சென்னை, ஜனவரி 6: தளபதி விஜய்யின் கடைசி படமான "ஜன நாயகன்" (ஜனவரி 9 ரிலீஸ்) மற்றும் சிவகார்த்திகேயனின் "பராசக்தி" (ஜனவரி 10 ரிலீஸ்) ஆகிய படங்களின் டிரெய்லர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால், இந்த டிரெய்லர் வாரில் ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது – பராசக்தி டிரெய்லரின் வியூஸ் போலியானவை என்ற குற்றச்சாட்டு!

பராசக்தி டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் "40 மில்லியனுக்கும் மேல் வியூஸ்" பெற்று, தமிழ் சினிமாவின் புதிய ரெக்கார்டை படைத்தது. இதனால், விஜய்யின் ஜன நாயகன் டிரெய்லரின் 34.4 மில்லியன் வியூஸ் ரெக்கார்டை முந்தியது.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதை கொண்டாட, விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு எங்கேஜ்மெண்ட் ஃபோரென்சிக்ஸ் அட்டவணை" இந்த சர்ச்சையை தீவிரப்படுத்தியது. அதன்படி:

- பராசக்தி டிரெய்லருக்கு வியூஸ் 25-40 மில்லியன் இருந்தும், லைக்ஸ் வெறும் 2-3 லட்சம் மட்டுமே (நார்மல் ரேட் 3-6%க்கு பதில் 1.12% மட்டும் – கிரிட்டிகலி லோ!).
- கமெண்ட்ஸ் 11,000க்கும் குறைவு (நார்மல் 0.15-0.35%க்கு பதில் 0.043% – மிகக் குறைவு).
- லைக்ஸ்-டு-கமெண்ட்ஸ் ரேஷியோ 26:1 (நார்மல் 8-15:1க்கு பதில் அப்னார்மல்).
- வியூஸ் திடீரென ஸ்பைக் ஆகி, முதல் சில மணி நேரங்களில் குறைவாக இருந்து பின்னர் ஜாஸ்தியானது – இது "போட்ஸ் அல்லது பெய்ட் ஆட்ஸ்" (யூடியூப் ஆட்ஸ்) மூலம் வியூஸ் உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு.
இதற்கு எதிராக, ஜன நாயகன் டிரெய்லர் (எல்லா லாங்குவேஜும் சேர்த்து 83 மில்லியன்+ வியூஸ், 1.5 மில்லியன் லைக்ஸ்) இயற்கையான வைரலாக உயர்ந்தது – லைக் ரேட் 3.34%, கமெண்ட்ஸ் 84,000+, ரேஷியோ நார்மல் என்று அந்த அட்டவணை காட்டுகிறது.
நெட்டிசன்கள் பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்களின்படி, யூடியூப் ட்ரெண்டிங்கில் ஜன நாயகன் முதலிடத்தில் இருந்தும், பராசக்தி வியூஸ் அதிகம் என்ற முரண்பாடு "பெய்ட் ப்ரமோஷன்" சந்தேகத்தை எழுப்பியது.
சிலர் யூடியூப்பை டேக் செய்து விசாரணை கோரியுள்ளனர்.பராசக்தி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய பீரியட் பாலிடிகல் டிராமா, 1960களின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை மையப்படுத்தியது.
ஜன நாயகன் விஜய்யின் அரசியல் நுழைவுக்கு ஏற்ற பாலிடிகல் ஆக்ஷன் திரில்லர். ரெண்டு படங்களும் அரசியல் தொடர்புடையவை என்பதால், இந்த டிரெய்லர் வார் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.
இரு படங்களும் வெற்றி பெற வாழ்த்துகள்! பொங்கல் திரையரங்குகளில் யார் ஜெயிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Summary in English : The trailers for Vijay's Jana Nayagan and Sivakarthikeyan's Parasakthi, releasing during Pongal 2026, have sparked discussions. Parasakthi gained higher views quickly, but an engagement analysis shows lower likes and comments compared to industry norms, raising questions about organic reach. Jana Nayagan displays normal engagement patterns.

