சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு மலை வாசஸ்தலத்தில் இயங்கும் தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண் ஒருவர் அவலமான நிலையில் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது. தோழியுடன் தங்கியிருந்த அந்தப் பெண், அடுத்த இரு நாட்களில் அறையில் உயிரற்றுக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணை தொடங்கியதும் வெளியான தகவல்கள், காதல், சந்தேகம், பழிவாங்கும் எண்ணம் ஆகியவை பின்னணியில் இருந்ததைக் காட்டின. சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் பெயர் அஞ்சலி. அவருடன் லாட்ஜுக்குச் சென்ற தோழி பிரியா. இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பிரியா, தன் வகுப்புத் தோழன் ராகுலைக் காதலித்து வந்தார். அதே நேரத்தில் அஞ்சலியும் ராகுலுடன் நெருக்கமாகப் பழகி வந்ததாக பிரியாவுக்குப் பின்னர் தெரிய வந்தது.
தோழியின் காதலன் என தெரிந்து, அஞ்சலி ராகுலுடன் சுற்றுலா செல்வதும், தனிமையில் நேரம் செலவிடுவதும், உல்லாசமாக இருந்ததும், பிரியாவைக் கோபப்படுத்தியது. நேரடியாகக் கேள்வி கேட்காமல், பொறுமையாகக் காத்திருந்து பழிவாங்கும் எண்ணத்தில் இருந்தார் பிரியா.
ராகுலின் தனிப்பட்ட செல்போனில் ராகுலுக்கே தெரியாமல் ஒரு தனி ரகசிய Folder ஒன்றை உருவாக்கி, புகைப்படங்களையும் காட்சிகளையும் சேமிக்கும் வகையில் அமைத்து வைத்திருந்தார் பிரியா.
இரண்டு மாதங்கள் கழித்து அந்தக் Folder-ஐ பார்த்தபோது, ராகுலும் அஞ்சலியும் தனிமையில் இருந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. அப்போதுதான் பிரியா முடிவு செய்தார். இருவரையும் ஒரே நேரத்தில் சிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதியானது.
“நான் தனியாகச் சுற்றுலா செல்ல நினைக்கிறேன். பாதுகாப்புக்காக நீயும் வா” என்று அஞ்சலியை அழைத்து, மலைப்பகுதியில் உள்ள அந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற பிறகு, அஞ்சலியின் செல்போனிலிருந்து அவளுக்குத் தெரியாமல் ராகுலுக்கு செய்தி அனுப்பினார்.
“நான் இந்த லாட்ஜில் தங்கியிருக்கிறேன். உடனே வா. இருவரும் நேரம் செலவிடலாம்” என்ற பொருளில் செய்தி சென்றது. ராகுல் உடனே தொலைபேசியில் அழைத்தபோது, பிரியா அஞ்சலியின் குரலில் பேசி, “சீக்கிரம் வா. இன்று இரவு நான் கிளம்பிவிடுவேன்” என்று கூறினார்.
ராகுலின் வீடு அந்த மலை வாசஸ்தலத்திற்கு அருகிலேயே இருந்தது. அரை மணி நேரத்தில் அவர் அந்த அறைக்கு வந்தார். ஆனால் உள்ளே அஞ்சலி உயிரற்றுக் கிடந்தார். அதிர்ச்சியடைந்த ராகுல் எதுவும் செய்யாமல் சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
விசாரணை தொடங்கியது. அறைக்குக் கடைசியாக வந்து சென்றவர் ராகுல் என்பதால் ஆரம்பத்தில் அவர் மீது சந்தேகம் சென்றது. ஆனால் அறையில் இரு பெண்கள் தங்கியிருந்த தகவல் கிடைத்ததும், இன்னொரு பெண் யார் என்று தேடியதில் பிரியாவின் பெயர் வந்தது.
அவரை அழைத்து விசாரித்தபோது, “ஆம், நான் அவருடன் தங்கியது உண்மை. வீட்டில் அவசரமாக வரச் சொன்னதால் நான் கிளம்பிவிட்டேன். அவர் மறுநாள் வருவதாகச் சொன்னார். நான் செல்லும்போது அவர் நன்றாகவே இருந்தார். எப்படி உயிரிழந்தார் என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்.
பின்னர் பிரியா, ராகுல் சிக்கியதை உணர்ந்ததும், அஞ்சலிக்கும் ராகுலுக்கும் இடையே எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காவல் நிலையத்தில் சமர்ப்பித்தார். இருவரும் காதலர்கள், இவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை நடந்திருக்கும் என கூறினார். அந்தப் புகைப்படங்கள் எப்படித் தனக்குக் கிடைத்தன என்று ராகுல் திகைத்தார்.
தான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார். பிரியா வழக்கறிஞருடன் காவல் நிலையம் வந்ததும், எல்லாம் திட்டமிட்டு நடந்தது என்பது தெளிவானது.
ராகுல் அறைக்குள் சென்று சுமார் பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்திருந்தார். உடனே வெளியே வந்திருந்தால் சந்தேகம் குறைவாக இருந்திருக்கும்.
ஆனால் அந்த நேர இடைவெளி விசாரணையை அவரை நோக்கித் திருப்பியது. ஒரு கட்டத்தில் ராகுல், “இந்தப் புகைப்படங்களைக் கொடுத்த பிரியா தான் என் முதல் காதலி"
அவளைத்தான் திருமணம் செய்துகொள்ள நினைத்திருந்தேன். இப்போது இவளும் எனக்கும் இடையே நெருக்கம் இருப்பதாகக் காட்டி இந்தப் புகைப்படங்களைக் கொடுத்திருக்கிறாள்” என்று கூறினார்.
விசாரணை விரிவடைந்தது. பிரியா இந்த நபரைச் சிக்க வைக்கும் நோக்கில் ஏதேனும் செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. இறுதியில் பிரியா ஒப்புக்கொண்டார். “ராகுல் எனக்குத் துரோகம் செய்தார். இவரைச் சிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
எனக்குத் துரோகம் செய்த தோழியையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நினைத்தேன். அவளுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அதிகமாக மது அருந்த வைத்து மயங்கிய நிலையில் உயிரைப் பறித்தேன். பிறகு அவளுடைய செல்போனிலிருந்து ராகுலை அழைத்து அங்கே வரவைத்து சிக்க வைத்தேன்” என்று கூறினார்.
ஆனாலும், பிரியா எதோ ஒரு விஷயத்தை மறைக்கிறாள் என்பதை காவல் துறை நம்பியது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், பல பகீர் தகவல்கள் வெளியாகின, அஞ்சலி உயிரிழந்து கிடந்த போது அருகில் செயற்கை ஆணுறுப்பு இருந்தது. இதற்கு என்ன காரணம்? என்று கேட்டனர்.
பிரியா இந்த கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை. ஆரம்பத்தில் எனக்கு தெரியாது, அது அவள் பயன்படுத்தும் பொருள் என முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாள். காவல் துறையினர், தங்கள் பாணியில் விசாரணையை முன்னெடுக்க, மிரண்டு போன பிரியா கூறிய தகவல் ஒட்டு மொத்த வழக்கையும் திசை திருப்பியது.
ஆம், பிரியாவும், அஞ்சலியும் ஓரினச்சேர்க்கையாளர்கள். இருவரும் அடிக்கடி தனியார் லாட்ஜ்களில் தங்கி உல்லாசமாக இருப்பது வாடிக்கை. இப்படித்தான் அன்றும் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். சுற்றுலா செல்கிறேன், துணைக்கு நீயும் வா என்று அழைத்ததாக கூறியவை அனைத்து பொய். அதே சமயம், பிரியா ராகுலையும் காதலித்து வந்திருக்கிறாள்.
உன்னுடைய காதலன் எனக்கும் காதலன் தான் என்று அஞ்சலி ராகுலுடனும் பழகி வந்திருக்கிறாள். இதை விரும்பாத பிரியா அஞ்சலியை தீர்த்துகட்ட திட்டமிட்டு இந்த கொடூர செயலை அரங்கேற்றியுள்ளார் என்பது தெரிய வந்தது. தற்போது பிரியா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல், நம்பிக்கை, பழிவாங்கும் எண்ணம் ஆகியவை எப்படி ஒரு உயிரைப் பறித்து, பலரைச் சிக்க வைத்தன என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.
Summary in English : A young woman who stayed with a friend at a Chhattisgarh hill lodge was found lifeless. Probe revealed a love triangle. The friend took her there after learning of closeness with her partner, made her drink, then called the man to trap him. She is in custody. Inquiry continues.