ஒரே நேரத்தில் 3 பேருடன் 35 வயசு பெண்.. துடிதுடித்து இறந்த 23 வயது இளைஞன்.. இறுதியில் வெளியான அசிங்கம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தணிகைபோளூர் ஏரியில் கடந்த 5-ம் தேதி அடையாளம் தெரியாத நிலையில் ஒரு இளைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு பெண் உட்பட மூன்று பேரை அரக்கோணம் தாலூகா போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் என்ன? அரக்கோணம் தாலூகா போலீசார் தகவலின்படி, தணிகைபோளூர் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட உடலை மீட்டு வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இளைஞர் யார் என்பதை கண்டறிய விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், இறந்தவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூர் பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் (எ) சின்னா (23) என்பது தெரியவந்தது. அவர் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். காரணம் என்ன? காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் கள்ளத் தொடர்பு தொடர்பான பிரச்னையால் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களாக அரக்கோணம் அருகே கீழாந்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (39) மற்றும் அவரது மனைவி கவிதா (35), பி.டி.புதூரைச...