மும்பை ஆந்தேரி மேற்கு பகுதியில் ஒரு சிறிய தனியார் கிளினிக். வெளியில் பார்த்தால் சாதாரண மருத்துவமனை. உள்ளே அதன் உரிமையாளர் டாக்டர் விக்ரம் மேத்தா, 48 வயது. திருமணமானவர்.
மனைவி அஞ்சலி, இரண்டு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள். நோயாளிகளிடம் மென்மையாகப் பேசுவார். இரவு வீட்டுக்குச் சென்றதும் குழந்தைகளுடன் உணவு அருந்துவார். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் ஒரு சிறிய விரிசல் விழுந்தது. அந்த விரிசல் பின்னர் ஒரு பெரிய குழியாக மாறியது.

சுவேதா ராவ். 32 வயது. கிளினிக்குக்கு முதலில் தலைவலிக்காக வந்தாள். பிறகு மீண்டும் வந்தாள். பிறகு அடிக்கடி வரத் தொடங்கினாள். சிகிச்சை முடிந்த பிறகும் சிறிது நேரம் அமர்ந்து பேசுவாள். விக்ரமும் பேசினார். சில வாரங்களில் அந்தப் பேச்சு தகாத உறவாக மாறியது. கிளினிக் மூடிய பிறகு சில சந்திப்புகள். ஹோட்டல் அறைகள். இரகசிய அழைப்புகள்.
சுவேதா ஒருநாள் நேரடியாகச் சொன்னாள்.
“என் தோழிகள் நேஹாவும், பிரியாவும் உங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். மூன்று பேரும் சேர்ந்து ஒரு இரவு உங்களுடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நீங்கள் சம்மதித்தால் நானும் வருவேன்.”
விக்ரமுக்கு அது ஆபத்தான ஆஃபர் போல் தோன்றவில்லை. “Buy 1 Get 2” என்று உள்ளே சிரித்துக் கொண்டார். சம்மதித்தார்.
ஒரு சனிக்கிழமை இரவு. ஆந்தேரிக்கு அருகில் ஒரு தனி வீட்டு அறை வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. நான்கு பேரும் உள்ளே சென்றனர். வெளியே சத்தம் இல்லை.
உள்ளே இரவு முழுவதும் நேரம் கழிந்தது. விக்ரம் அந்த இரவைத் தன் வாழ்க்கையின் மிகவும் சுதந்திரமான இரவாக நினைத்தார். விடியும் வரை யாரும் வெளியே வரவில்லை.
காலை 6:30. விக்ரம் கண்களைத் திறந்தார். அறை வெறிச்சோடி இருந்தது. மூன்று பெண்களும் இல்லை. மேசையில் ஒரு மொபைல் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு வீடியோ இயங்கியது. அந்தரங்கக் காட்சிகள். அதே அறை. அதே இரவு. கோணம் மாறி மாறி பதிவாகியிருந்தது.
அப்போது சுவேதாவின் அழைப்பு வந்தது.
“டாக்டர், நல்லா தூங்கினீங்களா? வீடியோ பார்த்தீங்களா? இது ஒன்றுதான் இல்லை. இன்னும் நிறைய இருக்கு. குடும்பத்துக்கு அனுப்புவோம். கிளினிக் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவோம். மருத்துவ சங்கத்துக்கு அனுப்புவோம். பணம் தரணும். இல்லையென்றால் இன்று மாலை முதல் உங்கள் பெயர் முழு மும்பையிலும் பரவும்.”
விக்ரத்தின் கை நடுங்கியது. “எவ்வளவு?”
“முதல்ல ஐந்து லட்சம். பிறகு பார்க்கலாம்.”
அன்றே ஐந்து லட்சம் சென்றது. மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அழைப்பு. “இன்னும் மூணு லட்சம்.” பிறகு “இரண்டு லட்சம்.” சிறுகச் சிறுக. மாதம் தவறாமல். சில சமயம் வாரம் இருமுறை. “வீடியோவை டெலிட் பண்ண மாட்டோம். நீ கொடுக்கிற வரைக்கும் எங்க கையிலதான் இருக்கும்.”
ஒரு வருடம் கடந்தது. விக்ரம் கணக்குப் பார்த்தார். 70 லட்சத்துக்கு மேல் போயிருந்தது. கிளினிக் வருமானம், சேமிப்பு, நகை அடகு, நண்பர்களிடம் கடன். எல்லாம் காலியானது. வீட்டில் சண்டை தொடங்கியது. அஞ்சலி கேட்டாள், “பணம் எங்கே போகுது? ஏன் இவ்வளவு அமைதியா இருக்கீங்க? ஏன் இரவு தூங்க மாட்றீங்க?”
விக்ரம் பதில் சொல்லவில்லை. முகம் வாடியது. உடைகள் தளர்ந்தன. கிளினிக்கில் கூட கவனம் குறைந்தது.
ஒரு ஞாயிறு மாலை. குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அஞ்சலி கதவை மூடினாள். விக்ரத்தை நாற்காலியில் அமர வைத்தாள்.
“நான் உங்களைப் பத்து வருஷமா பார்க்கிறேன். இப்போ பார்க்கிறேன் வேற ஆள். சொல்லுங்க. எதுவா இருந்தாலும் சேர்ந்து முடிப்போம். மறைச்சா தான் பெருசா ஆகும்.”
விக்ரம் சில நிமிடம் பேசவில்லை. பிறகு தலை குனிந்து அழுதார். முழுக் கதையையும் சொன்னார். சுவேதா. தோழிகள். அந்த இரவு. ரகசிய கேமரா. ஒரு வருட மிரட்டல். 70 லட்சம்.
அஞ்சலி அதிர்ச்சியில் உறைந்தாள். ஆனால் அழவில்லை. உடனே எழுந்தாள். தன் சித்தப்பா காவல் ஆய்வாளர் ரவி கட்கடேவை அழைத்தாள். ரவி மும்பை குற்றப்பிரிவில் பணிபுரிபவர்.
“அண்ணா, உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க.. எதுவும் கேட்காதிங்க.. விவரத்தை போனில் சொல்ல மாட்டேன். நேரில் சொல்கிறேன்.”
இரவு 9 மணிக்கு ரவி வீட்டுக்கு வந்தார். விக்ரமிடம் வாக்குமூலம் கேட்டார். மொபைல் செய்திகளைப் பார்த்தார். பணப் பரிவர்த்தனை பட்டியலைப் பார்த்தார். உடனே நடவடிக்கை.
அடுத்த 48 மணி நேரத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். சுவேதாவின் வீட்டில் இருந்து இரண்டு மொபைல்கள், ஒரு லேப்டாப், மெமரி கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
அதில் அந்தரங்க வீடியோக்கள் இருந்தன. பிரியாவின் அலமாரியில் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன. நேஹாவின் வங்கிக் கணக்கில் விக்ரம் அனுப்பிய பணத்தின் ஒரு பகுதி இருந்தது.
மூன்று பேர் மீதும் அந்தரங்கக் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல், மிரட்டிப் பணம் பறித்தல், மன உளைச்சல் ஏற்படுத்துதல், தொடர் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் தெரிந்தது: சுவேதா முதலில் தனியாகத் திட்டமிடவில்லை. நேஹாதான் ரகசிய கேமராவை வாங்கித் தந்தாள். பிரியா பணத்தைப் பிரித்து வைத்தாள். மூன்று பேரும் முன்பே இதே போன்ற இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விக்ரம் இப்போது கிளினிக்கைத் தற்காலிகமாக மூடியிருக்கிறார். குடும்பம் உடைந்து போகவில்லை. ஆனால், நம்பிக்கை உடைந்துள்ளது. அஞ்சலி ஒரு வார்த்தை சொன்னாள்:
“நீங்கள் தவறு செய்தீர்கள்.. அதனால் என் கணவர் இல்லை என்று ஆகிவிட மாட்டீர்கள். என்னிடம் உண்மையை மறைக்காமல் சொன்னதுக்கு நன்றி. ஆனால், அவர்கள் உங்களை வேட்டையாடினார்கள். இரண்டையும் சட்டம் பார்க்கும்.”
மும்பை மருத்துவ வட்டாரத்தில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இரகசிய உறவு எப்படி ஒரு முழுக் குடும்பத்தையும், சொத்தையும், மரியாதையையும் ஒரே இரவில் ஆபத்தில் தள்ளும் என்பதற்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கை.
தவறு செய்தவர் பதில் சொல்ல வேண்டும். மிரட்டி வாழ்பவர்கள் தப்பிக்க முடியாது.
Summary in English : A 48-year-old married Mumbai doctor had a secret relationship with a woman who later invited two friends for one night. Hidden cameras recorded the private moments. The three women collected Rs 70 lakh over a year. His wife informed her uncle, a police inspector. The women were arrested and jewellery worth Rs 30 lakh recovered.