மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் BPO அலுவலகம் இப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 150 பேர் பணியாற்றும் இந்த சிறிய அலுவலகத்தில், இளம் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லை, மிரட்டல், இந்து கடவுள்களை அவமதித்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் ஆகியவை வெளியே வந்துள்ளன.

இதுவரை 9 FIR-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தின் மையத்தில் இருப்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
அவர்தான் நிடா கான் (Nida Khan)!
ஆனால், தமிழக ஊடங்கள் இதை பற்றி மூச்சு கூட விடவில்லை. இந்த விவகாரத்தை அப்படியே இருட்டடிப்பு செய்துள்ளன என்பது தான் உண்மை.
யார் இந்த நிடா கான்?
TCS நாசிக் BPO அலுவலகத்தில் மனிதவளத் துறை (HR) மேலாளராக (AGM பதவி) பணியாற்றியவர் நிடா கான். பெண் ஊழியர்களின் புகார்களை கையாள்வது, POSH (பாலியல் தொல்லைத் தடுப்பு) விதிமுறைகளை அமல்படுத்துவது போன்ற முக்கிய பொறுப்புகள் அவரிடம் இருந்தன.
ஆனால், போலீஸ் விசாரணையின்படி, அவர் தான் இந்த சம்பவங்களுக்கு முக்கிய உடந்தையாகவும், இணைப்புப் புள்ளியாகவும் செயல்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.புகார்களின்படி:
- நிடா கான் இளம் இந்து பெண் ஊழியர்களை அறிமுகப்படுத்தி, சில குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆண் ஊழியர்களுடன் (பெரும்பாலும் முஸ்லீம் டீம் லீடர்கள்) நட்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
- புகார்களை மறைத்தல், பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி வழக்கை மேலே எடுக்க விடாமல் தடுத்தல், POSH கமிட்டியில் செயல்படாமல் இருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது உள்ளன.
- சில பெண்கள் தனியாக ரூஃப்டாப்பில் வேலை செய்ய வைக்கப்பட்டு, போன் பறிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவர்களை மதமாற்றத்துக்கு தயார் செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
- இந்து கடவுள்களை திட்டுதல், வலுக்கட்டையாமகா தொழுகை செய்ய வற்புறுத்தல், அசைவ உணவு உண்ண வைத்தல் போன்ற கொடுமைகளையும் செய்துள்ளார் போன்ற கொடூரங்கள் புகார்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவங்கள் 4 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. SIT (சிறப்பு விசாரணைக் குழு) அமைக்கப்பட்டு வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
நிடா கான் தலைமறைவாக உள்ளார். அவர் Anticipatory Bail கோரி நீதிமன்றத்தை அணுகியதாகவும் தகவல்கள் வருகின்றன.
TCS நிறுவனம் இதுவரை "ஜீரோ டாலரன்ஸ்" கொள்கையை வலியுறுத்தி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், HR துறையின் தோல்வி மற்றும் உள் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பலவீனம் குறித்து பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் IT துறையில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு, மத அடிப்படையிலான அச்சுறுத்தல் மற்றும் நிறுவனங்களின் உள் புகார் முறைமை ஆகியவற்றை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
நாசிக் போலீஸ் தீவிரமாக தேடி வரும் நிடா கானின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இது ஒரு தனி சம்பவமா? அல்லது கடலில் மூழ்கியுள்ள பெரிய பனிப்பாறையின் மேல் பகுதி மட்டும் தானா? விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை முழு உண்மை தெரியவராது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் இப்போது நாட்டையே உலுக்கியுள்ளது என்பது உண்மை.
கேரளா ஸ்டோரீஸ் படத்தை எதிர்த்த எந்த வாயும், இந்த நாசிக் ஸ்டோரீஸ் பற்றி பேசவில்லை. பேசுவார்களா..? பொறுத்திருந்து பார்ப்போமே...!
இந்தியாவில் பல பகுதிகளில் இது போன்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கலாம் தங்களுடைய குடும்ப சூழ்நிலை மற்றும் தனிப்பட்ட பொருளாதார தேவைகள் பாதிக்கப்படும் என்ற காரணத்திற்காக இது போன்ற கொடுமைகளை அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்யக்கூடியவர்கள் பொறுத்துக் கொண்டிருக்கலாம் அல்லது அவர்கள் சொல்வதைக் கேட்டு பின்பற்றி நடந்து கொண்டு இருக்கலாம்.

இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் விரோதமான செயல். எனவே, இந்த செய்தியை படிக்கக்கூடிய நீங்கள் அல்லது உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் இதுபோன்ற மதமாற்றம் மற்றும் மாற்று மதத்தினரினுடைய பழக்கவழக்கங்களை கட்டாயப்படுத்தி பின்பற்ற சொல்லுவது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் நீங்கள் தனித்து விடப்பட்ட உணர்வு வேண்டாம். உங்களுக்காக பல்வேறு ஹிந்து அமைப்புகள் உதவ காத்திருக்கின்றன.
எனவே, உடனடியாக, இந்து மக்களின் நலனுக்காகவும், அவர்களின் மரபு மற்றும் வாழ்வியல் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்க கூடிய இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத் போன்ற ஹிந்து இயக்கங்களின் உதவியை நீங்கள் நாடியே ஆக வேண்டும்.
அப்படி அணுகும் போது உங்களிடம் போதுமான ஆதாரங்கள் கைவசம் இருக்க வேண்டும். நீங்கள் இப்படியாக மதரீதியில் துன்புறுத்தப்படுகிறீர்கள், மாற்று மத சடங்குகளை பின்பற்ற வேண்டும் போன்ற விஷயங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள் என்பதை நிரூபிக்கும் விதமான புகைப்படம் வீடியோ அல்லது ஆடியோ ஆதாரங்களை ஹிந்து இயக்க பொறுப்பாளர்களிடம் நீங்கள் காட்டினால் அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக நின்று சட்டப்பூர்வமாக இது போன்ற சிக்கல்களில் இருந்து உங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உங்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
Summary in English : A case has come to light at the TCS BPO unit in Nashik involving multiple women employees. Nida Khan, who worked in the human resources team, has been named as a key person in the complaints. She is currently not traceable and police are searching for her. Several others have been taken into custody as part of the ongoing probe. The company has stated it is cooperating fully with authorities.

