ஜனநாயகன் முன்பதிவு குறித்து சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்! அதிருது இண்டர்நெட்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் 69வது படமான ஜனநாயகன் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் அதிரடி திரில்லர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பாபி டியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4, 2026) தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகத்தில் முழு அளவிலான முன்பதிவு ஞாயிறு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 அன்று மாலை 6:45 மணிக்கு வெளியாக உள்ளது. இதன்பின் முன்பதிவு வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த வருவாய் பங்கீடு பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிவிஆர் போன்ற சங்கிலி திரையரங்குகளில் 55:45 விகிதமும், மல்டிபிளெக்ஸ்களில் 65:35 விகிதமும், ஒற்றைத் திரைகளில் 70:30 விகிதமும் என பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இதனால் முன்பதிவு தாமதமின்றி தொடங்க உள்ளது.

பொங்கல் ரிலீசில் ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படமும் வெளியாக உள்ளது. ஜனநாயகன் 600க்கும் மேற்பட்ட திரைகளிலும், பராசக்தி 500க்கும் மேற்பட்ட திரைகளிலும் தமிழகத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பராசக்தி படத்தின் சென்சார் முடிந்த பிறகே அதன் முன்பதிவு தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே வெளிநாடுகளில் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளை களைகட்ட போகும் ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Summary : Vijay's final film, Jananayagan, directed by H. Vinoth, is set for release on January 9, 2026, during Pongal. Online ticket booking begins this Sunday, January 4. Revenue sharing issues between distributors and theater owners have been resolved. The film will screen in over 600 theaters in Tamil Nadu, competing with Parasakthi.