இந்தூர், ஜனவரி 29, 2021 (புதுப்பிப்பு: நவம்பர் 25, 2025) : ஒரு அமைதியான மாலை நேரம்... லசுடியா பகுதியின் க்யான்ஷீல் சூப்பர் சிட்டி என்ற அழகிய இடம்... ஆனால், அங்கு நடந்தது ஒரு இரத்தக் களம்!
26 வயது இளம் தாய் பிரியா அகர்வால், தனது 6 வயது சிறு மகளின் கண்முன்னேயே கத்தரிக்கோலால் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவம், அப்பகுதி மக்களை இன்னும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சமூக வலைதளங்களின் ஆபத்தான உலகம் எப்படி ஒரு அப்பாவி வாழ்க்கையை நரகமாக்கியது என்பது, இந்தக் கதையின் பின்னணியில் உள்ளது. பிரியா அகர்வால் – ஒரு அடக்கமான இல்லத்தரசி, அன்பான தாய்.
காலை எழுந்து கணவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து, அவரை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, தனது சிறு மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் அழைத்து வருவது – இதுவே அவரது அமைதியான உலகம்.
ஆனால், தனிமையின் சலிப்பை போக்க, கணவரிடம் கேட்டு வாங்கிய ஸ்மார்ட்போன், அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. சமூக வலைதளங்களில் தொடங்கிய அறிமுகங்கள், நாளடைவில் சௌரப் (எ) கோலு கோத்ரே என்ற 25 வயது இளைஞனுடன் கள்ளக்காதலாக உருமாறியது.
ஏழு மாதங்கள் நீடித்த இந்த தகாத உறவு, பிரியாவின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் கண்டித்ததும், பிரியா மனமாற்றம் அடைந்து சௌரப்பை தவிர்க்கத் தொடங்கினார். ஆனால், இது சௌரப்பின் கோபத்தை தூண்டியது – அவன் ஒரு கொடூர கொலையைத் திட்டமிட்டான்!
ஜனவரி 28, வியாழக்கிழமை மாலை 7 மணி... சௌரப், பிரியாவை போன் செய்து, ஒரு வெற்று இடத்துக்கு வரும்படி அழைத்தான். அப்பாவியாக நம்பி, தனது மகளுடன் சென்ற பிரியா, அங்கு காத்திருந்த மரணத்தை எதிர்பார்க்கவில்லை.

வாக்குவாதம் தொடங்கியது: "நீ என்னுடன் சரியாக பேசவில்லை, தவறாக நடந்துகொண்டாய்!" என்று கத்திய சௌரப், கையில் இருந்த கத்தரிக்கோலால் பிரியாவின் கழுத்திலும் முகத்திலும் பலமுறை குத்தினான். இரத்தம் பீய்ச்சி அடித்தது! வலியில் துடித்த பிரியா, அருகிலுள்ள மளிகை கடையின் படிக்கட்டுகளை நோக்கி ஓடினார்.
அவரது உடலில் இருந்து சொட்டும் இரத்தம், 13 அடி நீளத்துக்கு ஒரு பயங்கர இரத்தத் தடத்தை உருவாக்கியது. அவரது செருப்புகள் கொலை நடந்த இடத்திலேயே விழுந்து கிடந்தன. ஆனால், இதைவிட இதயத்தை உலுக்கும் காட்சி: அந்த 6 வயது சிறுமி, என்ன நடக்கிறது என்று தெரியாமல், அம்மாவை நோக்கி ஓடி வந்தாள்.
உயிருக்குப் போராடும் பிரியா, தனது கடைசி மூச்சில் கூட மகளைப் பாதுகாக்க முயன்றார் – "கிட்ட வராத செல்லம்... அங்கேயே நில்லு!" என்று போல, அவளை தள்ளி வைத்தார். கொலையாளி சௌரப்? அமைதியாக தனது ஸ்கூட்டரில் ஏறி, வேகமாக தப்பி ஓடினான். ஆனால், இந்த முழு கொடூரக் காட்சியும் அருகிலுள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ, பார்ப்பவர்களின் இதயத்தை பிழியும் வகையில் உள்ளது – பிரியா, கொலையாளியை கண் கொட்டாமல் பார்த்தபடியே சுருண்டு விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியா, ஏற்கனவே உயிர் பிரிந்திருந்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு, சௌரப்பை கைது செய்தனர்.

அவன் குடிபோதையில் இருந்தபோது, "அவள் என்னுடன் பேசவில்லை என்பதால் கொன்றேன்" என்று கூறியதாக தகவல். இந்த சம்பவம், சமூக வலைதளங்களின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
இதுகுறித்து, பிரியாவின் கணவர், என் மனைவி வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து, என்னுடைய மகளுக்காக அதனை மறந்து, மன்னித்து வாழ்ந்தேன். ஆனால், நான் கண்டித்த பிறகும் என் மனைவி அவனுடன் அவனுடைய வீட்டிற்கே சென்று தொடர்பில் இருந்திருக்கிறாள். என் மனைவி கொலை பற்றி நான் புகார் கொடுக்க மாட்டேன்.
காவல் துறை என்ன செய்கிறதோ.. சட்டம் என்ன செய்கிறதோ.. செய்து கொள்ளட்டும், என் மகளை வளர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு உள்ளது. என்ன விடுங்கள் என கண்ணீருடன் சென்றார்.
அறிமுகங்கள் எப்படி ஆபத்தாக மாறும்? தாயை இழந்த பெண் குழந்தையின் எதிர்காலத்தை சிந்தித்து கூட பார்க்க முடியவில்லை. குடும்பம் என்ற சொர்க்கத்தை மறந்து காமத்தை வாழ்க்கைத்துணையை தாண்டி வேறு ஒருவரிடம் தேடியதன் விளைவு தான் எவ்வளவு கொடூரம்.
Summary in English : In Indore's Gyansheel Super City, 26-year-old homemaker Priya Agarwal was brutally stabbed to death by her online lover Saurabh alias Golu Gothre in front of her 6-year-old daughter. Their seven-month illicit affair, sparked on social media, ended after her husband discovered it. Enraged, Saurabh attacked with scissors, fleeing as CCTV captured the horror, leaving a 13-foot blood trail.

