லாட்ஜில் ஆடையின்றி சடலமாக கிடந்த இளம்பெண்னின் வாயில் அது எப்படி வந்தது..? விசாரணையில் வெளியாக திடுக்கிடும் தகவல்..!

லூதியானா, டிசம்பர் 15 : பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அரைநிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலையில் திடீர் திருப்பமாக, பெண்ணின் காதலனே கொலையாளியாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிக்கியது போலீசாருக்கு பெரிய க்ளூவாக அமைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மாலை, லூதியானா கிரெயின் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் (சேலம் தப்ரி பகுதி) இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, அரைநிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சடலத்தை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அறையில் இருந்த ஹேண்ட்பேக்கில் இருந்து பெண்ணின் அடையாளம் ரேகா (வயது 35) என தெரியவந்தது. ரேகா திருமணமானவர், இரு குழந்தைகளின் தாய், கணவரிடம் இருந்து பிரிந்து வசித்து வந்தார்.

அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அமித் நிஷாத் (வயது 25) என்பவருடன் ரேகாவுக்கு நெருக்கமான உறவு இருந்தது தெரியவந்தது. ஹோட்டல் ரசீதில் அமித் கொடுத்த ஆதார் கார்டு விவரங்கள் மூலமும், சிசிடிவி காட்சிகள் மூலமும் போலீசார் அமித்தை தீவிரமாக தேடினர்.

அமித் தீவிர காயங்களுடன் சண்டிகரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. அங்கிருந்து அவர் சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

ரேகாவும் அமித்தும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அடிக்கடி ஹோட்டல்களில் சந்தித்து உறவு வைத்துக் கொண்டனர். இந்த சம்பவத்தன்று மதியம் 12.30 மணிக்கு ஹோட்டலில் அறை எடுத்து சென்றுள்ளனர். அங்கு உறவுக்குப் பிறகு, ரேகா அமித்தை திருமணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அமித் மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கோபமடைந்த ரேகா கொடூரமான திட்டம் ஒன்றை தீட்டினார். கோபத்தை மறைத்து அவருடன் உல்லாசத்திற்கு தயாரனானார்.

உல்லாசமாக இருந்த போது, அமித் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்தரங்க உறுப்பு துண்டாகும் அளவுக்கு கடுமையாக கடித்துள்ளார். தாங்க முடியாத வலியில் ஆத்திரமடைந்த அமித், ரேகாவை கீழே தள்ளி கழுத்த்தின் மீது கால்களால் வைத்து அழுத்தியுள்ளார். அதன் பிறகு, கழுத்தை பிடித்து நெரித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து சொட்டும் ரத்தத்தை மறைத்து தப்பி மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

கொலை நடந்து சில நிமிடங்களில் அமித் தனியாக ஹோட்டலை விட்டு வெளியேறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கைதான அமித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காயங்கள் தீவிரமானவை என போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருடைய வாயில் அமித்தின் ரத்தம் இருந்துள்ளது. மேலும், சிறிது ரத்தத்தை அவர் விழுங்கியும் உள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்தாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தகாத உறவு எல்லை மீறும்போது ஏற்படும் ஆபத்தை உணர்த்துவதாக உள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற உறவுகள் பல குடும்பங்களை சீரழித்து, உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன என்பது இந்த கொடூர சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது!

Summary in English : In Ludhiana, a married woman named Rekha (35) was murdered in a hotel room by her lover Amit (25) after a heated argument. Rekha demanded marriage; Amit refused. She attacked his private parts with a knife, enraging him. He strangled and stabbed her before fleeing. Police arrested Amit from a hospital where he was treated for injuries.