தி.மு.க. மாணவரணி பெண்களுக்கு கொடூர பாலியல் தொல்லை! 35 பெண்கள் கொடுத்த காது கூசும் புகார்!

சென்னை, மார்ச் 15, 2026 – திமுகவின் மாணவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, திடீரென அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக, ஈரோட்டைச் சேர்ந்த ஜெ. வீரமணி மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது திமுக மாணவரணி வரலாற்றில் செயலாளர் பதவியை ஏற்கும் முதல் பெண் நிர்வாகி என்ற சாதனையை வீரமணி பெற்றுள்ளது.

ராஜீவ் காந்தி, முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர். 2021-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இணைந்த உடனேயே கட்சியின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2022-இல் மாணவரணி தலைவராகவும், 2025-இல் மாணவரணி மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைப்பதில் அவர் முக்கிய பங்காற்றி வந்தார்.

சமீபத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைவதற்கு அவரது ஒருங்கிணைப்பு உதவியது. கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்த திடீர் மாற்றத்திற்கு காரணமாக, மாணவரணியில் உள்ள 35-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் ராஜீவ் காந்தி மீது பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாக புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்புகார்கள் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதியிடம் நேரடியாக அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புகார்களின் தீவிரத்தை உணர்ந்த கனிமொழி, உடனடியாக கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, முதலமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில் ராஜீவ் காந்தி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆளும் கட்சியின் முக்கிய அணியான மாணவரணியின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் பாலியல் தொல்லை புகாரில் சிக்கியது கட்சித் தலைமைக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பதவியிலிருந்து விடுவித்து வேறு பொறுப்புக்கு மாற்றியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும், கட்சியின் மகளிர் மத்தியிலான பிம்பத்தை சரிசெய்யும் வகையிலும், ஒரு பெண்ணை (வீரமணி) அந்த பொறுப்பில் நியமித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராஜீவ் காந்தி தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில், “தமிழ், தமிழர், திராவிடம், மதச்சார்பின்மை, சமூகநீதி என்னும் கொள்கை வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் அரசியல் அரணாக நிற்கும் கழகத்தில் கொள்கை பரப்பு என்னும் மாபெரும் அணியின் இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கிய தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திசை எங்கும் பரப்புவோம் திராவிட அரசியல்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து முன்னணி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது மேலும் விளக்கங்கள் வெளியாகவில்லை. ஆனால், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு ராஜீவ் காந்தி விளக்கமளித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் மாற்றுக் கருத்து இருப்பின் கொள்கை ரீதியில் விவாதிக்கலாம், சண்டையிடலாம். ஆனால், என்னை வீழ்த்த இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பொய் செய்தியை 10 டாலர் கிரிப்டோ செலுத்தி உருவாக்கும் அளவிற்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு தானே தவிர அழிவிற்கு அல்ல. 

யாருக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வந்து கொலை கூட செய்யுங்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை வாரி வீசி வீழ்ந்த நினைப்பது அதைவிட கொடூரமானது.

இதை எல்லாம் வைத்து யார் பேசியமாதிரியும் உருவாக்கலாம் . நான் ஒருபோதும் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை .யார் ஒருவரையும் இப்படி வீழ்த்தி மகிழ நினைப்பது கேவலம்.இந்த அவதூறு என்னை வீழ்த்தாது தொடர்ந்து ஒலிக்கும் என் பெருங்குரல்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமை இதுபோன்ற புகார்களை தீவிரமாக கையாள்வது கட்சியின் பெண்கள் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பது அரசியல் விமர்சகர்களிடையே விவாதமாக உள்ளது.

Summary : DMK's Student Wing State Secretary Rajiv Gandhi has been removed from his position and reassigned as Co-Secretary for Policy Propagation. J. Veeramani, a woman leader, has been appointed as the new State Secretary. The change follows complaints received by senior party leadership from several women functionaries in the wing.