அவள் பெயர் லதா. வயது ஐம்பது. இவளுக்கு இரண்டு பிள்ளைகள். மகள் ரேவதி கல்யாணமாகி சென்னையில் தன் கணவனோடு இருக்கிறாள். மகன், சூர்யா பெங்களூரில் IT வேலை பார்க்கிறான். கணவர் ராமநாதன் ஒரு சிறிய டிரான்ஸ்போர்ட் கம்பெனியை நடத்திக்கொண்டிருந்தார்.
இரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்கு வருவார். வரும்போதெல்லாம் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு தூங்கிப்போவார். பேச்சு, தொடுதல், பார்வை எதுவுமே இல்லை. உணவு உண்ணும் நேரம் மட்டும் கடமைக்கு "சாப்டியா..?" என பேசுவார் அவ்வளவு தான்.

லதாவுக்கு அந்த வெறுமை பழகிவிட்டது என்று அவளே நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் உண்மையில் பழகவில்லை.
அவளுக்கு ஒரு ரகசியம் இருந்தது.அது ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்பு.
அப்போது அவள் வீட்டுக்கு அடுத்த தெருவில் ஒரு புது குடும்பம் வந்து தங்கியது. கணவன்–மனைவி–இரண்டு குழந்தைகள். கணவன் பெயர் சரவணன். வயது நாற்பத்தி எட்டு. ஜிம்முக்கு போகும் உடல். 48 வயது என்றாலும் பார்பதற்கு 30 வயசு பையன் போன ஒரு இளமை. ஆனால், முகத்தில் ஒரு சோர்வு எப்போதும் இருக்கும்.
லதாவும் சரவணனும் முதலில் வெறும் “வணக்கம்” மட்டுமே பேசினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விசாரணை ஆரம்பமானது.
“பிள்ளைங்க எங்க படிக்கிறாங்க?” உங்க பூர்விகம் எது.. தொழில் எல்லாம் எப்படி போகுது..?
இப்படி சாதாரணமான வார்த்தைகளில் ஆரம்பித்த உரையாடல், ஒரு நாள் மாலை 6 மணிக்கு தெரு முனையில் நின்றபோது மாறியது.
சரவணன் சொன்னான்,உங்க கிட்ட சொல்லனும்ன்னு தோணுது.. “என் பொண்டாட்டி என்னைத் தொடவே இல்லை.. அவளுக்கு காலில் வலி ஆரம்பிச்சதில் இருந்து, அதை பரமாரிக்கவே அவளுக்கு நேரம் சரியா இருக்கு.. கடந்த ஆறு வருஷமா.. இது தான் நிலைமை..”
லதா ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் கண்கள் சொல்லின.
“என் ஆளும் அதேதான்.”அன்றிலிருந்து அவர்கள் இருவரும் ஒரு மௌன ஒப்பந்தத்தில் இறங்கினார்கள்.
முதலில் வீட்டு மாடியில், பின்னர் அவன் வீட்டு டெரஸில், பிறகு இரவு 11 மணிக்கு பின் அவன் காருக்குள், சில சமயம் ஓரமான ஹோட்டல் ரூமில் அவர்கள் உல்லாச உலகத்திற்குள் சென்று தங்களின் தனிமையை போக்கி கொண்டார்கள். ஆனால் அதை விட அதிகமாக — ஒருவருக்கொருவர் தேவையானவர்களானார்கள்.லதாவுக்கு ஒரு விஷயம் தெரியும்.
இது காதல் இல்லை.இது பசி. இது தவறு, ஆனால் அந்தப் பசி மிகவும் உண்மையானது. ஒரு நாள் சரவணன் சொன்னான்,
“நம்ம ரெண்டு பேரும் இறந்த பிறகு யாருக்கும் தெரியப் போவதில்ல. ஆனா நமக்கு தெரியும்... நாம உயிரோட இருக்கும் போது இப்படியெல்லாம் இருந்தோம்ன்னு”
லதா சிரித்தாள். ஆமா, நீங்க எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பரிசு. காலம் முழுதும் உங்க கூட இருக்க ஆசை தான். ஆனால், ஊர் ஒத்துக்குமா..? என்று சரவணன் மடியில் தலை சாய்ந்தாள்
ஆனால் ஒரு இரவு, அவள் கணவர் ராமநாதன் திடீரென முன்கூட்டியே வீட்டுக்கு வந்துவிட்டார். லதாவின் செயல்கள் குறித்து பக்கத்துக்கு வீட்டுக்கார நண்பர் ஒருவர் தொலைபேசியில் கூறியுள்ளார். அதிர்ந்து போன அவர், சர்ர்ரென வந்து காரை வெளியே நிறுத்தியதும், மாடிக்கு ஏறினார்.
லதா மாடியில், லதாவின் தலை சரவணன் மடியில்.. இந்த காட்சியை பார்த்த ராமநாதன் எதுவும் பேசவில்லை. அமைதியாக இறங்கி வீட்டுக்குள் சென்றார். லதாவின் கண்கள் குளமாகியது, மறுநாள் காலை லதா காபி எடுத்து வைத்தபோது, ராமநாதன் மெதுவாகச் சொன்னார்:
“இனிமே நீ எங்க வேணாலும் போ. ஆனா, வீட்டை விட்டு போகாத. பிள்ளைங்ககிட்ட சொல்ல வேண்டாம். அதே போல நானும் எதுவும் சொல்ல மாட்டேன். உன்னோட இந்த நிலைமைக்கு நான் மட்டுமே காரணம் என தெரியும்..”
லதா கண்ணீர் வடிக்கவில்லை. அவள் தலையசைத்தாள் மட்டுமே. இன்றும் அவள் சரவணனுடன் உல்லாசமாக இருக்கிறாள். அவள் கணவரும் வீட்டில் தான் இருக்கிறார்.
இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள் — ஆனால் வெவ்வேறு உலகங்களில்.
லதாவின் டார்க் சீக்ரெட் இது:அவள் ஐம்பது வயதில் கள்ளக்காதலனுடன் தனிமையில் கள்ளத்தொடர்பில் இருக்கிறாள். காரணம் என்னவென்றால், லதாவின் கணவர் ராமநாதனுக்கு படுக்கையறை விஷயங்களில் முற்றிலும் ஆர்வம் குறைந்து விட்டது, சிகிச்சைகள் மேற்கொண்டும் பயனில்லை.
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக.. பல நேரங்களில் வெக்கத்தை விட்டு லதாவே கூச்சமில்லாமல் கேட்டும், சொன்னா புரிஞ்சுக்கோ.. எனக்கு சுத்தமா விருப்பமே இல்ல.. ஆசையே வரல.. என்று தவிர்த்து விட்டார் ராமநாதன்.
ஆனால், லதா தன்னை கவனித்துக்கொள்ளவதில் எந்த குறையும் வைப்பதில்லை. வாய்க்கு ருசியான சாப்பாடு, உள்ளாடையாக இருந்தாலும் முகம் கோணாமல் துவைத்து கொடுப்பது, உடல் நிலை சரியில்லை என்றால் துடித்து போய் பரமாரித்துக்கொள்வது என மனைவிக்கு உண்டான சிறந்த அனைத்து அம்சங்களுடனும் தன்னை கவனித்துக்கொள்கிறாள்.
லதாவின் பசியை புரிந்து கொண்டு, அவளுடைய கள்ளக்காதலுக்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல் கண்டும் காணாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் ராமநாதன்.
இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது, இந்த கொடூரங்கள் அனைத்தையும் லதாவின் மகன் எப்படியே அறிந்து கொண்டான். என்ன நடக்கிறது இந்த வீட்டில்..? நாளை நம்ம குடும்பத்தை நம்பி எனக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க..? என்று தாய், தந்தை இருவரையும் கடிந்து கொண்டான்.
நாளுக்கு நாள் பிரச்சனை வளர்ந்தது. இதனால் மனமுடைந்த ராமநாதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். கணவன் இறந்த செய்தியை அறிந்து மயங்கினார் லதா. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.
அடுத்த நாள், மின்விசிறியில் ஒரு சடலம் தொங்கியது. ஆம், சரவணன் தான் அது. லதா-ராமநாதன் மறைவுக்கு பிறகு தன்னுடைய மனைவியிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டு மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார் சரவணன்.
சரவணனின் மனைவி நமக்கு எழுதிய உண்மை தான் மேலே நீங்கள் கதை வடிவில் படித்தீர்கள். சம்பவம் மட்டுமே உண்மை. பெயர்கள் அனைத்து கற்பனை.
இப்படியெல்லாம் நடக்குமா..? நிஜ வாழ்க்கை சில நேரங்களில் சினிமாவை விடவும் திருப்பங்கள் நிறைந்ததாக உள்ளதே..!
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது சம்பவம், உங்கள் மனதை உறுத்தும் சம்பவம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். tamizhakamtn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
Summary in English : Latha, a 50-year-old woman, lives in a silent marriage with her husband. She finds quiet companionship with her neighbor Saravanan, whose own marriage lacks closeness. Her husband discovers their secret but chooses silence, allowing her to continue while keeping the family intact.

