தி.மு.க. மாணவரணி பெண்களுக்கு கொடூர பாலியல் தொல்லை! 35 பெண்கள் கொடுத்த காது கூசும் புகார்!
சென்னை, மார்ச் 15, 2026 – திமுகவின் மாணவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, திடீரென அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, ஈரோட்டைச் சேர்ந்த ஜெ. வீரமணி மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது திமுக மாணவரணி வரலாற்றில் செயலாளர் பதவியை ஏற்கும் முதல் பெண் நிர்வாகி என்ற சாதனையை வீரமணி பெற்றுள்ளது. ராஜீவ் காந்தி, முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர். 2021-ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இணைந்த உடனேயே கட்சியின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2022-இல் மாணவரணி தலைவராகவும், 2025-இல் மாணவரணி மாநில செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைப்பதில் அவர் முக்கிய பங்காற்றி வந்தார். சமீபத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைவதற்கு அவரது ஒருங்கிணைப்பு உதவியது. கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் இந்த மாற்றம் நி...