“பின்பக்கம் வேணாம்..” ஆபாச படத்தில் வருவது போல வித்தியாசமான உடலுறவு.. துண்டு துண்டான உடல்.. பகீர் சம்பவம்!

கொல்கத்தா, ஏப்ரல் 17: ஒரு பெண்ணின் வாழ்க்கையில் காதல், துரோகம், பயம், பழி வாங்கும் எண்ணம் என எல்லாம் கலந்து ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது.

தன் கள்ளக்காதலனை தன் வீட்டுக்கு அழைத்து, அவன் கேட்டபடி அவனை கட்டிலில் நான்கு பக்கமும் கட்டிப் போட்டு, பிறகு அவன் மீது ஏறி அமர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை வீட்டின் செப்டிக் டேங்குக்குள் போட்டு சிமெண்ட் அடைத்து மூடிய இரு பெண்கள் – தாயும் மகளும் – இப்போது கொல்கத்தா போலீசாரின் கையில் சிக்கியுள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தெரிய வந்தபோது ஊரே அதிர்ந்து போனது.

இந்தக் கொடூரத்தின் மையத்தில் இருந்தவர் அனிதா (32). அவர் தன் கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, தன் தாய் மாலா (55) வீட்டில் தங்கி வந்தார். அந்த வீட்டுக்கு நேர் எதிரே அனிதாவின் மாமன் மகன் வினோத் (28) வசித்து வந்தான்.

இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் சாதாரண பழக்கம் தான். ஆனால், கணவனின் பிரிவின் துயரத்தில் இருந்த அனிதா, வினோத்துடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். விரைவில் அந்தப் பழக்கம் தகாத உறவாக மாறியது. ஆரம்பத்தில், அனிதாவும் அந்த உறவை ரசித்தார். “என் வாழ்க்கையில் இதுதான் ஒரே மகிழ்ச்சி” என்று அவர் வினோத்திடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது. பிரிந்து சென்ற கணவர் சுரேஷ் திடீரென மீண்டும் அனிதாவைத் தேடி வந்தார். மன்னிப்புக் கேட்டு, மீண்டும் ஒன்றாக வாழ முயன்றார். அனிதாவும் தன் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து சுரேஷுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். அந்த ஆறு மாதங்களில் அனிதா கர்ப்பமாகவும் ஆனார். வாழ்க்கை சற்று சீராகி வரும் நேரத்தில் வினோத் பிரச்னையைத் தொடங்கினான்.

“நீ உன் கணவருடன் இருந்து கொள். எனக்கு அதில் பிரச்னை இல்லை. ஆனால் அவ்வப்போது என்னைச் சந்திக்க வேண்டும். உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உன் கணவருக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன்” என்று மிரட்டத் தொடங்கினான் வினோத்.

அனிதா பயந்து போனார். தன் கள்ளக்காதல் விவகாரம் வெளியானால், கர்ப்பமாக இருக்கும் நிலையில் சுரேஷ் மீண்டும் பிரிந்து சென்றுவிடுவார் என்று அஞ்சினார். “என் கணவரும், என் குழந்தையும் என் பொறுப்பு. இந்த நேரத்தில் வினோத் என்னை அழிக்கக் கூடாது” என்று மனதுக்குள் தீர்மானித்தார்.

அதே நேரத்தில் வினோத்தின் தங்கை சுஜாதாவுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஊரே திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தது. வினோத் மட்டும் அனிதாவைத் தொடர்ந்து மிரட்டினான். “உன் கணவருக்கு புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பிவிடுவேன்” என்று அச்சுறுத்தினான்.

அனிதா தன் தாய் மாலாவிடம் ஆலோசனை கேட்டார். இருவரும் முடிவெடுத்தனர் – வினோத்தை ஒழிக்க வேண்டும். திட்டம் தயாரானது.

ஆபாச படத்தில் வருவது போல..  

ஒரு நாள் அனிதா வினோத்துக்கு போன் செய்தார். “வா, உன் ஆசைப்படி உல்லாசமாக இருக்கலாம்” என்று அழைத்தார். வினோத் உற்சாகத்துடன் வந்தான். வீட்டுக்குள் நுழைந்ததும், “ஒரு ஆபாசப் படத்தில் பார்த்தேன். உன் கை கால்களை கட்டிலில் நான்கு முனைகளிலும் கட்டி, உன் மீது ஏறி உல்லாசமாக இருக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை” என்றான்.

அனிதா மறுப்பேதும் சொல்லவில்லை. சம்மதம் தெரிவித்தார். வினோத் தன் உடைகளைக் களைந்து கட்டிலில் படுத்தான். அனிதா அவனுடைய கைகளையும் கால்களையும் உறுதியாகக் கட்டினார். வினோத் கண்களை மூடி மகிழ்ச்சியில் இருந்தான். அப்போது அனிதா அவன் மீது ஏறி அமர்ந்தார். இரு கைகளாலும் அவன் கழுத்தை இறுக்கப் பிடித்து நெரித்தார். வினோத் திமிறினான். ஆனால் கட்டப்பட்ட நிலையில் எதுவும் செய்ய முடியவில்லை. சில நிமிடங்களில் அவன் உயிர் பிரிந்தது.

“பின்பக்கம் வேணாம்..”  

அனிதாவின் தாய் மாலா அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். கொலை முடிந்ததும் இருவரும் உடலை எப்படி மறைப்பது என்று யோசித்தனர். வீட்டின் பின் பக்கம் குழி தோண்டி மறைந்த முயன்றனர். ஆனால் “இப்போது, நம்மால் ஆழமாகத் தோண்ட முடியாது. கல்யாண வீட்டுக்காரங்க அங்கயும் இங்கயும் போயிகிட்டு வந்துகிட்டு இருக்காங்க.. குறைவான ஆழம் தோண்டினால், நாய் பறித்துவிடும்.. விரைவில் துர்நாற்றம் வீசும்.. பின்பக்கம் வேணாம்..” என்று அனிதா சொன்னார். 

உடனே அவர்கள் வீட்டின் வெளியே இருந்த செப்டிக் டேங்கின் மூடியைத் திறந்தனர். உடலை உள்ளே தள்ளினர். மறுநாள் சிமெண்ட் கலவை கொண்டு மூடியை முழுமையாக அடைத்தனர்.

அடுத்த நாளே சுஜாதாவின் திருமண விழா தொடங்கியது. “எங்கே வினோத்? மணமகளின் அண்ணன் எங்கே?” என்று ஊரே தேடியது. ஆனால் அனிதாவும் மாலாவும் எதுவும் தெரியாதது போல் நடந்து, திருமணத்துக்கு சென்று மொய் எழுதினர். பிறகு அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஊருக்குச் சென்று செட்டில் ஆனார்கள்.

மூன்று பிறகு அந்த வீட்டுக்கு புதிய குடும்பம் வந்தது. வீட்டின் உரிமையாளர் ராமகிருஷ்ணன். புதியவர்கள் “கழிவறையில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசுகிறது. என்ன செய்தாலும் போகவில்லை” என்று தொடர்ந்து புகார் செய்தனர். ராமகிருஷ்ணன் முதலில் தட்டிக் கழித்தார். “வீடு கட்டி இரண்டு வருடம்தான் ஆகிறது. இன்னும் ஒரு வருடம் கழித்து சுத்தம் செய்யலாம்” என்றார்.

துண்டு துண்டான உடல்.. 

இரண்டு மாதம் கழித்து, ஒரு நாள் அவர் தானே கழிவறைக்குச் சென்றபோது துர்நாற்றம் தாங்க முடியவில்லை. உடனடியாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழிலாளர்களை வரவழைத்தார். மூடியைத் திறந்ததும் அதிர்ச்சி! மனித மண்டை ஓடும், எலும்புக்கூடுகளும் துண்டு துண்டாக மிதந்தன. உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் எதிர் வீட்டில் வசித்த வினோத் காணாமல் போன புகார் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. ஊரார் சிலர் “அனிதாவும் வினோத்தும் தகாத தொடர்பில் இருந்தனர்” என்று சொன்னதால் போலீசார் அனிதாவைத் தேடி சென்றனர். அனிதாவும் மாலாவும் வேறு ஊரில் இருந்தாலும் விரைவில் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இருவரும் முழு உண்மையையும் ஒப்புக்கொண்டனர். “என் வாழ்க்கையை அவன் அழித்துவிடுவான் என்று பயந்தேன். என் கணவரும் குழந்தையும் எனக்கு முக்கியம். அதனால்தான் திட்டமிட்டு கொலை செய்தோம்” என்று அனிதா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

தாயும் மகளும் தற்போது கொல்கத்தா போலீச் காவலில் உள்ளனர். வழக்கு கொலை, சடலத்தை மறைத்தல், சதி ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் கொல்கத்தா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Kolkata, a woman living with her mother had a close relationship with her cousin. After reuniting with her husband and becoming pregnant, the cousin continued to contact her. She invited him home, tied his hands and legs as per his wish, and later the body was placed in the septic tank. The mother helped in the process. They attended a family wedding before moving away. A year later, bones were found during tank cleaning, leading to their arrest.