அ.தி.மு.க கூட்டணியில் த.வெ.க..! விஜய் வைத்த மூன்று அதிரடி கோரிக்கை! தலைகீழாக மாறும் தமிழக அரசியல்!

சென்னை, ஜனவரி 3, 2026: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தரப்பில் முதலில் துணை முதல்வர் பதவி கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், அதிமுக இசைவு தெரிவிக்காததால், தற்போது அந்த கோரிக்கையிலிருந்து ஒரு படி பின்வாங்கி, முக்கிய இலாகாக்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய மூன்று இலாகாக்களை தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனித்துப் போட்டியிட்டால் இரு கட்சிகளுக்கும் பெரிய பின்னடைவு ஏற்பட்டு, திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வழிவகுக்கும் என்ற அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக கூறப்படுகிறது.

கள நிலவரத்தை உணர்ந்த தவெக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் 40 முதல் 45 இடங்கள் வரை வெற்றி பெற முடியும் என்றும், கட்சியினர் தேர்தல் அரசியலை கற்றுக்கொள்ளவும், களத்தை கையாளவும் உதவும் என்றும் கருதுவதாக தெரிகிறது.

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் 200 முதல் 220 இடங்கள் வரை வெற்றி பெற முடியும் எனவும், பிரச்சாரத்தை பொருத்து 234/234 என்ற Clean Sweep நடந்தாலும் ஆச்சரியமே இல்லை என்றும், பெரும்பாலான மக்கள் இந்த கூட்டணி அமைய வேண்டும் என விரும்புவதாகவும் சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில வாரங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தரப்பில் இந்த கூட்டணியை விரும்பாத நிலையில், தனித்துப் போட்டியிட்டால் இரு கட்சிகளுக்கும் சரிவு ஏற்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary in English : Talks between AIADMK and Tamilaga Vettri Kazhagam (TVK) for an alliance ahead of the 2026 Tamil Nadu Assembly elections are progressing.

TVK has stepped back from demanding the Deputy CM post and now seeks key portfolios like Education, Health, and Local Administration. Both parties recognize that contesting separately could benefit DMK, and an alliance may secure 200-220 seats.