நடுரோட்டில் தூய்மை பணியாளர் முன் ஜிப்பை திறந்து அசிங்கம்.. தீயாய் பரவும் கண்றாவி வீடியோ..!

சென்னை, நவம்பர் 10: சென்னை அடையார் பகுதியில், இரவு நேர தூய்மைப் பணியில் ஈடுபட்ட 50 வயது பெண்ணை பார்த்து, 25 வயது இளைஞன் சாலையோரம் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, பேண்ட் ஜிப்பை கழற்றி சுய இன்பம் செய்த சம்பவம், வீடியோ காட்சிகளாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர், தனது அனுபவத்தை விவரிக்கும் போது, “சின்ன பையன், நான் ரோட்ல பெருக்கிட்டு வரேன்... வண்டிய வந்து நிறுத்துனான்.. கொஞ்சம் வண்டிய நகர்த்து கண்ணு.. நான் குப்பையை அந்த பக்கமா பெருக்கணும்..ன்னு சொன்னேன்.. உடனே ஜிப்பை கழட்டி அவனுடைய அந்தரங்க உறுப்பை வெளியே எடுத்து என்கிட்ட வந்து அப்படி இப்படின்னு ஆட்டினான்.. உடனே.. எனக்கு பதட்டமாகிடுச்சு.. உடனே கையில வச்சு இந்த கொம்பு எடுத்து சரியான அடி அடிச்சிட்டேன்!” என்று கூறி, கண்ணீர் விட்டார். 

இந்நிகழ்வு, தூய்மைப் பணியாளர்கள் – குறிப்பாக பெண்கள் – மீதான பாதுகாப்பின்மை குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

சம்பவ விவரம்: திடீர் தாக்குதல், துணிச்சலான எதிர்ப்பு

திடீர் அதிர்ச்சியில் இருந்தாலும், துணிச்சலுடன் எதிர்க்கொண்ட ராதா, “எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க.. சின்ன பையன்... கையில வச்சு இந்த கொம்பு எடுத்து சரியான அடி அடிச்சிட்டேன். நான் அடிச்சிட்டேன். மனசு ரொம்ப வேதனை, அப்ப கை கால்ல பட படன்னு உதரல் எடுத்துச்சு,” “ என் குழந்தைங்க மாதிரிதான் அந்த பையனையும் நான் பாத்தேன்.. ஆனா.. இப்படி பண்ணுறத பாத்ததும் என்ன சொல்ற்றதுன்னே தெரியல..” என்று குற்றம் சாட்டினார்.

அந்த இளைஞன், “நல்லா டீசன்ட்டா அழகா இருக்கறான்... காலேஜ் ஸ்டூடென்ட் மாதிரி... 25 வயசுதான் இருக்கும்,” என்று ராதா விவரித்தார். அவர், “ஏன் இந்த மாதிரி பண்ணான்னுதான் எனக்கு தெரியல. காமவெறி புடிச்சி போய் ஏதோ மாத்திரை போட்டு வந்துச்சா என்னன்னு தெரியல,” என்று சந்தேகம் தெரிவித்தார்.

Summary : In Chennai's Adyar, a 50-year-old female sanitation worker was horrified when a 25-year-old youth parked his bike roadside during her night shift, unzipped his pants, and masturbated publicly. Shocked but brave, she struck him with her broom and chased him away. The viral video exposes severe safety risks for women in low-wage night jobs, amid economic hardships post-COVID. She demands better protection, highlighting similar incidents affecting multiple workers. Police have filed a complaint using dashcam footage.