LipStick கொண்டு எழுதப்பட்ட அந்த வார்த்தை.. காட்டிக்கொடுத்த உள்ளாடை.. இளம் பெண் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்..

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டம், இமாம் வாடா கிராமத்தைச் சேர்ந்த 23 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தோல்வி மற்றும் காதலனின் தாயால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வன்முறை ஆகியவை இந்த இளம்பெண்ணின் விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, மாணவி வெளியே சென்றுவிட்டு சோகத்துடன் வீடு திரும்பியதாக அவரது தாய் தெரிவித்தார். நேராக தனது அறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்ட மாணவி, தாய் பலமுறை கதவைத் தட்டியும் பதிலளிக்கவில்லை.

சந்தேகமடைந்த தாய், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மாணவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், மாணவியின் அறையில் உள்ள கண்ணாடியில் லிப்ஸ்டிக்கால் "ஐ குவைட்" (I Quit) என எழுதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, 'ஹப்பி' என பதிவு செய்யப்பட்ட எண்ணை ஆசாத் என்பவர் பயன்படுத்தியது தெரியவந்தது.

ஆசாத் ஒரு பல் மருத்துவர் ஆவார். அவரை தொடர்பு கொண்டபோது, "இப்பதான் அவ்வளவு அடி வாங்கிட்டு போனேன், இன்னும் டார்ச்சர் பண்றியா?" என மிரட்டியதாக போலீஸ் தெரிவித்தது.பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது உறுதியானாலும், அவரது உடலில் வன்முறையின் தடயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுந்தது. ஆசாத்தின் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என கூறி அவர் முதலில் ஒத்துழைக்க மறுத்தார்.

அதன் பிறகு அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இறந்துபோன மாணவியின் உள்ளாடை மற்றும் இன்னும் சில ஆடைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர். சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள், உங்களுக்கு அக்கா, தங்கை என யாருமே இல்லை. பிறகு, எப்படி இளம்பெண்கள் பயன்படுத்த கூடிய உள்ளாடை இங்கே வந்தது..? இது யாருடைய என போலீசார் கேட்க, இது அவளுடையது தான் என ஒப்புக்கொண்டார் ஆசாத். பின்னர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மைகள் வெளிவந்தன.

விசாரணையில், மாணவிக்கு பல்வலி சிகிச்சைக்காக சென்றபோது ஆசாதுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது தெரியவந்தது. இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து, வெளியூர் பயணங்களிலும் ஈடுபட்டதாகவும், தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆசாத், மாணவியை தனது வீட்டில் திருமணம் செய்யப்போவதாக அறிமுகப்படுத்தியிருந்தார். அதன் பிறகு, அவரது வீட்டிலேயே மாணவியுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார் என தெரிகிறது. ஒரு கட்டத்தில், ஆசாத் மாணவியிடம் இருந்து விலகி, வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது மாணவிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மாணவி தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றபோது, ஆசாத்தின் தாய் மாணவியை வீட்டிற்கு அழைத்து, அவரை கடுமையாக தாக்கி, "என் மகன் வழியில் இனி வரக்கூடாது" என மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த அவமானமும், காதல் தோல்வியும் மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுகிறது.மாணவியின் தாயின் புகாரின் அடிப்படையில், ஆசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம், காதல் உறவுகளில் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் வன்முறையின் தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மாணவியின் மரணம், அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

Summary : A 23-year-old law student in Jhansi committed suicide after a failed love affair with a dentist, Asad. Heartbroken by his engagement to another woman and assaulted by his mother, she hanged herself. Police arrested Asad after finding incriminating evidence, including a mirror note saying "I Quit."