நடிகை தர்ஷா குப்தா தனது தனிப்பட்ட வாழ்க்கையை முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இதுவரை சிங்கிளாகவே இருந்த அவர், தற்போது காதலனுடன் இருக்கும் இனிய தருணங்களைத் தானே பதிவேற்றத் தொடங்கியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

குக் வித் கோமாளி, பிக் பாஸ் தமிழ் 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்கள் மூலம் பிரபலமான தர்ஷா, இதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்குகளையும் ஸ்டைலான போட்டோஷூட்களையுமே அதிகம் பகிர்ந்து வந்தார்.
ரசிகர்கள் அவரை “சிங்கிள் கிளாமர் ஸ்டார்” என்றே பார்த்து வந்தனர். இந்த நிலையில் திடீரென வெளியான காதல் புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, காதலனின் மடியில் அமர்ந்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படங்களை நடிகையே தனது சொந்த பக்கத்தில் பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனிமையில் இருவரும் உல்லாசமாக நேரம் செலவிடும் தருணங்கள், இயல்பான புன்னகை மற்றும் நெருக்கமான போஸ்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
“இத்தனை நாட்களாக சிங்கிளாக இருந்தவர் இப்போது கமிட்டட் ஆகிவிட்டார் போல தெரிகிறது. இனி இருவரும் சேர்ந்து இன்னும் கிளுகிளுப்பான ட்ரீட்கள் கொடுப்பார்களோ” என்று ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சிலர் இதை “புதிய அத்தியாயம்” என்று பாராட்டியும், சிலர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
தர்ஷா இதுவரை தனது காதல் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசியதில்லை. முன்பு ஒரு பேட்டியில் நம்பிக்கை இல்லாத உறவை விரும்பாததாகக் கூறியிருந்தார்.

தற்போது அவரே இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டிருப்பதால், இது ஒரு தீவிரமான உறவாக இருக்கலாம் என்ற ஊகம் எழுந்துள்ளது. காதலனின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. தர்ஷாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், இருவரும் சேர்ந்து மேலும் எத்தகைய பதிவுகளை வெளியிடுவார்கள் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
Summary in English : Actress Dharsha Gupta has shared romantic photos with her partner that are spreading quickly online. Long known for solo glamour posts, she now appears committed. Fans are talking after seeing the close couple pictures she posted herself and hope both will share more joyful moments together.
