நடுக்காட்டில் நிர்வாணமான காதலனுடன் உல்லாசம்.. சட்டென திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

✦ ஆன்மிகம்   •  

மேற்கு வங்கம், ஜார்கிராம் மாவட்டம். அடர்ந்த சால் காடுகளுக்கு நடுவே, ஆள் அரவம் இல்லாத ஒரு தனியார் நிலப்பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று காவல் துறையினரை அதிர வைத்துள்ளது. இருபத்தாறு வயதான அனன்யா பானர்ஜி, தனது காதலன் சுமன் தாஸ் உடன் கடந்த நான்கு ஆண்டுகளாக அடிக்கடி சந்தித்து வந்த இடம் அது.

வழக்கம்போல அன்று மாலையும் இருவரும் அங்கு சென்றனர். சுற்றிலும் மரங்கள் மட்டுமே. யாரும் வர வாய்ப்பில்லாத இடம், இருவரும் வழக்கம் போல மது அருந்தினர். சிறிது நேரத்தில் போதை ஏறியது. வழக்கம்போல ஆடைகளை அவிழ்த்து, நெருக்கமாக உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.

அப்போது திடீரென ஒரு இருமல் சத்தம் கேட்டது. அனன்யா திடுக்கிட்டுத் திரும்பினார். மரங்களுக்குப் பின்னால் டி-ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்த ஒரு இளைஞர் மறைந்திருப்பதைக் கண்டார். கையில் செல்போன். பதிவு செய்து கொண்டிருந்தார். அதிர்ச்சியில் உறைந்து போன அனன்யா உடனே ஆடைகளை அணிந்து கொண்டார்.

சுமனைப் பார்த்து, “இவன் உன் நண்பன் போலத் தெரிகிறானே” என்று கேட்டார். சுமன் ஒரு கணம் வாயடைத்து நின்றான். அடுத்த சில வினாடிகளில் அவன் முகம் மாறியது. ஏதோ தவறு நடக்கப் போகிறது என்பதை உள்ளூர உணர்ந்த அனன்யா, தன் செல்போனை எடுத்து உறவினர் ஒருவருக்கு “எனக்கு உதவி வேண்டும்” என்று செய்தி அனுப்பி, லைவ் லொகேஷனையும் பகிர்ந்தார்.

அதைக் கவனித்த சுமனும் அவன் நண்பன் பர்த்தா மண்டலும் உடனே போனைப் பிடுங்கினர். “யாருக்கும் போன் செய்யக்கூடாது” என்று கடுமையாகச் கூறினர். அதன் பிறகு நடந்தது அனன்யா கனவிலும் எதிர்பாராத துரோகம். இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கினர். ஏற்கனவே மது போதையில் மயக்கமடைந்த அனன்யா அங்கேயே பேச்சு மூச்சின்றி தவித்தார்.

விசாரணையில் வெளியான பின்னணி இன்னும் அதிர்ச்சியானது. அனன்யாவும் சுமனும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்தக் காலத்தில் அனன்யா, தன் அண்ணனிடம் இருந்து வாங்கி சுமனுக்கு சிறுகச் சிறுகப் பண உதவி செய்து வந்தார். மொத்தம் பத்து லட்சத்துக்கு மேல். “இப்போது கொடுத்துவிடுகிறேன், அப்போது கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிச் சொல்லி வாங்கிக் கொண்டிருந்தான் சுமன்.

அந்தப் பணம் முழுவதும் அண்ணனிடம் கடன். திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அனன்யா அடிக்கடி வற்புறுத்தி வந்தார். “நான் முடிந்தவரை உதவி செய்கிறேன். நீயும் உதவி செய்தால் இந்தப் பத்து லட்சத்தையும் சேர்த்து அண்ணனிடம் கொடுத்துவிடலாம்” என்று பல முறை சொல்லியிருக்கிறார்.

இந்தத் தொல்லையில் இருந்து தப்பிக்க சுமன் ஒரு திட்டம் தீட்டினான். இருவரும் உல்லாசமாக இருக்கும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து, அதை வைத்து அனன்யாவை மிரட்டி, பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தப்பித்துவிடலாம் என்று நினைத்தான். அதற்காகத் தன் நண்பன் பர்த்தாவை முன்கூட்டியே அந்த இடத்துக்கு வரவைத்து, மறைந்திருந்து பதிவு செய்யச் சொல்லியிருந்தான்.

விசாரணையில் இன்னொரு விவகாரமும் வெளியானது. சுமனும் பர்த்தாவும் தங்களுக்குள் ஒரு கொடூரப் பழக்கத்தை வைத்திருந்தனர். ஒருவர் தன் காதலியுடன் அந்தக் காட்டுப் பகுதிக்குச் செல்லும்போது, மற்றவரை மறைந்திருந்து பார்க்க வைப்பது வழக்கம்.

பர்த்தா தன் காதலியுடன் வரும்போது சுமனை அழைத்து ரசிக்கச் சொல்வான். சுமன் அனன்யாவுடன் இருக்கும்போது பர்த்தாவை அழைத்துப் பார்க்கச் சொல்வான். இப்படியான பழக்கம் இருவருக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

அனன்யா அனுப்பிய லைவ் லொகேஷன் சமயோசிதமாக வேலை செய்தது. உறவினர் உடனே காவல் துறையினருடன் அந்தப் பகுதிக்கு விரைந்தார். சில நிமிடங்களில் சுமன் தாஸ், பர்த்தா மண்டல் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மயக்கத்தில் கிடந்த அனன்யா ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு நிலை தேறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜார்கிராம் காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடி, அச்சுறுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பதிவு செய்யப்பட்ட வீடியோ காவல் துறையினர் வசமாகியுள்ளது. அனன்யா கொடுத்த பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் குறித்த விவரங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணை தொடர்கிறது.

(இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. சம்பவம் நடந்த இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) 

Summary : A 26-year-old woman in a remote Jhargram forest, West Bengal, found a hidden man filming her private meeting with her partner. She sent her live location to a relative. Police arrived and detained both men. Probe revealed a plan to use the footage after she had given over Rs 10 lakh, borrowed from her brother, over four years.