SIT-யின் அலுவலகத்தில் எரிந்த நிலையில் 32 GB பென்டிரைவ் மற்றும் பேப்பர்கள் - பரபரப்பு

கரூர், அக்டோபர் 17: தமிழக நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை முடக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கரூர் சம்பவம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கலைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) தற்காலிக அலுவலகத்தில் எரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் 32 ஜிபி பென்ட்ரைவ் கண்டுபிடிப்பால் மீண்டும் பூகம்பம் வெடித்துள்ளது.

ஆளும் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சிபிஐக்கு ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டிய நிலையில் அரசு எதிர்கொண்டுள்ளது.கடந்த மாதங்களாக கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட அசம்பாவித நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு கலைக்கப்பட்டது. இந்நிலையில், அக்குழுவின் தற்காலிக அலுவலகத்தை காலி செய்ததன் பிறகு, அலுவலக வெளியே காகிதங்கள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு, 32 ஜிபி திறன் கொண்ட ஒரு பென்ட்ரைவும் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். "இது திட்டமிட்ட சதி. கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுக்கவில்லை. மாறாக, அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது. விஜயின் அரசியல் பிரவேசத்தை முடக்க, ஆளும் கட்சி இதை திட்டமிட்டது" என்று டிவிகே தலைவர்கள் கூறுகின்றனர்.

மேலும், "அலுவலக காலி செய்யும்போது தேவையற்ற காகிதங்களை எரிப்பது இயல்பு என்று ஒரு தரப்பு கூறினாலும், இத்தகைய உயர்மட்ட விசாரணையில் 32 ஜிபி பென்ட்ரைவ் எரிக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதில் என்ன இருந்தது? எரிக்கப்பட்ட ஆவணங்கள் எவை? இவை அனைத்தும் விஜய் அரசியலுக்கு எதிரான சதியின் தடயங்கள்" என விமர்சித்துள்ளனர்.

மறுபுறம், தமிழக அரசு மற்றும் காவல்துறை இதை மறுத்து, "அரசு பொறுப்புடன் செயல்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றோம். கூட்ட நெரிசல் விஜயின் தாமதமான வருகையாலும், அதிகரித்த கூட்டத்தாலும் ஏற்பட்டது. இது டிவிகேவின் தவறு" என்று வாதிடுகிறது.

அரசு வட்டாரங்கள், "எஸ்.ஐ.டி. அலுவலக காலி செய்யும்போது தேவையற்ற ஆவணங்களை எரிப்பது வழக்கமான நடைமுறை. இது எந்த சதியும் இல்லை" என தெரிவித்துள்ளன. இதற்கிடையில், சிபிஐ வழக்கில் ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டிய நிலையில், எரிக்கப்பட்ட ஆவணங்கள் பற்றிய சர்ச்சை அரசுக்கு புதிய தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு உற்று நோக்குகின்றன. எதிர்க்கட்சிகள், "அரசு இயந்திரம் எப்போதும் பொறுமையாக செயல்படும், ஆனால் கரூர் சம்பவத்தில் துரித ரியாக்ஷன் காட்டியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என குற்றம் சாட்டுகின்றன.

குறிப்பாக, ஒரு உடலை உடற்கூராய்வு செய்ய 1.5 மணி நேரம் ஆகும். கரூர் அரசு மருத்துவமனையில் இரண்டே இரண்டு டேபிள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 39 உடல்கள் எப்படி 4 மணி நேரத்தில் உடற்கூறாய்வு செய்து முடிக்கப்பட்டது. எனில், 12 நிமிடத்திற்கு ஒரு உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டதா..? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 32 ஜிபி பென்ட்ரைவில் என்ன இருந்தது என்பதும், எரிக்கப்பட்ட ஆவணங்கள் சம்பந்தப்பட்டவை என்பதும் தெரிய வரும் வரை, கரூர் விவகாரம் முடிவுக்கு வராது என்பது தெளிவு. சிபிஐ விசாரணை இதில் என்ன திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Summary : The Karur incident resurfaces with burned documents and a 32GB pendrive discovered outside the disbanded SIT office post-Supreme Court ruling. TVK alleges ruling party's conspiracy to engineer crowd chaos and sabotage Vijay's political entry. Government blames TVK's delay for the mishap, denying foul play amid CBI handover tensions.