திருப்பூரின் பாறைக்காடு பகுதியில், சிறிய வீடு ஒன்று அமைதியாக நின்றது. அந்த வீட்டில் வசித்த சிம்யா, 23 வயது இளம் தாய். அவளுக்கு ஒரு மூன்று வயது பெண் குழந்தை.
கணவர் பிரேம்குமார், டையிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். ஆனால், அவனது வாழ்க்கை மது பழக்கத்தால் சிதைந்து போயிருந்தது. தினமும் வீட்டுக்கு வந்ததும் குடித்துவிட்டு சண்டை போடுவான். சிம்யாவின் இதயம் புண்ணாகிக் கிடந்தது.

அவளது தந்தை ஆறுமுகம் (50), மதுரை ஏழுமலை பகுதியைச் சேர்ந்தவர். மகளும் பேரனும் தனியாக இருப்பதைப் பார்த்து, அவர்களுக்கு அருகிலேயே வீடு எடுத்துக் கொடுத்திருந்தார். "என் மகள் துன்பப்படக் கூடாது" என்று நினைத்துதான் அவர் அந்த வீட்டை ஏற்பாடு செய்தார்.
ஆனால், சிம்யாவின் வாழ்க்கை மாறத் தொடங்கியது – இன்ஸ்டாகிராமில்.
ஒரு நாள், கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன்குமார் (25) என்ற இளைஞன் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். சிரிப்புகள், பேச்சுகள், ஆறுதல்கள்... அது நாளடையில் காதலாக மாறியது. பிரவீன் அவளிடம் சொன்னான், "குடிகார கணவனோடு இப்படி துன்பப்பட வேண்டாம். மகளோடு என்னிடம் வா. நாம நல்லா வாழலாம்."
அந்த வார்த்தைகள் சிம்யாவின் மனதை ஆட்டிப் படைத்தன. கணவனின் அடி, தகராறு, தனிமை – எல்லாவற்றிலிருந்தும் தப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
கடந்த ஜனவரி 2-ம் தேதி, குழந்தையைத் தூக்கிக்கொண்டு சிம்யா வீட்டை விட்டு ஓடினாள். கன்னியாகுமரிக்குச் சென்று பிரவீனுடன் தங்கினாள். இவர் தான் உனக்கு இனிமே அப்பா என்று குழந்தைக்கு புதிய அப்பாவை காட்டினாள் சிம்யா.
பிரேம்குமார் தவித்தான். மனைவியும் மகளும் காணாமல் போய்விட்டனர். ஜனவரி 4-ம் தேதி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான். போலீசார் விரைந்து செயல்பட்டு, கன்னியாகுமரியில் சிம்யாவையும் குழந்தையையும் கண்டுபிடித்து மீட்டனர். ஜனவரி 20-ம் தேதி அவர்களை பெற்றோர் மற்றும் கணவரிடம் ஒப்படைத்தனர்.
வீடு திரும்பிய சிம்யா, தந்தையின் முன் நின்றாள். ஆறுமுகத்தின் மனதில் கொந்தளிப்பு. "உன்னை நான் எவ்வளவு நம்பி வளர்த்தேன்... இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிட்டு வந்து நிக்கிறியே.." என்று எண்ணினார்.
நேற்று மதியம் 12.30 மணியளவில், வீட்டில் இருந்த ஆறுமுகம் மகளிடம் கேட்டார்,
"கட்டிய கணவனை விட்டுவிட்டு ஏன் இப்படி வேறொருத்தனோடு போன? நம்ம குடும்பத்துக்கு எவ்ளோ பெரிய அசிங்கத்தை தேடி குடுத்துட்ட.."
சிம்யா பதிலுக்கு பதில் பேசினாள். வார்த்தைகள் உரத்தன. தகராறு முற்றியது.
ஆத்திரத்தில் கண்கள் சிவந்த ஆறுமுகம், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்தார். ஒரே நொடியில்... மகளின் கழுத்தில் அறுத்தார். ரத்தம் பொங்கியது. சிம்யா தரையில் சரிந்தாள். அவள் உயிர் பிரிந்தது.
ஆறுமுகம் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளைப் பார்த்து தாயும் அக்கம் பக்கத்தாரும் கதறினர்.
வீரபாண்டி போலீசார் விரைந்து வந்தனர். சிம்யாவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு கள்ளக்காதல்... ஒரு தந்தையின் கோபம்... ஒரு இளம் உயிர் பறிபோனது.
இன்று அந்த வீடு அமைதியாக இருக்கிறது. ஆனால், அங்கு எழுந்த ரத்த வாசனை என்றும் மறையாது. மறுபக்கம், இன்ஸ்டா கள்ளக்காதலன் பிரவீன் அடுத்த குடும்பத்தை கெடுக்கும் முயற்சியில் பிற இன்ஸ்டா பெண்களுக்கு மெசேஜ் செய்து கொண்டிருப்பான்.
இணையம் முழுக்க ஆயிரம் பிரவீன்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் பிரவீனிடமிருந்து அழைப்பு வரலாம். பெண்களே உஷார்!
Summary : In Tiruppur, a 23-year-old woman left her husband and child to join a man she met on Instagram. After being brought back home, an argument with her father led to a tragic incident in which she lost her life. The father was arrested by the police.

