மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தகாத உறவு காரணமாக 14 வயது சிறுமி தனது உறவினருடன் தவறான முடிவை தேடிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளி, தனது உறவினர் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாகப் பழகி தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி சிறுமி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இது தொடர்பாக அவரது பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், 8-ம் தேதி உறவினரான அந்த கூலித் தொழிலாளி சிறுமியை அவரது வீட்டில் சந்தித்து சென்றுள்ளார். மறுநாள் (9-ம் தேதி) மீண்டும் சிறுமியும் அவரும் மாயமானார்கள்.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் தீவிரமாகத் தேடினர். இருவரையும் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், திருநகரி சாலையில் உள்ள மாந்தோப்பில் புடவையைப் பயன்படுத்தி இருவரும் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னை விட 32 வயது அதிகமான நபருடன் தகாத உறவு காரணமாக அவருடன் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவி கொடூர முடிவை தேடிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : In Sirkazhi near Mayiladuthurai, a 38-year-old man allegedly had an relationship with his school student relative, After she went missing and police launched a POCSO case, the duo feared separation and wrong decision. The incident has shocked the locality.


