர்ந்த அனில் நாயர் என்பவருக்கும் கொச்சியை சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருமே மென்பொருள் பணியாளர்களாக பணியாற்றி வந்திருக்கிறார்கள்.
திருவனந்தபுரம் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் தங்களுடைய பணியை தொடர்ந்து வந்திருக்கிறார்கள். லட்ச கணக்கில் சம்பளம், வில்லா வாழ்க்கை என நகர்ந்து கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் அன்று இரவு நடந்த சம்பவம் மிகப்பெரிய மாற்றத்தை பேரழிவை ஏற்படுத்தி விட்டது.
கடந்த 10-ம் தேதி, வெள்ளிக்கிழமை, நைட் ஷிப்ட் வேலைக்கு சென்றார் கணவர் அனில் நாயர். அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய ஜான் விக்டர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என்ற அதிர்ச்சி செய்தி, அலுவலகத்தில் பணியாற்றும் பலரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சு நாளை காலை 11 மணிக்கு தான் உடலை கொடுப்பாங்களாம்.. என்ற தகவல் கிடைத்ததும் இன்று இரவு நேர பணி இல்லை என்று அறிவிப்பு வரவே வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார் அனில்.
வீட்டுக்கு திரும்பிய கணவரிடம், என்னங்க சீக்கிரமா வந்துட்டீங்க.. என்று தூக்க கலக்கத்தில் கேட்டால் மல்லிகா. நடந்த விஷயத்தை அனில் கூறவே, கடைசியாக இரவு 11 மணிக்கு மனைவி மல்லிக்காவும் அணில் நாயரும் படுக்கைக்கு உறங்க செல்கிறார்கள்.
பணிக்கு சென்றபோது நன்றாக இருந்த மனைவி மல்லிகா தற்போது முகத்தில் ஒரு வித பதட்டத்துடன் இருப்பதை அனில் நாயர் கவனிக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, ஒன்றுமில்லை உங்களுடன் பணியாற்றுபவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது வேறொன்றும் இல்லை, நம்ம வீட்டுக்கு கூட அவர் வந்திருக்காரு இல்ல.. சரி வாங்க போகலாம் என கூறி படுக்கைக்கு சென்றனர்.
படுக்கையில், கணவர் கேட்ட இன்னொரு கேள்வி மல்லிகாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது சரி, கேட்கணும்னு நினைச்சேன்.. நீ என்ன இவ்வளவு செக்ஸியா டிரஸ் பண்ணிக்கிட்டு இருக்க..? இந்த டிரஸ் நான் பார்த்ததே இல்லையே..? இந்த டிரஸ்ஸை எப்போ வாங்குன..? என்று கேட்ட அவர் நிஜமாகவே இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப செக்ஸியா இருக்க என்று மனைவியின் அழகை வர்ணித்து பேச ஆரம்பித்திருக்கிறார்.
இப்படியாக அவர்களுக்குள் உரையாடல் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் படுக்கைக்கு கீழே இருந்து யாரோ ஒருவர் லொக்.. லொக்.. இருமுவது போன்ற சத்தம் கேட்டிருக்கிறது. பயந்து போன கணவர் அணில் என்ன சத்தம் அது என்று மனைவியை கேட்டிருக்கிறார். மனைவி பயந்து போய் எழுந்து தரையில் நின்று தலை குனிந்தபடி கதறி அழுது இருக்கிறார்.
என்ன நடக்கிறது என புரியாமல் கட்டிலுக்கு அடியில் பார்த்த கணவனுக்கு அதிர்ச்சி..! கட்டிலுக்கு அடியில் ஆதித் மேனன் என்ற ஒரு இளைஞர் படுத்திருந்ததை கண்டு அதிர்ந்து போனார் அனில். அடுத்த சில நிமிடங்களில் என்ன நடந்து இருக்கிறது..? என்பதை அவதானித்தவராக பேச்சு மூச்சு இன்றி அமைதியாக நின்று இருக்கிறார் அனில்.
ஏதோ ஒரு விஷயத்தை சொல்வதற்கு மனைவி மல்லிகா வாய் எடுக்க தன்னுடைய கையை காட்டி நீ எதுவும் பேச வேண்டாம் என்பது போல செய்கை மட்டும் செய்தார் அனில். அவ்வளவுதான் அடுத்தடுத்த கொடூரங்கள் அரங்கேற ஆரம்பித்தன கோபத்தின் உச்சிக்கே சென்ற கணவர் அணில் மனைவி மல்லிகாவை கடுமையாக தாக்கியிருக்கிறார்.
உனக்கு எந்த விஷயத்தில் நான் குறை வைத்தேன். எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகம் செய்தாய் என கேள்விகளைக் கேட்டு மனைவியை கடுமையாக தாக்கினார் அனில். அதே நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் சுவறோடு சுவராக ஒட்டிக்கொண்டு இருந்தார் ஆதித் மேனன்.
ஒரு கட்டத்தில் கதவை திறந்து தப்ப முயன்ற ஆதித் மேனனை இழுத்த அனில் அவரையும் கடுமையாக தாக்கினார். பிறகு, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து வெறி தீர இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தார் அனில். அதன் பிறகு, அங்கிருந்து கிளம்பி கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்கு சென்று தங்கிவிட்டார்.
மல்லிகாவின் கணவர் அனில் நாயரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர் காவல் துறையினர்.. நான் எங்கும் தப்பி செல்லவில்லை.. கொடைக்கானலில் தான் இருக்கிறேன்.. நான் தான் கொலை செய்தேன்.. நாளை மாலை வந்து சரணடைகிறேன் என மிடுக்காக பதில் கொடுத்துள்ளார். கொடைக்கானலுக்கு விரைந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
நானே நாளைக்கு வரேன்னு சொன்னேன்.. இப்போ உங்க செலவுலையே என்னை கூட்டிக்கிட்டு போகப்போறீங்களா..? சரி நல்லது.. என மது மயக்கத்தில் இருந்த அவரை கைது செய்து கேரளா அழைத்து சென்றனர். விசாரணையில் அணில் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலே சொன்ன சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
Summary : In Thiruvananthapuram, IT couple Adith Menon and Mallika were found murdered in their apartment after a foul smell alerted police. Investigation revealed Mallika's affair with colleague , hidden under the bed during Anil's return from work.Enraged by betrayal, Anil stabbed both to death on October 10, 2025. Post-mortem confirmed knife wounds; Anil confessed in custody.
