அடங்காத உடலுறவு வெறி.. ஒரே நேரத்தில் இரண்டு பேர்.. சம்பந்தமே இல்லாமல் பலியான வடக்கு நண்பர்.. விசாரணையில் பகீர்...

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே படாளம் நடராஜபுரம் பகுதியில் திருமணத்தாண்டிய உறவு குறித்த தகராறு கொடூர முடிவுக்கு வழிவகுத்துள்ளது.

கணவரை கொலை செய்ய மது பாட்டிலில் விஷம் கலந்து கொடுத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மதுவை பகிர்ந்து குடித்த கணவரின் வடக்கு நண்பரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடராஜபுரத்தைச் சேர்ந்த சுகுமார் (வயது 45) செங்கல்பட்டில் கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தார்.

அவரது மனைவி கவிதா (36) அப்பகுதியில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவிதாவுக்கு அவரது பணியிடத்தில் ஒரு ஆண் சக ஊழியருடன் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சுகுமார், மனைவியை எச்சரித்து கண்டித்து வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு இதே பிரச்சினையால் தம்பதி பிரிந்தும் வாழ்ந்தனர்.

இந்நிலையில், கணவரின் தொடர் எதிர்ப்பால் ஆத்திரமடைந்த கவிதா, சுகுமாரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த சனிக்கிழமை, சுகுமாரின் அண்ணன் மணியிடம் 400 ரூபாய் கொடுத்து இரண்டு மது பாட்டில்கள் வாங்கி வரச் சொன்னார் கவிதா.

மணி வாங்கி வந்த பாட்டில்களில் ஒன்றை திருப்பிக் கொடுத்துவிட்டு, மற்றொன்றை வீட்டுக்கு எடுத்துச் சென்ற கவிதா, சிரஞ்ச் மூலம் அதில் விஷத்தை கலந்தார். ஞாயிற்றுக்கிழமை அந்த பாட்டிலை சுகுமாரிடம் கொடுத்தார். ஏற்கனவே மது அருந்தியிருந்த சுகுமார், அதை பத்திரமாக வைத்துக்கொண்டு திங்கட்கிழமை வேலைக்கு எடுத்துச் சென்றார்.

மதிய உணவு நேரத்தில் அவருடன் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நீண்டகால நண்பர் ஹரிலால் (40) மதுவில் பங்கு கேட்டார். இருவரும் சேர்ந்து அருந்தினர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்தனர். உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மருத்துவர்கள் சந்தேகமடைந்து படாளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் மதுவில் விஷம் கலந்தது தெரியவந்தது. கவிதாவை விசாரித்த போலீசார் முன்பு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கொலை வழக்குப்பதிவு செய்து கவிதாவை கைது செய்துள்ளனர். "எலி தான் காயுது, எலிப்புழுக்கை எதுக்கு காயுது" என்ற பழமொழிக்கு ஏற்ப, சம்பந்தமே இல்லாத வடக்கு நண்பர் ஹரிலால் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.

Summary : In Chengalpattu, Tamil Nadu, Kavitha (36) poisoned her husband Sukumar's (45) liquor bottle to kill him over his opposition to her extramarital affair. Sukumar shared the drink with his friend Harilal (40) at work, leading to both dying from poisoning. Kavitha confessed and was arrested.