கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில், அசோக் என்ற 33 வயது பொறியியல் கல்லூரி பேராசிரியரின் வாழ்க்கை புதிய தொடக்கத்தை எதிர்நோக்கியது.
கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி, கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான மிருதுளாவுடன் அவரது திருமணம் நடைபெற்றது. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். மணமக்கள் இருவரும் கனவுகளுடன் நிறைந்த மனதுடன் இருந்தனர்.

டிசம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, சாந்தி முகூர்த்தம் முடிந்தது. டிசம்பர் 14-ஆம் தேதி விடியற்காலை, முதல் இரவு அறையில் அசோக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த இரவில் நடந்தது...
பால் சொம்புடன் மிருதுளா அறைக்குள் நுழைந்தாள். இருவரும் சிறிது நேரம் பேசினர். பின்னர், அசோக் மிருதுளாவின் மார்புப் பகுதியில் தீக்காயம் போன்ற தழும்புகளை கவனித்தார். விளக்கை போட்டு பார்த்தபோது, அது லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்ட ஒரு டாட்டூவின் தடயம் என்பது தெரிந்தது.
அந்த டாட்டூவில் எழுதப்பட்டிருந்தது: "Love Vino".
அசோக் அதிர்ந்து போனார். "இது என்ன? யார் இந்த வினோ? திருமண பேச்சு முடிவான மூன்று மாதங்களாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதை ஏன் சொல்லவில்லை?" என்று கேட்டார்.
மிருதுளா குழப்பமான பதில்களை அளித்தாள். "அது பெயர் இல்லை... ஒரு பொம்மை... பிடிக்கவில்லை என்பதால் அழித்துவிட்டேன்" என்று திரும்பத் திரும்பச் சொன்னாள். ஆனால் அசோக் நம்பவில்லை. கோபம் உச்சத்தைத் தொட்டது.
நள்ளிரவில் அவர் மிருதுளாவின் பெற்றோர்களை அழைத்தார். "உண்மையைச் சொல்லுங்கள்!" என்று கத்தினார்.
மிருதுளாவின் பெற்றோர்கள் வெளிப்படுத்திய உண்மை அதிர்ச்சியளித்தது: "மிருதுளா வினோத் என்ற இளைஞனை காதலித்தாள். அவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டான். அதனால் அவன் பெயரை டாட்டூ செய்து வைத்திருந்தாள். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பே அவர்கள் பிரிந்துவிட்டனர்."
அசோக் கேட்டார்: "ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்திருந்தால், ஏன் அப்போதே பெயரை அழிக்கவில்லை..? இப்போது தான் லேசர் சிகிச்சை? ஏன் என்னிடம் சொல்லவில்லை?"
பதில் வரவில்லை. மிருதுளாவின் பெற்றோர்கள் மிரண்டனர்.
அசோக் தனது பெற்றோரையும் அழைத்து வரச் செய்தார். வீடு கலவரமானது. அனைவரும் வாதிட்டனர்.
அப்போது மிருதுளா சொன்ன ஒரு வார்த்தை அசோக்கின் இதயத்தில் ஈட்டியாக இறங்கியது:
"என்னுடைய பெற்றோரும் உண்மையைச் சொல்லிவிட்டார்கள். நானும் நடந்ததை சொல்லிவிட்டேன். ஆனால், இவர் என்னுடன் இருக்க முடியாமல் முதலிரவிலேயே பஞ்சாயத்து செய்கிறார். இவர் என் மேல் சந்தேகப்படுவதெல்லாம் இருக்கட்டும்.. இவர் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது... இவர் ஆண் தானா?.. பெண்கள் போல நோண்டி நோண்டி கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.. முதலிரவிலேயே இப்படி.. இதில் வாழ்க்கை முழுவதும் இவருடன்.. என்னால் நினைத்து கூட பாக்க முடியல.. என்று தடித்த வார்த்தைகளை வீசினார்"
அந்த வார்த்தை அசோக்கை உடைத்துவிட்டது. அவர் சடசடவென அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டார். வீடு முழுவதும் அலறல் எழுந்தது. அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டினர். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கதவு உடைக்கப்பட்டது.
உள்ளே... மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அசோக்கின் சடலம்.
ஊர் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. ஊடகங்கள் "முதல் இரவில் புது மாப்பிள்ளை தற்கொலை" என்று செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த செய்தியின் பின்னால் இருந்த கொடூர உண்மை இதுதான்.
இந்த சோகத்தில் யார் தவறு செய்தார்கள்?
திருமணத்திற்கு முன்பு தனது காதல் வரலாற்றை மறைத்த மிருதுளா? அல்லது, அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல், முதல் இரவிலேயே பஞ்சாயத்து செய்து உயிரை மாய்த்த அசோக்?
இரு குடும்பங்களின் வலியும், வேதனையும் என்றும் மறக்க முடியாதவை. வாழ்க்கை எவ்வளவு நுட்பமானது என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
(இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலி கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)
Summary : On their wedding night in Krishnagiri district, a 33-year-old engineering college lecturer noticed a laser-removed tattoo on his 27-year-old bride revealing a past relationship. A heated discussion involving both families escalated into deep distress, leading to a tragic end for the groom the same night.

