வடக்கு காதலியை வரவழைத்து தமிழ்நாட்டில் போட்ட “ஸ்கெட்ச்” தமிழ் சினிமா பாணியில் அரங்கேறிய கொடூரம்..!

சென்னை, நவம்பர் 23 : கொளத்தூர், பூம்புகார் நகர் 12வது தெரு. மதிய நேரம். சூரிய ஒளி கொளுத்தும். ஆனால் ராஜசேகரின் வீட்டில் குளிர்ந்த அமைதி மட்டுமே நிலவியது.

ராஜசேகரும் மனைவியும் வேலைக்குப் போய்விட்டனர். மகள் ஐஸ்வர்யா ராயப்பேட்டையில் தன் டீ கடையைத் திறந்து வியாபாரத்தில் மூழ்கியிருந்தாள்.

வீட்டின் முன் கதவு திறந்தது.

ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். வட இந்திய முகம். சாதாரண சேலை. கையில் ஒரு சாவி. அவள் சாவியை சுழற்றி, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். பூட்டில் ஒரு சத்தம்கூட இல்லை.

அவள் நேராக பீரோவைத் திறந்தாள். மூன்று சவரன் நகை. பணம் பன்னிரண்டாயிரம். எல்லாவற்றையும் ஒரு கைப்பையில் போட்டுக்கொண்டு, மீண்டும் கதவை பூட்டிவிட்டு நழுவினாள்.யாருக்கும் தெரியவில்லை.மாலை ஆறு மணி.

ராஜசேகர் வீடு திரும்பினார். கதவைத் திறக்கும்போதே ஏதோ தவறு என்று உணர்ந்தார். உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி.

பீரோ திறந்திருந்தது. நகை இல்லை. பணம் இல்லை.

“யாரும் பூட்டை உடைக்கவில்லையே… எப்படி?” என்று மனைவியிடம் கேட்டார்.கொளத்தூர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கை எடுத்தார். சிசிடிவி பார்த்தார்.

ஒரு பெண் சாவியால் கதவைத் திறப்பது தெரிந்தது.“சாவி இருக்கிறது என்றால்… இது இன்சைட் ஜாப்” என்று ரவிச்சந்திரன் சிரித்தார்.

விசாரணை தொடங்கியது.

ராஜசேகர் சொன்னார், “சார், சில நாட்களுக்கு முன் என் பையில் இருந்து ஒரு சாவி காணாமல் போய்விட்டது. மாற்று சாவி தான் இப்போ பயன்படுத்துறேன்.”

ரவிச்சந்திரன் கண்கள் கூர்மையாயின.“யார் யார் இந்த வீட்டுக்கு வந்து போவாங்க?”

எல்லோர் வாயில் இருந்தும், ஐஸ்வர்யாவின் டீ கடையில் வேலை செய்யும் ஆகாஷ் பெயர் வந்தது. மும்பைக்காரன். ஜென்டில்மென். எப்போதும் புன்னகை. ஐஸ்வர்யாவிடம் நன்றாகப் பழகுவான்.

தூக்கிட்டு வாங்கடா அந்த தங்கத்த.. என்று சிரித்தார் ரவிச்சந்திரன்.

ஆனால், ட்விஸ்ட்.. திருட்டு நடந்த நாளில் நான் மும்பை போய்விட்டான் சார், “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை சார்” என்று செண்டிமெண்ட் அடித்தான்.

ரவிச்சந்திரன் சிரித்தார்.

இவனோட செண்டிமெண்ட் நமக்கு வேண்டாம். செல்போன் டவர் லொகேஷன் எங்க காட்டுதுன்னு பாருங்க என்ற உத்தரவு.

செல்போன் பயன்பாட்டை டிராக் செய்ததில் ஆகாஷ் சென்னையில் தான் இருக்கிறான் தெரிந்தது. திருட்டு நடந்த நாளில் அவன் மும்பையில் தான் இருந்துள்ளான்.

உஷாரான ஆகாஷ் மீண்டும் மும்பை தப்பி செல்ல முயன்ற போது, சென்ட்ரல் ஸ்டேஷனில் வைத்து லபக்கினார்கள் காவல் துறையினர்.

விசாரணையில் உடைந்து போனான் ஆகாஷ்.“நான் தான் சாவியைத் திருடினேன். ஐஸ்வர்யா கடையில் வேலை செய்யும்போது ராஜசேகர் அங்கு வந்தார். அப்போ அவர் பையில் இருந்து சாவியை எடுத்தேன். டூப்ளிகேட் செய்து, அசலை திரும்பவும் அங்கேரே வைத்தேன்.”

“பிறகு?”

“என் தம்பி ஆதீஷையும், என் நண்பனின் காதலி சபீனாவையும் சென்னைக்கு வரச் சொன்னேன். சபீனா தான் வீட்டுக்குள் போனாள். நான் வீடியோ காலில் இருந்து அவளுக்கு வழி காட்டினேன். எங்க நகை இருக்கு, எங்க பணம் இருக்கு… எல்லாம் சொன்னேன்.”

“நீ மும்பை போனது?”

“சந்தேகம் வராம இருக்கத்தான் போனேன். திருட்டு முடிஞ்சதும் நகையை வாங்கிக்கிட்டு சென்னை திரும்பினேன்.”

ரவிச்சந்திரன் ஒரு நீண்ட சிரிப்பு சிரித்தார்.

“1985-ல் வந்த ‘சாவி’ படம் பார்த்தியா ஆகாஷ்? சத்யராஜ் சாவியை வைத்து பிளான் போட்டு இறுதியில் சிக்கிக்கிறாரே… நீ அதே பிளான் தானே?”ஆகாஷ் தலையைத் தொங்க போட்டான்.

மூன்று பேரும் கைது. நகையில் இரண்டரை சவரன் மீட்கப்பட்டது.வழக்கு பதிவு. நீதிமன்றம். சிறை.

வீட்டு வாசலில் ராஜசேகர் நின்று பார்த்தார்.“இவ்வளவு நம்பிக்கை வைத்து… என் மகள் கடையில் வேலைக்கு வைத்தோம்…”

ரவிச்சந்திரன் தோள் தட்டினார்.“சார், சாவி ஒன்னு இருந்தா போதும்… கொலை செய்யவும் முடியும், கொள்ளையடிக்கவும் முடியும். ஆனா இறுதியில்… சாவி யாரிடம் இருக்குன்னு போலீஸால் கண்டுபிடிக்கவும் முடியும்.”

இரவு கொளத்தூர் அமைதியானது. ஆனால், பாருங்க மக்களே, ஒரு சின்ன சாவி… ஒரு பெரிய கதையை எழுதி முடித்துவிட்டது.

சோ, இனிமே சாவி தொலைந்து விட்டால், ஸ்பேர் சாவியை பயன்படுத்துவதை விட்டுவிட்டு பூட்டை மாற்ற பழக்கிக்கோங்க. நம் சொத்து, நம் உழைப்பு, நம் இரதம், நம் வியர்வை, நம் எதிர்காலம். சிறு தவறு, இது அனைத்தும் வேறு ஒருவரின் கைக்கு சென்று விட வாய்ப்புண்டு.

என்ன சரிதானே..!

Summary : A Mumbai youth working at a Chennai tea shop steals a house key duplicate, plans a perfect theft inspired by the Tamil film Saavi (remake of Dial M for Murder). He sends accomplices to rob the house while pretending to be away. Police trace the key plot and arrest him and his team.