நிஜாமாபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூர் மண்டலம் போர்காம் (கே) கிராமத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடி இறுதிச் சடங்குகளை முடித்த மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்லூர் பகுதியைச் சேர்ந்த பல்லாடி ரமேஷ் (35) தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சௌம்யா (அருணலதா) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

சௌம்யா நிஜாமாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகவோ அல்லது நிர்வாகப் பணியாளராகவோ பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த 25 வயதுடைய நாலேஷ்வர் திலீப் என்பவருடன் சௌம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
ஒரு முறை, படுக்கையறையை சுத்தம் செய்யும் போது மனைவி கையில் ஆணுறை பாக்கெட்டுகள் இருப்பதை பார்த்துள்ளார். ஆனால், இது நான் பயன்படுத்துவது அல்ல. எங்கிருந்து இந்த ஆணுறை வந்தது என கேட்ட போது.. எனக்கு என்ன தெரியும்.. நீங்க தான் வாங்கிட்டு வந்திருப்பீங்க.. மறந்து போயிருப்பீங்க என்று சமாளித்திருக்கிறார்சௌம்யா.
இந்நிலையில், வேலைக்கு சென்ற ரமேஷ் திடீரென வீடு திரும்பினார். வாசலில் ஒரு ஆணின் செருப்பு, திறந்திருந்த படுக்கையறை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த ரமேஷிற்கு காத்திருந்தது அதிர்ச்சி.
உள்ளே உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் மனைவி சௌமியா. உடன் இருந்ததுநாலேஷ்வர் திலீப். இருவரும் உல்லாசமாக இருந்தனர். சௌமியாவின் கைகள் திலீப்பை இறுக்கமாக அணைத்திருக்க, திலீப்பின் கரங்கள் சௌமியாவின் முன்னழகுடன் விளையாடிக்கொண்டிருந்தது.இதனை, பார்த்த ரமேஷ் கதறினார். அவர் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். சௌமியா அவமானத்தில் கூனி குனிந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சௌம்யா, தனது காதலன் திலீப்புடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினார். மேலும், ரமேஷ் பெயரில் சுமார் 30 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்பதால் அதனையும் குறிவைத்து இந்த கொலை திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் திலீப் காரில் ரமேஷை மோதி கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் ரமேஷ் சிறு காயங்களுடன் தப்பினார். இதைத் தொடர்ந்து சௌம்யா தனது தங்க மோதிரத்தை விற்று 35 ஆயிரம் ரூபாய் பணம் திரட்டி, கூலிப்படையினருக்கு கொடுத்து கொலைக்கு ஏற்பாடு செய்தார்.
கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி ரமேஷுக்கு தண்ணீரில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்த சௌம்யா, கூலிப்படையினரை அழைத்தார். அவர்கள் வராததால் திலீப்புக்கு தகவல் தெரிவித்தார். திலீப் தனது சகோதரர் அபிஷேக் உட்பட வந்து, ரமேஷின் கழுத்தை டவல் கொண்டு இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் ரமேஷ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி அவசரமாக இறுதிச் சடங்குகளை முடித்து உடலை புதைத்தார் சௌம்யா. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ரமேஷின் கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்டு, இஸ்ரேலில் வசிக்கும் ரமேஷின் தம்பி பல்லாடி கேதாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக மக்லூர் போலீசாருக்கு தொலைபேசியில் புகார் அளித்தார்.
என் அண்ணன் மரணத்தில் மர்மம் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் பிரச்சனை, மன நிம்மதி இல்லை என கூறினார். இப்போது, மரணம் அடைந்துள்ளார் என புகார் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் உடல் புதைக்கப்பட்டுவிட்டது. உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததில் கொலை உறுதியானது.
விசாரணையில் சௌம்யா குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சௌம்யா, திலீப், அபிஷேக் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூவர் உட்பட பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல், இன்சூரன்ஸ் பணம் ஆகியவற்றுக்காக நடத்தப்பட்ட இந்த கொடூர கொலை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணை தொடர்கிறது.
Summary in English : In Nizamabad, Telangana, a woman named Soumya and her colleague Dileep were arrested after her husband Ramesh died suddenly. Neighbors noticed marks on his neck, leading to suspicions. Police exhumed the body, conducted a post-mortem, and investigated. It was revealed that Soumya and Dileep planned the incident due to their close relationship. Three others were also arrested.

