ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தணிகைபோளூர் ஏரியில் கடந்த 5-ம் தேதி அடையாளம் தெரியாத நிலையில் ஒரு இளைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு பெண் உட்பட மூன்று பேரை அரக்கோணம் தாலூகா போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் என்ன?
அரக்கோணம் தாலூகா போலீசார் தகவலின்படி, தணிகைபோளூர் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட உடலை மீட்டு வழக்கு பதிவு செய்தனர்.
பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இளைஞர் யார் என்பதை கண்டறிய விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், இறந்தவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூர் பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (எ) சின்னா (23) என்பது தெரியவந்தது. அவர் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
காரணம் என்ன?
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் கள்ளத் தொடர்பு தொடர்பான பிரச்னையால் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்களாக அரக்கோணம் அருகே கீழாந்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (39) மற்றும் அவரது மனைவி கவிதா (35), பி.டி.புதூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனஸ்ட் (33) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் தெரிய வந்த விவரங்கள்:
சங்கர் மற்றும் கவிதா தம்பதியினர் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹேமநாதன் அவர்களுடன் கட்டிட வேலைக்காக வந்தபோது, கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நெருக்கம் அதிகரித்துள்ளது. இதை அறிந்த சங்கர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஆட்டோ ஓட்டுனர் ஆனஸ்ட்டும் கவிதாவும் ஒரு கட்டத்தில் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர், ஹேமநாதன் மற்றும் ஆனஸ்ட் இருவரும் அடிக்கடி கவிதாவின் வீட்டிற்கு சென்று வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதாவது, ஒரே நேரத்தில் கணவன், ஹேமநாதன், ஆட்டோ ஓட்டுனர் ஆனஸ்ட் என மூன்று பேருடன் உல்லாச வாழ்க்கை வாழ்துள்ளார் கவிதா.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு ஹேமநாதன் கவிதாவின் வீட்டிற்கு வந்து அதிக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சங்கர் ஹேமநாதனை சமாதானப்படுத்தி ஆனஸ்ட்டின் ஆட்டோவில் அழைத்துச் சென்று தணிகைபோளூர் ஏரிக்கரையில் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்துக்குப் பிறகு மூவரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் நடவடிக்கை:
அரக்கோணம் தாலூகா போலீசார் சங்கர், கவிதா மற்றும் ஆனஸ்ட் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி, உருட்டுக் கட்டை மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். தனிப்படை அமைக்கப்பட்டு முழு விவரங்களும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவரங்கள் வெளியாகும் பட்சத்தில் தொடர்ந்து உங்களுக்கு பகிர்ந்து கொள்வோம்.
English Summary : In Arakkonam near Ranipet district, the body of a young man was recovered from Thanigaipolur lake on the 5th. Police investigation identified the deceased as Hemanathan alias Chinna (23), a tea master from Tiruvallur district. Three individuals — Shankar, his wife Kavitha, and auto driver Anasht — have been arrested in connection with the case.