2016-ல், அப்போது வெறும் 19 வயதான திவ்யா பாஹூஜா ஒரு அழகான, ஆசை நிறைந்த மாடலாக இருந்தாள். அவளுடைய வாழ்க்கை திருப்பம் பெற்றது, குருகிராமைச் சேர்ந்த கொடூர கேங்க்ஸ்டர் சந்தீப் காடோலி (Sandeep Gadoli) என்ற ஆபத்தான ஆளோடு காதல் தொடர்பு ஏற்பட்டபோது.
அவன் தலைமறைவாக இருந்தான். பல கொலைகள், பயங்கரவாத செயல்களில் பெயர் பெற்றவன். ஆனால் திவ்யாவுக்கு அவன் ஒரு காதலனாகத் தெரிந்தான்.

2016 பிப்ரவரி 6 அன்று, மும்பையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் (Airport Metro Hotel) இருவரும் தங்கியிருந்தனர். அங்கு ஹரியானா போலீஸ் அதிரடியாக உள்ளே நுழைந்து சந்தீப்பை சுட்டுக் கொன்றது.
இது ஒரு 'ஃபேக் என்கவுண்டர்' என்று பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், திவ்யா தான் சந்தீப்பின் இருப்பிடத்தை தன் தாய் சோனியா பாஹூஜா மூலம் ஒரு போட்டி கேங்க்ஸ்டர் குழுவுக்கு (பைண்டர் குஜ்ஜர் சகோதரர்கள்) தெரிவித்தாள் என்றும், அதனால் போலீஸ் அங்கு வந்து கொலை செய்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
திவ்யா சந்தீப்-ஐ காதலித்ததே அவனை உளவு பார்க்கத்தான். தன்னுடைய திட்டத்தை சரியாக நிறைவேற்றி விட்டால் திவ்யா என்று கூறப்பட்டது.
திவ்யா, அவள் தாய், ஐந்து போலீஸ் அதிகாரிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். திவ்யா 7 ஆண்டுகள் சிறையில் கழித்தாள். 2023 ஜூன் மாதம் பாம்பே உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. வெளியே வந்தவள் புது வாழ்க்கை தொடங்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் விதி வேறு திட்டம் வைத்திருந்தது.
2024 ஜனவரி 1 அன்று, புத்தாண்டு கொண்டாட்டத்தின் நடுவே, திவ்யா அபிஜீத் சிங் என்ற 56 வயது டெல்லி பிசினஸ்மேனை சந்தித்தாள். அபிஜீத் குருகிராமில் சிட்டி பாயிண்ட் ஹோட்டல் உரிமையாளர். இருவரும் அறிமுகமானது முந்தைய ஆண்டுகளில் இருந்து என்று சொல்லப்படுகிறது.
ஜனவரி 2 அன்று அதிகாலை 4 மணியளவில், திவ்யா, அபிஜீத் மற்றும் இன்னொரு நபர் ஹோட்டலுக்கு வந்தனர். அவர்கள் ரூம் எண் 111-க்கு சென்றனர். CCTV-யில் அந்தக் காட்சி பதிவாகியது.
மாலை 5-6 மணியளவில், அறைக்குள் என்ன நடந்ததோ... அபிஜீத் திவ்யாவை தலையில் சுட்டுக் கொன்றான் என்று போலீஸ் கூறுகிறது.
காரணம்? அபிஜீத் சொன்னது:
திவ்யா அபீஜீத்திடம் பழகிய போது, தனிமையில் நெருக்கமாக இருந்த போது எடுத்துக்கொண்ட அசிங்கமான புகைப்படங்கள்/வீடியோக்களை வைத்திருந்தாளாம். அதை வைத்து அவனிடம் பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தாளாம். இம்முறை பெரிய தொகை கேட்டதால், கோபத்தில் சுட்டு விட்டானாம். (ஆனால் திவ்யாவின் குடும்பம் இதை மறுக்கிறது.)
பிறகு, ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ் (28) மற்றும் ஓம்பிரகாஷ் (23) உதவியுடன், திவ்யாவின் உடலை ஒரு வெள்ளை துணியில் சுற்றி, ஹோட்டல் நடைபாதையில் இழுத்துச் சென்று, அபிஜீத்-ன் நீல நிற BMW காரில் போட்டார்கள். இந்தக் காட்சிகளும் CCTV-யில் பதிவாகியுள்ளன.
இரவு 10:45 மணியளவில் அவர்கள் காரை எடுத்து தப்பினர். அபிஜீத் தன் சில நண்பர்களுக்கு 10 லட்சம் கொடுத்து உடலை அழிக்க சொன்னான் என்று கூறப்படுகிறது. உடல் பின்னர் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள பாக்ரா கால்வாயில் வீசப்பட்டது.
ஜனவரி 3 அன்று திவ்யாவின் குடும்பம் (சகோதரி நைனா) போலீஸில் புகார் கொடுத்தனர். உடனடியாக குருகிராம் க்ரைம் பிரான்ச் அபிஜீத், ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகிய மூவரையும் கைது செய்தது.
பின்னர் மேலும் சிலர் (மேகா, பால்ராஜ் கில் போன்றோர்) கைது செய்யப்பட்டனர். சரியாக பத்து நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஜனவரி 13 அன்று உடல் கால்வாயில் இருந்து திவ்யாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
திவ்யாவின் குடும்பம் ஒரு வேறு கோணத்தை சொல்கிறது:
இது சந்தீப் காடோலியின் சகோதரி சுதேஷ் கடாரியா மற்றும் சகோதரர் பிரம்ம பிரகாஷ் ஆகியோர் அபிஜீத்துக்கு பணம் கொடுத்து திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டினர். ஏனெனில் திவ்யா அந்த பழைய வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தாள்.
இப்படி ஒரு கேங்க்ஸ்டர் காதல் → ஃபேக் என்கவுண்டர் → 7 வருட சிறை → பெயில் → பிளாக்மெயில் → கொலை என்று ஒரு இருண்ட, சினிமா போன்ற வாழ்க்கைச் சுழற்சியில் முடிவுக்கு வந்தது திவ்யா பாஹூஜாவின் கதை.
இன்றுவரை வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சில சாட்சிகள் கூட தங்கள் அறிக்கையை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கதை இன்னும் முழுமையாக முடியவில்லை.
Summary : A 27-year-old woman, Divya Pahuja, was found deceased under suspicious circumstances at a hotel in Gurugram on January 2, 2024. The hotel owner Abhijeet Singh and two staff members were arrested. CCTV footage showed events at the location. Her family filed a complaint linking it to past associations.

