சின்ன பையன் கூட உறவு வைத்த டீச்சர்..! இறுதியில் அரங்கேறிய குலைநடுங்க வைக்கும் கொடூரம்..!

பெங்களூரு, நவம்பர் 20, 2025 (PTI) : கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா அருகேயுள்ள மேலுகோட்டை யோகநரசிம்மசுவாமி மலை அடிவாரத்தில் கடந்த ஆண்டு நடந்த ஆசிரியை தீபிகா (28) கொலை வழக்கு இன்றளவும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகாத உறவை மறுத்ததால் ஒருதலைக் காதலன் கொலை செய்த சம்பவம், பின்னர் பழிக்குப் பழி கொலையாகவும் மாறியது குறிப்பிடத்தக்கது.

கொலை நடந்தது எப்படி?

2024 ஜனவரி 20 அன்று மதியம் பாண்டவபுரா தாலூகா, மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தீபிகா வி. லோகேஷ் என்ற பெண் ஆசிரியை, பள்ளி முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பினார். 

மேலுகோட்டை மலை அடிவாரத்தில் அவரது ஸ்கூட்டி கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோவில் தீபிகாவும், அதே கிராமத்தைச் சேர்ந்த நிதீஷ் கவுடா (22) என்பவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பதிவாகியிருந்தது.

ஜனவரி 22 அன்று மலை அடிவாரத்தில் தீபிகாவின் உடல் அரை அடக்கம் செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடலை எரிக்க முயன்று புதைத்தது தெரியவந்தது.

கொலைக்கான காரணம்

போலீஸ் விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பழக்கமான நிதீஷ், தீபிகாவை “அக்கா” என அழைத்து இரண்டு ஆண்டுகளாக தகாத உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இது தீபிகாவின் கணவர் லோகேஷுக்கு தெரிந்ததால், நிதீஷுக்கு கிராம மூப்பர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தீபிகா உறவைத் துண்டித்ததால் ஆத்திரமடைந்த நிதீஷ், தனது பிறந்தநாளான ஜனவரி 20 அன்று தீபிகாவை மலைக்கு அழைத்து வாக்குவாதம் செய்து கொலை செய்தான். கொலை செய்ததை நிதீஷ் ஒப்புக்கொண்டான்.

குற்றவாளி கைது

உடல் கண்டெடுக்கப்பட்ட அதே நாளில் நிதீஷ் தப்பி ஓடினார். இரண்டு நாட்களில் ஹோஸ்பேட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழிக்குப் பழி கொலை (2025 மே)

வழக்கு விசாரணையின்போது நிதீஷ் ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தீபிகாவின் தந்தை வெங்கடேஷ் (56), நிதீஷின் தந்தை நரசிம்ம கவுடா (53)வை கத்தியால் குத்திக் கொலை செய்தார். வெங்கடேஷும் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

தீபிகா கொலை வழக்கு மாண்டியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவங்கள் கர்நாடகாவின் ஊரகப் பகுதிகளில் “கௌரவக் கொலை” மற்றும் தகாத உறவால் ஏற்படும் விபரீதங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்று உள்ளூர் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Summary : In Karnataka's Mandya district, 28-year-old teacher Deepika V Lokesh was brutally murdered in January 2024 by 22-year-old Nitheesh Gowda over an extramarital affair she ended. He bludgeoned her with a stone near Melukote hill and buried the body. Nitheesh was later granted bail; in revenge, Deepika’s father killed Nitheesh’s father in May 2025.