உடலுறவு நேரத்தில் நான் இதை பண்ணேன்..! என்ன தயக்கம்..? ஜாய் ரங்கராஜ் வெளியிட்ட பகீர் வீடியோ..!

சென்னை, நவம்பர் 6, 2025 : தமிழ்நாட்டின் பிரபல சமூக ஆர்வலர் மற்றும் மாதம்பட்டி ரங்கராஜின் முன்னாள் துணைவி ஜாய் கிரிசில்டா, தனது புதிய வீடியோவில் ரங்கராஜை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரங்கராஜின் சமீபத்திய அறிக்கையை மறுத்து, தங்கள் உறவின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தியுள்ள ஜாய், டிஎன்ஏ டெஸ்டுக்கு தயாராக இருக்குமாறு அவரை சவால் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

வீடியோவில் ஜாய் கிரிசில்டா கூறியது: "அனைவருக்கும் வணக்கம். இந்த வீடியோவை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்பதை தெரிவிக்கிறேன். நடந்த இந்த இஷ்யூவைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். நேற்று ஓமன் கமிஷனர் அவர்களின் அறிக்கை வெளியானது. அது மீடியாவில் வெளியிடப்பட்டது. உண்மையான விசாரணையில் ரங்கராஜ் ஒத்துக்கொண்டார்.

'என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்' என்று சொன்னார். டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம் என்றும் அவர் தானே கூறினார்."ஆனால், ரங்கராஜின் சமீபத்திய அறிக்கையில், தனது திருமணம் 'பிளாக்மெயில்' காரணமாக நடந்ததாகவும், குழந்தை தனது குழந்தை இல்லை என்றும் கூறியிருந்ததை ஜாய் மறுத்துள்ளார். "அந்த விசாரணை அறைக்குள்ள ரங்கராஜ் 'இது என் குழந்தைதான்.

டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம்' என்று சொன்னார். ஆனால் இப்போது வெளியில் வந்து வேறு பேசுகிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் கோயம்புத்தூரில் ரூமர்கள் பரப்புகிறார்கள். 'இது ரங்கராஜின் குழந்தை இல்லை' என்று சொல்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன உரிமை? இரண்டு வருடங்கள் அங்கு என்ன போனீர்கள்?" என்று ஜாய் கேள்வி எழுப்பினார்.ஜாய், தனது கையில் உள்ள ஆதாரங்களை வெளிப்படுத்தினார். "எனக்கும் ரங்கராஜுக்கும் இடையே நடந்த சாட் உரையாடல்கள், 1000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இருக்கின்றன.

அவற்றில் 'லவ் யூ பொண்டாட்டி', 'நான் உன்னை இழக்க மாட்டேன்', '12 வருடங்களுக்குப் பிறகு நீ எனக்கு சோல்மேட்' என்று அன்பான செய்திகள் நிறைந்துள்ளன. அவை பிளாக்மெயிலா? பாதி செல்பீக்கள் அவர் தானே எடுத்துள்ளார். பிறந்தநாள் வீடியோக்களை பாருங்கள் – அது பிளாக்மெயிலா?" என்று அவர் கூறினார்.

ரங்கராஜின் குடும்பத்தினர் பரப்பும் ரூமர்களை ஜாய் கடுமையாக விமர்சித்தார். "அவர்கள் 'குடும்பத்தினர் பேச விடமாட்டார்கள், பிசினஸ் கெட்டுவிடும்' என்று சொல்கிறார்கள். நீங்கள் 10 பெண்களை 'யூஸ் அண்ட் த்ரோ' செய்தால், பிசினஸ் காரணமாகவா சொல்வீர்கள்? உங்கள் குழந்தை NICU-யில் போராடுகிறது.

அதை கொச்சைப்படுத்தி அறிக்கை விடுவது சரியா? அந்த கண்ணீர், சாபம் உங்களை விடாது," என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.தனது கர்ப்ப கால ஈனைகளையும் ஜாய் பகிர்ந்தார். "எனது முதல் டெலிவரி நார்மல். இரண்டாவது சி-செக்ஷன் ஆனது ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஸ்ட்ரெஸ் காரணமாகவே. அவர்கள் டிஃபமேஷன் கேஸ், பர்சனாலிட்டி சூட் போட்டு அலைந்தனர்.

கடைசி கட்ட கர்ப்பத்தில் நான் கோர்ட்டுகளில் ஓடினேன். டாக்டர்கள் திட்டினர். வாட்டர் பிரேக் ஆகி எமர்ஜென்சி போனேன். சி-செக்ஷன் பெயினை அனுபவித்த அனைத்து தாய்மார்களையும் நான் கையெடுத்து கும்பிடுகிறேன். குழந்தையை பார்க்கவும், மீட் பண்ணவும் முடியவில்லை.

"வீடியோவின் முடிவில், ஜாய் ரங்கராஜை நேரடியாக சவால் விடுத்தார்: "உண்மையான ஆணாக இருந்தால், விசாரணை அறையில் சொன்னதை மீறி பொய் பேசாதீர்கள். டிஎன்ஏ டெஸ்டுக்கு தயாராக இருங்கள். 3-4 நாட்களில் ரிசல்ட் வரும். நான் எக்ஸ்ட்ரீம் லெவலில் ஃபைட் செய்வேன்.

என்னை மிரட்டி கல்யாணம் பண்ணா ஜாய் கிரிசில்டான்னு சொல்லுறியே.. அதே மாதிரி உடலுறவும் என்னை மிரட்டி தான் பண்ணான்னு சொல்லேன் பாப்போம். உடலுறவும் இப்படித்தான் நடந்துச்சுன்னு சொல்றதுல உனக்கு என்ன தயக்கம். அது ஏன் உன் வாய்ல இருந்த வரல. 

உங்கள் குழந்தை NICU-யில் இருக்கும் போது, அதை கொச்சைப்படுத்துவது உங்கள் மனசாட்சியை தொடாதா? தைரியமாக வாருங்கள், பேசுங்கள்."இந்த விவகாரம், 2023-ல் தொடங்கிய ரங்கராஜ்-ஜாய் உறவு சர்ச்சையுடன் தொடர்கிறது. 

உமன் கமிஷன் விசாரணையில் ரங்கராஜ் திருமணத்தை ஒப்புக்கொண்டாலும், சமீபத்தில் அது 'பிளாக்மெயில்' என்று மறுத்தது சர்ச்சையை தூண்டியுள்ளது.

ஜாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே ஆதரவு மற்றும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜ் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

Summary in English : Joy Crizilda released a video refuting Rangaraj's claim that their marriage was due to blackmail, insisting he admitted it willingly during the Women's Commission investigation and rejected DNA testing for their child. She demands a DNA test now, sharing evidence like loving messages, photos, and videos proving genuine affection, while condemning his family's rumors and the child's NICU suffering.