நண்பர்களே, வாழ்க்கையில் நாம் அனைவரும் பல அனுபவங்களைச் சந்திக்கிறோம். சில இனிமையானவை, சில கசப்பானவை. ஆனால் சில அனுபவங்கள் – குறிப்பாக நம்மை அறியாமல் ஏற்படும் தவறுகள் அல்லது மோசமான சூழல்களில் சிக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் – நமக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஒரு பெரிய பாடமாக அமையக்கூடியவை.
நம்முடைய தமிழகம் தளத்தில் இப்போது ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களில் நடந்த ஏதேனும் ஒரு மோசமான சம்பவத்தை – அது ஒரு தவறான முடிவு, ஏமாற்று, ஆபத்தான சூழல் அல்லது விளையாட்டாகத் தொடங்கி பெரிய சிக்கலாக மாறிய நிகழ்வுகளை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

தேர்வு செய்யப்படும் கதைகள் தளத்தில் வெளியிடப்படும். உங்கள் ரகசியங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும். கதையில் வரும் நபர்களின் பெயர்களும், நடந்த இடங்களும் மாற்றப்பட்டு வெளியிடப்படும்.
இந்த முயற்சியின் நோக்கம் ஒன்றே: ஒருவருடைய தவறில் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சூழல்களை எப்படி முன்கூட்டியே அடையாளம் கண்டு தவிர்ப்பது? எப்படி தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது? விளையாட்டாகத் தொடங்கும் சிறிய செயல்கள் எப்படி பெரிய குற்றச்சம்பவங்களாக உருமாறலாம் என்பதை உணர்த்துவது.
பலர் தவறைச் செய்த பிறகுதான் அதன் விளைவை உணர்கிறார்கள். ஆனால் உங்கள் கதையைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், வேறு ஒருவருக்கு முன்கூட்டியே தெளிவு கிடைக்கலாம். இதன்மூலம் சமூகத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கு ஒரு சிறிய பங்களிப்பை நாம் அனைவரும் செய்யலாம்.
இந்தத் தொடரின் முதல் கதையை, ஒரு வாசகர் அனுப்பிய உண்மைச் சம்பவத்தை (பெயர்களும் இடங்களும் மாற்றப்பட்டு) கீழே படியுங்கள். இதிலிருந்து நீங்கள் என்ன பாடத்தைக் கற்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும், உங்களுடைய அனுபவக் கதையை அனுப்ப விரும்பினால், எங்களுடைய மின்னஞ்சலுக்கு (tamizhakamtn@gmail.com) அனுப்புங்கள்.
வாருங்கள், ஒன்றிணைந்து ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம்!
இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகும் இந்த அனுபவம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருடைய நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். பெயர்கள் மற்றும் இடங்களை மாற்றி, ரகசியத்தைப் பாதுகாத்து கதை வடிவில் சொல்கிறோம். இது ஒரு எச்சரிக்கைக் கதை – சிறு விளையாட்டாகத் தோன்றும் உறவுகள் எப்படி வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதை உணர்த்தும்.
சந்தோஷ் கூறியதாவது,
என் நண்பன் விக்ரம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்போது 28 வயது இளைஞன். வங்கியில் கடன் வசூல் ஏஜெண்டாக வேலை செய்தான். கடன் திரும்பப் பெறுவதில் அவன் ஒரு கெட்டிக்காரன். அவன் திறமையைப் பார்த்து பல வங்கிகள் அவனைத் தொடர்பு கொண்டு உதவி கேட்கும். மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்தான். விரைவில் கார் வாங்கினான், வாழ்க்கை வேகமாக முன்னேறியது.
இப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது. கணவனை விபத்தில் இழந்த 48 வயது பெண்மணி ஒருவருடன் (இனி அவரை சீதா என்று சொல்வோம்) பழக்கம் ஏற்பட்டது. சீதாவின் வயது என்னவோ 48 தான். ஆனால், பார்பதற்கு 30 வயது பெண் போல இளைமையாக இருப்பார். சினிமா நடிகை போல அழகு.
சீதாவின் கணவர் இறந்த பிறகு, அவர்களுக்கு இருந்த வீட்டுக் கடனின் EMI கட்ட முடியாமல் தவித்தார். இன்சூரன்ஸ் தொகை கிடைக்க உதவி செய்ய விக்ரம் முன்வந்தான்.
தொடக்கத்தில் உதவி மட்டுமே. பிறகு நட்பாக மாறியது. அடிக்கடி வீட்டுக்கு போவது, வெளியே சுற்றுவது என நெருக்கம் அதிகரித்தது.
விக்ரம் தன் சொந்தப் பணத்தில் சீதாவின் EMI-களை கட்ட ஆரம்பித்தான். எட்டு மாதங்கள் கழித்து இன்சூரன்ஸ் தொகை கிடைத்தது – கிட்டத்தட்ட 80 லட்ச ரூபாய்!
பணம் கைக்கு வந்ததும் சீதாவின் முகம் மாறியது. வீட்டுக் கடன் 35 லட்சத்தை ஒரே தவணையாக அடைத்தார். கடன் பிரச்சினையிலிருந்து விடுபட்டார். மேலும், நண்பர் விக்ரமுடனான தொடர்பைத் துண்டித்தார். எட்டு மாதங்களாக கட்டிய EMI பணத்தைத் திருப்பிக் கேட்ட போது, "ஆதாரம் இல்லை" என்று மறுத்துவிட்டார்.
விக்ரம் கடன் வசூலில் வல்லவன் தானே? அவன் தன் போனில் சீதாவுடன் தனிமையில் இருந்த போது எடுத்த படங்கள், வீடியோக்களை வைத்து மிரட்டினான். பணத்தைக் கொடுத்தால் பிரச்சினை முடியும் என்ற நினைப்பில். ஆனால், அது அங்கே நிற்கவில்லை. சீதாவைத் தொடர்ந்து தன் ஆசைக்கு இணங்க வற்புறுத்தினான்.
நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தன. ஒரு கட்டத்தில் சீதா விக்ரமைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் வயது வித்தியாசத்தைச் சொல்லி விக்ரம் மறுத்துவிட்டான். இது சீதாவைக் கோபமூட்டியது.
ஒரு நாள், சீதா விக்ரமை தன் வீட்டுக்கு வரவழைத்தார். உடலுறவின் போது திடீரென விக்ரமின் ஆணுறுப்பைக் கடித்து பயங்கர காயம் ஏற்படுத்தினார். "இனிமே, நீ எந்தப் பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாதுடா" என்று சொல்லி கடுமையாகத் தாக்கினார்.
விக்ரம் ரத்த வெள்ளத்தில் துடித்தான். ஆம்புலன்ஸ் அழைக்காமல் என்னைத் தொடர்பு கொண்டான். நான் உடனே சென்று அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தேன். மருத்துவர்களிடம் தூங்கிக்கொண்டிருக்கும் போது "நாய் கடித்தது" என்று சொன்னோம். மருத்துவர்கள் சிகிச்சையை ஆரம்பித்தனர்.
ஆனால், இது மனிதன் கடித்தது என மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் அறிவுரையின் பேரில், போலீசில் புகார் கொடுத்தேன். சீதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விக்ரம் ஐந்து மாதங்கள் கடுமையான சிகிச்சைக்குப் பிறகு தேறினான். ஆனால் அந்தச் சம்பவம் அவன் வாழ்க்கையில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம்: விளையாட்டாகத் தொடங்கும் உறவுகள், ஆசைக்காகச் செய்யும் தவறுகள் எப்படி வினையாக மாறும் என்பது. சிறு தவறை மறைக்க அடுத்தடுத்துத் தவறுகள் செய்து, வாழ்க்கையையே இழக்க நேரிடும்.
எச்சரிக்கையுடன் இருப்போம். நம்பிக்கை, ஆதாரம் இல்லாமல் பெரிய உதவிகள் செய்யாதீர்கள். உறவுகளில் வயது, நோக்கம் ஆகியவற்றைச் சிந்தித்துச் செயல்படுங்கள்.
- சந்தோஷ் (மாமல்லபுரம்)
இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் இருந்தால், tamizhakamtn@gmail.com க்கு அனுப்புங்கள். ரகசியம் பாதுகாக்கப்படும், பெயர்கள் மாற்றப்படும்.நன்றி!
எச்சரிக்கையுடன் வாழ்வோம்.
தொடர்ந்து இது போன்ற உண்மைக்கதைகளை தவறாமல் பெற கீழே உள்ள தமிழகம் கிரைம் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்களேன்.
Summary in English : A 28-year-old debt collector helped a 48-year-old widow with her loan issues and insurance claim. Their friendship turned close, and he paid her EMIs for months. After receiving 80 lakhs in insurance, she cleared her debts but refused to repay him.
He pressured her using private photos, leading to ongoing demands. She later invited him over, caused severe injury during an intimate moment, and attacked him. He was hospitalized, police arrested her, and he recovered after months. This experience teaches caution in relationships and avoiding unchecked favors.


